May 28, 2026 - 02:14 PM -
0
ஹட்டன் ஃபோடைஸ் தோட்டத்திலுள்ள முன்பள்ளி ஒன்றின் மீது பைனஸ் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில், அதன் கூரைக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
நேற்று (27) இரவு 7.30 மணியளவில் அந்தத் தோட்டப் பகுதியில் நிலவிய கடும் மழை மற்றும் காற்று காரணமாகவே இந்த மரம் முறிந்து விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த அனர்த்தத்தினால் கூரை மட்டுமன்றி, முன்பள்ளி கட்டிடத்திற்கும் அங்குள்ள பல உபகரணங்களுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், முறிந்து விழுந்த பைனஸ் மரத்தை வெட்டி அகற்றும் பணிகளில் தோட்டத் தொழிலாளர்கள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

