Header Logo

செய்திகள்
அரச எரிபொருள் மானியம் விரைவில் முடிவடையலாம் - IMF

May 28, 2026 - 07:57 PM -

0

அரச எரிபொருள் மானியம் விரைவில் முடிவடையலாம் - IMF

இலங்கைக்கு வழங்கப்படும் நீடிக்கப்பட்ட கடன் வசதியின் ஐந்தாவது மற்றும் ஆறாவது கட்ட மதிப்பாய்வுகளை நிறைவு செய்து, அதற்கான சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழுவின் குழுவின் அனுமதி இன்று (28) கிடைத்துள்ளது. 

இதன்படி, இலங்கைக்கு 695 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி கிடைக்கப்பெறவுள்ளது. இது குறித்த விபரங்களை தெளிவுபடுத்துவதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழு தலைவர் இவான் பாபஜோர்ஜியோ (Evan Papageorgiou) இன்று மாலை செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார். 

சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழு தலைவர் இவான் பாபஜோர்ஜியோ கூறுகையில்: 

சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழுவானது இலங்கைக்கான நீடிக்கப்பட்ட கடன் வசதியின் ஐந்தாவது மற்றும் ஆறாவது மதிப்பாய்வுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. 

இந்த முடிவின் மூலம் இலங்கைக்கு 695 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றுக்கொள்வதற்கான வழிவகை கிடைப்பதுடன், இந்தத் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ள மொத்த நிதியுதவி 2.4 பில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளது. 

கேள்வி : இலங்கையின் தற்போதைய நாணய மாற்று விகித நிலவரம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் எவ்வாறு பார்க்கிறது? நாணய மாற்று விகிதத்தை மிகவும் நெகிழ்வுத்தன்மையுடன் பேண வேண்டும் என்பதே இலங்கை மத்திய வங்கியிடம் IMF முன்வைத்த கோரிக்கையாகும். அவ்வாறாயின், எவ்வளவு காலத்திற்கு, எந்தளவிலான நெகிழ்வுத்தன்மையை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? 

பதில்: இலங்கை மத்திய வங்கியின் பணவியல் மற்றும் நாணய மாற்று விகிதக் கொள்கைகள், பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணுவதையும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதையும் அடிப்படையாகக் கொண்டு செயல்படுவதையே நாம் காண்கிறோம். 

2022 ஆம் ஆண்டு நெருக்கடி காலத்தில் 60% முதல் 70% வரை மிக உயர்ந்த மட்டத்தில் காணப்பட்ட பணவீக்கமானது, தற்போது குறிப்பிடத்தக்க அளவில் ஒற்றை இலக்கத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. 

கடந்த மாதத்தில் பணவீக்கத்தில் ஒரு தற்காலிக உயர்வு காணப்பட்டது. மத்திய கிழக்கு நெருக்கடி காரணமாக ஏற்பட்ட இந்த நிலவரமானது, முறையான பணவியல் நடைமுறைகளைப் பின்பற்றுவதையே பிரதிபலிக்கிறதே தவிர, பணம் அச்சிடுவதால் ஏற்பட்டதொன்றல்ல. 

மத்திய வங்கியானது, வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக நாணய நிதியத்தின் (IMF) திட்டத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து வருகிறது. கொள்கை வட்டி விகிதங்கள் 5% என்ற பணவீக்க இலக்கிற்கு ஏற்ப பேணப்பட்டு வருகின்றன. 

நாணய மாற்று விகிதமானது அதிக நெகிழ்வுத்தன்மையைக் காட்டுவதுடன், வெளிநாட்டு கையிருப்பை மீண்டும் கட்டியெழுப்புவதற்குப் பங்களிக்கும் வகையில் அமைந்துள்ளது என்றே கூறலாம். 

மத்திய கிழக்கு நெருக்கடி காரணமாக இந்த வெளிநாட்டு கையிருப்பை மேம்படுத்தும் செயல்முறை சற்றே மந்தமடைந்துள்ளதால், அதை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு ஆதரவளிக்கப்பட வேண்டும். 

கேள்வி 02: தற்போது அமுலில் உள்ள எரிபொருள் மானிய முறையை இன்னும் சில மாதங்களுக்குத் தொடர்ந்து கொண்டு செல்ல முடியுமா? அல்லது உலக சந்தையின் எரிபொருள் விலைக்கு ஏற்ப உள்நாட்டு எரிபொருள் விலைகள் திருத்தியமைக்கப்பட வேண்டுமா? 

பதில்:இந்தத் தற்காலிக மானியப் பொதியை சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இலக்குகளுக்கு ஏற்ப முன்னெடுத்துச் செல்வது குறித்து நாங்கள் அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளோம். 

கடந்த மாதம் கொழும்பில் நாம் கலந்துரையாடியதன் படி, அதற்கான அளவுருக்களை நாங்கள் புரிந்துகொண்டுள்ளோம். 

100 பில்லியன் ரூபாய் மதிப்புள்ள இந்த மானியப் பொதியானது ஒரு தற்காலிகமானதாகும். இது எதிர்வரும் செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைய உள்ளது. 

அதன் பயன்பாட்டுத் தன்மையைப் பொறுத்து, அதற்கு முன்னரே கூட அது முடிவுக்கு வரலாம். எனவே தான், இந்த இலக்கு குறித்து நாங்கள் அதிகாரிகளுடன் கலந்துரையாடி வருகிறோம்.என அவர் குறிப்பிட்டுள்ளார்.


MOST READ

காணொளி
மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

title