Header Logo
SLIC
வணிகம்
செயற்கை நுண்ணறிவால் (AI) இயக்கப்படும் உலகில் எதிர்காலத்திற்கு சிறப்பாக முகங்கொடுக்கும் வகையில் பட்டதாரிகளைத் தயார்படுத்தல்

Jun 8, 2026 - 03:55 PM

செயற்கை நுண்ணறிவால் (AI) இயக்கப்படும் உலகில் எதிர்காலத்திற்கு சிறப்பாக முகங்கொடுக்கும் வகையில் பட்டதாரிகளைத் தயார்படுத்தல்
Mobitel Inner 1278
EDEX Inner

செயற்கை நுண்ணறிவின் துரித எழுச்சியானது தொழிலில் ஒட்டுமொத்த உலகினையும் மீள்வடிவமைத்து வருகின்றது. தேவையற்ற பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்து, செயற்கை நுண்ணறிவுக்கு இடமளிக்கின்ற அணிகளை நிறுவனங்கள் நாடி வருகின்ற நிலையில், மெட்டா (Meta), அமெசான் (Amazon) மற்றும் ஒரக்கிள் (Oracle) போன்ற தொழில்நுட்ப முன்னிலை நிறுவனங்கள் தமது தொழிற்படையைத் தொடர்ந்தும் குறைத்து, பணிகள் முன்னெடுக்கப்படும் வழிமுறைகளில் திருப்புமுனையை ஏற்படுத்தி வருகின்றன. 

இதன் தாக்கங்கள் குறிப்பிடத்தக்கவை. கொள்கை ஆய்வுகள் கற்கைமையம் (Institute of Policy Studies) வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின் பிரகாரம், இலங்கைத் தொழிற்படையில் 22% க்கும் அதிகமானோர், அதாவது சுமார் 1.83 மில்லியன் மக்கள் படைப்பாக்க செயற்கை நுண்ணறிவால் பாதிப்பிற்குள்ளாகவுள்ளனர். ஆரம்ப மட்ட தொழில்வாய்ப்புக்களை நாடுகின்ற புதிய பட்டதாரிகளைப் பொறுத்தவரை இம்மாற்றம் அச்சுறுவதாக தென்படக்கூடும். எனினும், இம்மாற்றத்தின் மத்தியில் வாய்ப்புக்களும் எழுகின்றன. 

இலங்கை தகவல் தொழில்நுட்ப கற்கைநிலையத்தில் (Sri Lanka Institute of Information Technology - SLIIT) சிரேஷ்ட கல்விமான்கள் இம்மாற்றத்தை முன்கூட்டியே ஊகித்தனர். செயற்கை நுண்ணறிவின் ஆதிக்கம் 

நிறைந்த பணித்தளத்தில் வளம் காண்பதற்குத் தேவையான திறன்களை மாணவர்கள் மாணவர் மத்தியில் வளர்க்கும் விதத்தில் பாடத்திட்டம் மற்றும் கற்கைநெறி ஆகியன வடிவமைக்கப்பட்டுள்ளன. கணினி கற்கைபீடத்தில் உதவித் துணைவேந்தரும், படைப்பாக்க செயற்கை நுண்ணறிவுத் துறையில் நிபுணருமான பேராசிரியர் நுவான் கோட்டாகொட அவர்கள் இதற்கான தயார்படுத்தல் அறிமுக கட்டத்திலிருந்தே ஆரம்பிப்பதாகக் குறிப்பிட்டார். 

அடுத்து வருகின்ற தசாப்தத்தில் வேலைவாய்ப்பின் மீது செயற்கை நுண்ணறிவின் முழுமையான தாக்கத்தை வல்லுனர்களால் ஊகிக்க மாத்திரமே முடியும் என்பதுடன், தற்போது தொழிற்துறையின் எதிர்பார்ப்புக்கள் மிகவும் தெளிவாகவுள்ளன. “பணிக்கு ஆட்சேர்க்கும் போது ஆரம்ப கட்டத்தில் காலடியெடுத்து வைக்கின்றவர்கள் உரிய செயற்கை நுண்ணறிவுக் கருவிகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை ஏற்கனவே அறிந்துள்ளவர்களாக இருத்தல் வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தொழிற்துறையில் நிலவுகின்றது,” என்று பேராசிரியர் கோட்டாகொட அவர்கள் குறிப்பிட்டதுடன், தகவல் தொழில்நுட்பத் துறைக்கும் அப்பால் இந்த எதிர்பார்ப்பு நீண்டுள்ளதாக கூறினார். 

இதன் அடிப்படையில், SLIIT ன் அனைத்து கற்கைபீடங்களிலும் தொழிற்துறை அனுபவ வெளிப்பாடு பொதிந்துள்ளது. மாணவர்கள் கல்வியின் ஒவ்வொரு கட்டத்திலும் கட்டமைக்கப்பட்ட, ஆழமான தொழிற்துறை அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளும் ஈடுபாடுகளுக்கு வழிவகுக்கப்பட்டுள்ளது. முதலாவது ஆண்டில் கற்கின்ற மாணவர்கள் வல்லுனர்கள் தலைமையிலான செயலமர்வுகளில் பங்கேற்பதற்கு வாய்ப்பளிக்கப்படுகின்றது. அதேசமயம் மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டுகளில் கற்கின்ற மாணவர்கள் உள்ளகப் பயிற்சிகள் மற்றும் வேலைவாய்ப்புக்கள், Stanford மற்றும் Elsevier ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்ட விஞ்ஞானிகள் அடங்கலாக, கற்கைபீடத்தின் கல்வி வழிகாட்டல் ஆலோசனைகளையும் பெற்றுப் பயனடைவர். 

மதிப்பீட்டு நடைமுறைகளும் பெரும் மாற்றம் கண்டுள்ளன. செயற்கை நுண்ணறிவால் தகவல்கள் எளிதில் அணுகக்கூடியதாகவும், தொகுப்படக்கூடியதாகவும் காணப்படும் ஒரு உலகில், நினைவுகூர்தலை விடவும் செயற்படுத்தலுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. செயற்திட்ட அடிப்படையிலான சில மதிப்பீடுகளுக்கு மாணவர்கள் செயற்கை நுண்ணறிவுக் கருவிகளை பொறுப்புள்ள வழியில் பயன்படுத்த வேண்டிய தேவை உள்ளது. கண்காணிக்கப்படும் பரீட்சைகள் மேற்கோள் ஆதாரங்களுக்கு இடமளித்து, விளக்கமளிப்பு, பகுத்தறிவு, மற்றும் தீர்மானம் வகுக்கும் திறன்களைச் சோதிக்கின்றன. 

இருப்பினும், இன்றைய பணியிடத்தில் வெற்றிபெற, செயற்கை நுண்ணறிவு இன்னும் முழுமையாகக் கையாளாத திறன்களான மனிதத்தன்மையுடன் இருக்கும் திறன் தேவைப்படுகிறது. பொதுவாக மனிதத் திறன்கள் என்று குறிப்பிடப்படும் ஒத்துழைப்பு, தொடர்பாடல், கூர்ந்து கவனித்தல் மற்றும் முரண்பாடுகளைத் தீர்க்கும் திறன்கள் அதிகளவில் மதிக்கப்படுகின்றன. SLIIT இல் உள்ள ஒவ்வொரு கற்கைபீடமும் இந்தத் திறன்களை வலுப்படுத்தத் தேவையான பிரத்தியேக அணுகுமுறைகளைப் பயன்படுத்துகிறது. 

போட்டித்தன்மை வாய்ந்த வணிக முன்மொழிவு சவால்களை SLIIT Business School ஏற்பாடு செய்கிறது. பொறியியல் மாணவர்கள் தங்களின் முக்கியப் பாடப்பிரிவுகளுக்கு அப்பாற்பட்டு பல்துறை வடிவமைப்புத் திட்டங்களை மேற்கொள்கின்றனர், அதே நேரத்தில் கணினிக் கற்கைபீடம் பௌதீக வன்பொருள் செயற்திட்டங்களைத் தனது பாடத்திட்டங்களில் இணைத்துக்கொள்கிறது. 

கணினிக் கற்கைபீடத்தில், மாணவர்கள் வெவ்வேறு புவியியல், இன மற்றும் பாலினப் பின்னணிகளைக் கொண்ட, கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பன்முகப்பட்ட அணிகளில் ஒன்றிணைந்து உழைக்கின்றார்கள். “இதை நாங்கள் பன்முகத்தன்மை கொண்ட அணித்தோற்றம்,” என்று அழைக்கிறோம் என்று பேராசிரியர் கோட்டாகொட அவர்கள் கூறுகிறார். மாணவர்களின் தனிநபர் மற்றும் கூட்டுப்பணித் திறன்களைத் தொடர்ந்து மேம்படுத்துவதற்காக இந்த அணிகள் ஆண்டுதோறும் மாற்றப்படுகின்றன. 

தொழில்துறைக்குத் தேவையான கல்வியை வழங்குவதில் 25 வருட அனுபவத்துடன், SLIIT ன் பெறுபேறுகளே அதன் சிறப்பைப் பறைசாற்றுகின்றன. பட்டதாரிகள் 96% வேலைவாய்ப்பு வீதத்தைப் பதிவு செய்கின்றனர். இது யதார்த்த உலகத் தேவைகளுடன் இணைந்த, எதிர்காலத்திற்குத் தயாரான ஒரு கல்வி முறைமைக்கான தெளிவான சான்றாகும். 

செயற்கை நுண்ணறிவு (AI) வெற்றியின் சிந்தனையைக் குறைத்துவிடவில்லை, அது வெற்றியில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. முன்பு, ஒரு தகவல் தொழில்நுட்பப் பட்டதாரியின் வெற்றி என்பது, வெளிநாட்டுச் சந்தைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பிரமாண்டமான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை பெறுவதாக இருந்தது. ஆனால் SLIIT தற்போது அவர்களை அதைவிடப் பலவற்றிற்குத் தயார்படுத்துகிறது. இப்போது அவர்கள், விவசாயம் மற்றும் வங்கித் துறை முதல் தொழில்முயற்சியாண்மை மற்றும் வளர்ந்து வரும் தொழிற்துறைகள் வரை பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் தீர்வுகளில் புத்தாக்கங்களை நிகழ்த்தவும் செயல்படுத்தவும் திறன்பெற்றுள்ளனர்.


MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278