Header Logo

செய்திகள்
களுத்துறை துப்பாக்கிச் சூடு - சந்தேகத்திற்கிடமான வேன் மீட்பு

May 28, 2026 - 03:33 PM -

0

களுத்துறை துப்பாக்கிச் சூடு - சந்தேகத்திற்கிடமான வேன் மீட்பு

களுத்துறை தெற்கு பகுதியில் இன்று (28) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் சந்தேகநபர்கள் பயணித்ததாகக் கருதப்படும் மேலும் ஒரு வாகனம், களுத்துறை - மத்துகம வீதியின் தொடங்கொட பகுதியில் கைவிடப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

இன்று பிற்பகல் வெள்ளை நிற சிறிய ரக வேன் (Van) ஒன்றே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த வேன், கொலைச் சம்பவத்திற்கு முன்னர் சந்தேகநபர்கள் வந்த வாகனம் என்றும், குறித்த வேனில் இருந்தே துப்பாக்கிதாரிகள் கார் ஒன்றுக்கு மாறியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. 

இன்று காலை களுத்துறை, வெட்டுமகடை பகுதியில் காரில் வந்த துப்பாக்கிதாரி ஒருவர், மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூட்டை நடத்தியிருந்தார். 

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததுடன், தப்பியோடிய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். 

அதற்கமைய, இச்சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரிகள் வந்த கார், தெபுவன - நேபட பகுதியில் கைவிடப்பட்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. 

தெபுவன, நேபட தபால் நிலையத்திற்கு அருகில் வைத்து அந்த கார் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். 

இவ்வாறானதொரு பின்னணியிலேயே, இந்த சம்பவத்துடன் தொடர்புடையது என சந்தேகிக்கப்படும் குறித்த வேனும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

MOST READ

காணொளி
மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

title