Header Logo
SLIC
வணிகம்
FIFA World Cup 2026™ இன் இலங்கையில் பிரத்தியேக ஊடக ஒளிபரப்பு உரிமையை SLT-MOBITEL PEOTV பெற்றுள்ளதுடன், இலங்கையின் ரசிகர்களுக்கு ஒவ்வொரு போட்டியையும் ந

Jun 8, 2026 - 03:02 PM

FIFA World Cup 2026™ இன் இலங்கையில் பிரத்தியேக ஊடக ஒளிபரப்பு உரிமையை SLT-MOBITEL PEOTV பெற்றுள்ளதுடன், இலங்கையின் ரசிகர்களுக்கு ஒவ்வொரு போட்டியையும் ந
Mobitel Inner 1278
EDEX Inner

இலங்கையின் முன்னணி Internet Protocol Television (IPTV) சேவை வழங்குனரும், முன்னணி டிஜிட்டல் களிப்பூட்டும் கட்டமைப்புமான SLT-MOBITEL PEOTV, FIFA உடன் முக்கியத்துவம் வாய்ந்த பங்காண்மையை ஏற்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. அதனூடாக இலங்கையில் FIFA World Cup 2026™ போட்டிகளை ஒளிபரப்பும் பிரத்தியேக உரிமையை தாம் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. 

இம்மூலோபாயப் பங்காண்மை, நாட்டின் ஒளிபரப்புத் துறையில் மிக முக்கியமான விளையாட்டு ஊடகக் கையகப்படுத்தல்களில் ஒன்றாக அமைவதுடன், FIFA World Cup 2026™ தொடரின் ஒவ்வொரு போட்டியையும் இலங்கை முழுவதிலுமுள்ள பார்வையாளர்களுக்கு வழங்குவதற்கான பிரத்தியேக உரிமைகளை SLT-MOBITEL PEOTV க்கு வழங்குகிறது. PEOTV, PEO MOBILE மற்றும் டிஜிட்டல் தளங்களின் ஊடாக, நாடு முழுவதிலுமுள்ள கால்பந்து ரசிகர்கள் உலகின் மிக மதிப்புமிக்க விளையாட்டு நிகழ்வை நிகரற்ற முறையில் அணுகும் வசதியைப் பெறுவர். இது ஆரம்பப் போட்டி முதல் இறுதிச் சாம்பியன்ஷிப் போட்டி வரை, இத்தொடரின் ஒவ்வொரு கணத்தையும் அவர்கள் நேரலையாக அனுபவிப்பதை உறுதி செய்கிறது. 

FIFA World Cup 2026™ தொடரின் ஒளிபரப்பு உரிமைகளைக் கையகப்படுத்தியமையானது, உயர்தர விளையாட்டு ஒளிபரப்புகளில் SLT-MOBITEL PEOTV மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான முதலீட்டின் மற்றுமொரு முக்கிய மைல்கல்லாகும். கடந்த பல வருடங்களாக, முதன்மையான சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளை வழங்குவதில் PEOTV வலுவான நற்பெயரைக் கட்டியெழுப்பியுள்ளதுடன், மேம்பட்ட IPTV தொழில்நுட்பத்தின் ஊடாக வாடிக்கையாளர்களுக்கு நம்பகமான, உயர்தரமான ஒளிபரப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட பார்வையின்பத்தை வழங்கி வருகின்றது. பார்வையாளர்கள் இத்தொடரை துல்லியமான True HD தரத்தில் கண்டு மகிழ முடியும், இது விதிவிலக்கான படத் தெளிவையும் அந்த நிகழ்விடத்திலேயே நேரில் காண்பது போன்றதொரு ஆழ்ந்த பார்வையின்பத்தையும் வழங்கும். PEOTV ஊடாக இல்லத்திலிருந்து, PEO MOBILE மூலம் பயணங்களின் போது அல்லது டிஜிட்டல் அணுகல் புள்ளிகள் மூலமாக, ரசிகர்கள் இப்போட்டித் தொடர் முழுவதிலும் பதிவாகும் ஒவ்வொரு தீர்க்கமான கோல்களையும் மற்றும் மறக்க முடியாத கொண்டாட்டங்களையும் தங்குதடையின்றி பின்தொடர முடியும். 

FIFA World Cup 2026™, கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் 48 தேசங்கள் பங்கேற்கும் 104 போட்டிகளுடன், இதுவரை நடத்தப்பட்டதில் மிகப்பெரிய தொடராக வரலாற்று சாதனை படைக்கத் தயாராகி வருகின்றது. உலகளவில் கோடிக்கணக்கான பார்வையாளர்களைக் கவரும் என எதிர்பார்க்கப்படும் இத்தொடர், சர்வதேச கால்பந்தாட்டத்தின் உச்சக்கட்டமாக விளங்குவதுடன், உலகளாவிய விளையாட்டு நாட்காட்டியில் மிக உன்னதமாகக் கொண்டாடப்படும் விளையாட்டு நிகழ்வுகளில் ஒன்றாகவும் திகழ்கிறது. 

SLT-MOBITEL PEOTV பற்றி 

SLT-MOBITEL PEOTV என்பது, அதிநவீன டிஜிட்டல் தொலைக்காட்சித் தொழில்நுட்பத்தின் ஊடாக பொழுதுபோக்கு, விளையாட்டு, கல்வி, வாழ்க்கைமுறை மற்றும் on-demand உள்ளடக்கங்களை பரந்தளவில் வழங்கும் இலங்கையின் முன்னோடி IPTV தளமாகும். நாட்டின் முன்னணி IPTV சேவை வழங்குநராக விளங்கும் PEOTV, புதுமைகள், உயர்தர உள்ளடக்கங்கள் மற்றும் பல்துறை அணுகல் வசதிகள் ஆகியவற்றின் மூலம் இல்லத்துக்கான பொழுதுபோக்கை தொடர்ந்து மறுவரையறை செய்து வருகின்றது. 

FIFA பற்றி 

கால்பந்து விளையாட்டை உலகளாவிய ரீதியில் விரிவுபடுத்தவும், அனைவரும் எளிதாக அணுகக்கூடியதாகவும், உள்ளடக்கியதாகவும் மாற்றுவதற்கு FIFA அர்ப்பணிப்புடன் செயற்படுவதுடன், இவ்விளையாட்டின் வளர்ச்சியை அனைத்து மட்டங்களிலும் முன்னெடுத்துச் செல்கிறது. தனது போட்டிகள், அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் மூலோபாய முயற்சிகள் ஆகியவற்றின் ஊடாக, FIFA கோடிக்கணக்கான ரசிகர்களை ஊக்குவிப்பதுடன், கால்பந்தின் ஆற்றல் மூலம் நாடுகளை ஒன்றிணைக்கிறது. FIFA World Cup™, சர்வதேச கால்பந்தாட்டத்தின் உச்சக்கட்டமாகவும், உலகளவில் மிக அதிகமாகப் பார்க்கப்படும் விளையாட்டு நிகழ்வுகளில் ஒன்றாகவும் விளங்குவதுடன், விளையாட்டின் மேன்மை, ஆர்வம் மற்றும் கலாசார ஒற்றுமையின் கொண்டாட்டத்தில் உலகின் சிறந்த தேசிய அணிகளை ஒன்றிணைக்கிறது.


MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278