Header Logo
SLIC
வணிகம்
Allen & Heath டிஜிட்டல் ஓடியோ பயிற்சித் திட்டத்தை Multi Audio Visual வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது

May 27, 2026 - 05:07 PM

Allen & Heath டிஜிட்டல் ஓடியோ பயிற்சித் திட்டத்தை Multi Audio Visual வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது
Mobitel Inner 1278
EDEX Inner

உலகப் புகழ் பெற்ற Allen & Heath தயாரிப்புகளின் இலங்கைக்கான அங்கீகாரம் பெற்ற விநியோகஸ்தரான Multi Audio Visual Pvt Ltd நிறுவனம், அண்மையில் BMICH இல் ஒரு வெற்றிகரமான டிஜிட்டல் ஓடியோ பயிற்சித் திட்டத்தை (Digital Audio Training Programme) முன்னெடுத்திருந்தது. இந்தத் திட்டமானது உள்ளூர் ஓடியோ-விசுவல் (AV) துறையின் தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் தொழில்முறை தரங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. மேம்பட்ட டிஜிட்டல் கலவை தொழில்நுட்பத்தை (digital mixing technology) மையமாகக் கொண்ட இந்த விரிவான கற்றல் அனுபவ நிகழ்வில், நிகழ்வு தயாரிப்பு நிறுவனங்கள், ஒலிப் பொறியியலாளர்கள், இசை வல்லுநர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், Allen & Heath பயனர்கள் என பலரும் பங்குபற்றியிருந்தனர். 

Multi Group of Companies துணை நிறுவனங்களான Multi Audio Visual Pvt Ltd மற்றும் Multi Electronics ஆகியன, உலகளாவிய ரீதியில் புகழ்பெற்ற AV தீர்வுகளை இலங்கைக்கு அறிமுகப்படுத்துவதில் தொடர்ச்சியாக முக்கிய பங்கு வகித்து வருகின்றன. AV துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ள இந்நிறுவனம், தொழில்முறை ஓடியோ, மின்விளக்கு அமைப்பு, ஒருங்கிணைந்த AV தீர்வுகளில் நம்பகத்தன்மை, தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய சேவைகளுக்காக நற்பெயரை பெற்றுள்ளது. செயல்முறை விளக்கங்கள், நிஜ உலக ஓடியோ பயன்பாடுகள் மற்றும் தொழில்துறை நிபுணர்களுடனான நேரடித் தொடர்புகள் மூலம் பங்கேற்பாளர்களுக்கு Allen & Heath நிறுவனத்தின் digital mixing consoles தொடர்பான நடைமுறை ரீதியான அனுபவத்தை வழங்கும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டிருந்தது. நவீன டிஜிட்டல் ஒலி வலுவூட்டல் நுட்பங்கள் (digital sound reinforcement techniques) பற்றிய ஆழமான அறிவுகளை பெறவும், தொழில்முறை ஓடியோ தொழில்நுட்பத்தின் சமீபத்திய புத்தாக்கங்களை ஆராய்ந்து அறியவும் வருகை தந்திருந்தவர்களுக்கு இதன்போது வாய்ப்பு வழங்கப்பட்டது. 

தற்போதைய நவீன நிகழ்வுகள் மற்றும் நேரடி பொழுதுபோக்கு நிகழ்வுகளில் இன்றியமையாததாக மாறிவரும் நடைமுறை ரீதியான பணிகளை உகந்த வடிவில் அமைக்கவும் (workflow optimisation), டிஜிட்டல் மிக்ஸிங் திறன்கள், நேரடி ஒலி முகாமைத்துவம் மற்றும் மேம்பட்ட கன்சோல் அம்சங்கள் ஆகிய விடயங்கள் தொடர்பில் இங்கு கவனம் செலுத்தப்பட்டன. இந்தத் திட்டத்தின் நடைமுறை ரீதியான வடிவமானது, Allen & Heath தொகுதிகளின் செயல்திறன், நெகிழ்வுத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றை நேரடிப் பயன்பாட்டில் அனுபவிப்பதற்கான வாய்ப்பை பங்கேற்பாளர்களுக்கு வழங்கியது. 

இந்நிகழ்வில், மல்டி ஆடியோ விசுவல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பொது முகாமையாளர் திலங்க ரத்நாயக்க வரவேற்புரையை நிகழ்த்தினார். தொடர்ச்சியான வகையில் அறிவுப் பகிர்வு நிகழ்வுகள் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுத் திட்டங்களை முன்னெடுப்பதன் மூலம் உள்நாட்டின் தொழில்முறை ரீதியான AV துறையின் வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதில் நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை அவர் எடுத்துரைத்தார். 

மல்டி ஓடியோ விசுவல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திலக் அருணசிறி குறிப்பிடுகையில், 

“மல்டி ஓடியோ விசுவல் துறையில், உலகத்தரம் வாய்ந்த தயாரிப்புகளை மாத்திரம் வழங்குவது போதுமானது என நாம் நம்பவில்லை. இத்தகைய மேம்பட்ட அமைப்புகளின் திறன்களை முழுமையாகப் பயன்படுத்துவதற்கான தொழில்நுட்ப அறிவையும் நம்பிக்கையையும் தொழில்துறை வல்லுநர்கள் கொண்டிருப்பதை உறுதி செய்வதும் அதே அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இது போன்ற பயிற்சித் திட்டங்கள் மூலம், உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பம், தொழில்முறை நிபுணத்துவம் மற்றும் நம்பகமான ஆதரவுச் சேவைகளை நேரடியாக அணுகுவதற்கு வழிவகை செய்து, உள்ளூர் AV துறையை வலுப்படுத்துவதை நாம் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.” என்றார். 

Allen & Heath ஓடியோ பயிற்சித் திட்டத்தின் வெற்றிகரமான நிறைவானது, இத்துறையிலுள்ள நம்பகமான தொழில்துறை தலைவர் எனும் வகையில் மல்டி ஓடியோ விசுவல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிலையை மேலும் உறுதிப்படுத்துகிறது. தொழில்முறை ஓடியோ அறிவை மேம்படுத்துவதற்கும், இலங்கையின் நேரடி நிகழ்வுகள், பொழுதுபோக்கு மற்றும் ஒளிபரப்புத் துறைகளின் வளர்ந்து வரும் தேவைகளுக்கு ஆதரவளிப்பதற்கும் நிறுவனம் முழுமையாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது. கல்வி மற்றும் தொழில்துறை ஈடுபாடுகளில் தொடர்ச்சியாக முதலீடு செய்வதன் மூலம், சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட டிஜிட்டல் ஓடியோ தொழில்நுட்பத்தை உள்ளூர் சந்தைக்கு எளிதில் கிடைக்கக்கூடியதாகவும், தொழில்முறை ரீதியாக ஆதரிக்கப்படுவதாகவும் மாற்றுவதிலும் நிறுவனம் உறுதியாக உள்ளது.


MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278