Jun 8, 2026 - 04:12 PM -
0
John Keells Properties நிறுவனத்துக்குச் சொந்தமான The Offices at Cinnamon Life அலுவலகத் தொகுதி, தற்போதுள்ள குடியிருப்பு இல்லாத ஆதனத் துறையில் நிலைபேற்றியல் கொண்ட ஆதன மகத்துவத்திற்காக Gold GreenRE Certification விருதைப் பெற்றுள்ளது. இலங்கையில் வணிக ரீதியான ஆதனத் துறையில் முக்கியத்துவம் வாய்ந்த சாதனை மைற்கல்லாக இது மாறியுள்ளது. இலங்கையில் நிர்மாணச் செயற்திட்டம் ஒன்றுக்கு சூழல் நேய கட்டட தரப்படுத்தலுக்கு முதல் முறையாக GreenRE விருது கிடைத்துள்ள சாதனையாக இது காணப்படுகின்றது. எதிர்காலத்திற்கு ஏற்ற நகர்ப்புற ஆதன நிர்மாணங்களுக்கு தர ஒப்பீட்டு நியமமாக Cinnamon Life விளங்குவதை இது மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
நிலைபேற்றியலைப் பேணும் திறன், எரிசக்தியின் வினைதிறன் மிக்க பயன்பாடு, மற்றும் சூழல் மீது அக்கறை கொண்டுள்ள வடிவமைப்பு ஆகியவற்றில் அதியுயர் தராதரங்களைப் பேணுகின்ற நிர்மாணச் செயற்திட்டங்களுக்கு Gold சான்று அங்கீகாரம் வழங்கப்படுகின்றது. நவீன வர்த்தகத்துறையின் தேவைப்பாடுகளுக்கு உதவுவது மாத்திரமன்றி, நீண்ட கால அடிப்படையில் சுற்றுச்சூழல் மீதான பொறுப்புணர்வு மற்றும் தொழிற்பாட்டு ரீதியான வினைதிறன் ஆகியவற்றைக் கொண்ட அலுவலக இடவசதிகளைத் தோற்றுவிப்பதில் வலுவான அர்ப்பணிப்பை இந்நிறுவனம் காண்பித்து வருவதை இந்த தரச்சான்று அங்கீகாரம் பிரதிபலிக்கின்றது.
மலேசியாவின் ஆதன மற்றும் வீடமைப்பு நிர்மாணிப்பாளர்கள் சங்கத்தால் (Real Estate and Housing Developers Association - REHDA) 2013 ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட GreenRE அங்கீகாரமளிப்புத் திட்டமானது, சூழல் நேய கட்டட சான்று அங்கீகாரம் மற்றும் தரப்படுத்தல் முறைமைகள், பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முயற்சிகள் மூலமாக ஆதனத் துறையில் நிலைபேற்றியலை ஊக்குவித்து வருகின்றது. இப்பிராந்தியத்தில் நிலைபேற்றியலை அடிப்படையாகக் கொண்டு கட்டியெழுப்பப்படுகின்ற சூழல்களுக்கு பங்களிப்பதில் பொறுப்புணர்வுமிக்க நிர்மாண நடைமுறைகளை ஊக்குவிப்பதற்கான அங்கீகாரமாக இந்த தரச்சான்று கட்டமைப்பு காணப்படுகின்றது.
மிகப் பிரமாண்டமான City of Dreams ஒருங்கிணைந்த நிர்மாணத் திட்டத்தின் அங்கமாக, கொழும்பின் மையத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ள The Offices at Cinnamon Life அலுவலகத் தொகுதியானது நவீன உட்கட்டமைப்பு மற்றும் நிலைபேற்றியல் மீது கவனம் செலுத்தியுள்ள வடிவமைப்புக் கோட்பாடுகள் ஆகியவற்றைச் சங்கமிக்கச் செய்யும் உயர் ரக வர்த்தகச் சூழலை வழங்குகின்றது. ஆரோக்கியமான மற்றும் வினைதிறன்மிக்க அலுவலக சூழலைத் தோற்றுவிப்பதற்காக வினைதிறன் மிக்க கட்டட முறைமைகள், உச்ச அளவில் எரிசக்தித் திறன் பேணல், மற்றும் சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்ட தொழிற்பாட்டு நடைமுறைகள் ஆகியவற்றை இந்நிர்மாணச் செயற்திட்டம் ஒருங்கிணைக்கின்றது.
ஆதனங்கள் குழுமத்தின் சொத்து முகாமைத்துவத்திற்கான தலைமை அதிகாரியும், ஜோன் கீல்ஸ் குழுமத்தின் துணைத் தலைவருமான ருசிரு அபயசிங்க அவர்கள் இச்சாதனை குறித்து கருத்து தெரிவிக்கையில்:
“Gold GreenRE Certification தரச்சான்று அங்கீகாரத்தைப் பெற்றுள்ளமை The Offices at Cinnamon Life ஐப் பொறுத்தவரை முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சாதனையாகக் காணப்படுவதுடன், இலங்கையில் வணிகரீதியான ஆதனத் துறையில் முக்கியமான சாதனை மைற்கல்லாகவும் மாறியுள்ளது. சர்வதேசரீதியாக அங்கீகரிக்கப்படுகின்ற நிலைபேற்றியல் தராதரங்களுடன் ஒன்றியுள்ள அதேசமயம், வணிகங்கள், குடியிருப்பவர்கள், மற்றும் பரந்த நகர்ப்புற சூழல் ஆகிய அனைத்து தரப்பினருக்கும் நீண்ட கால மதிப்பை வழங்கும் அலுவலக இட வசதிகளை நிர்மாணித்து, தொழிற்படுத்துவதில் நாம் தொடர்ச்சியாக காண்பித்து வருகின்ற அர்ப்பணிப்பை இந்த தரச்சான்று அங்கீகாரம் பிரதிபலிக்கின்றது.”
உயர் ரக அலுவலக இட வசதிகள், விருந்தோம்பல், குடியிருப்புக்கள், சில்லறை வர்த்தகம், உணவு விருந்து, மற்றும் பொழுதுபோக்கு என அனைத்தையும் ஒரே இடத்திலேயே வழங்கும் ஒருங்கிணைந்த நிர்மாணச் செயற்திட்டமாகக் காணப்படும் பிரசித்தி பெற்ற City of Dreams ன் அங்கமாக The Offices at Cinnamon Life அமைந்துள்ளது. நிலைபேற்றியல் மற்றும் எதிர்காலத்திற்கு உகந்த அலுவலக இட வசதிகளுக்கு வணிகங்கள் முன்னுரிமையளிக்கும் போக்கு தொடர்ந்து அதிகரித்துச் செல்லும் நிலையில், தொழிற்பாட்டு ரீதியான வினைதிறன் மற்றும் சர்வதேச சுற்றுச்சூழல் தராதரங்கள் ஆகியவற்றை இணைக்கின்ற நிர்மாணச் செயற்திட்டங்கள் மீதான ஈர்ப்பினை GreenRE போன்ற தரச்சான்று அங்கீகாரங்கள் மேலும் வலுப்படுத்துகின்றன.
கொழும்பில் வளர்ந்து வருகின்ற வணிக ரீதியான ஆதனத் துறையில் நிலைபேற்றியல் மீதான முக்கியத்துவமும் அதிகரித்துச் செல்வதை இந்த அங்கீகாரம் பிரதிபலிக்கின்றது. ஊழியர்களின் நல்வாழ்வு, வினைதிறன், மற்றும் நீண்ட கால மீள்திறன் ஆகியவற்றுக்கு ஆதரவளிக்கும் வகையில், சுற்றுச்சூழல் ரீதியாக பொறுப்புணர்வு மிக்க அலுவலக இட வசதிகளுக்கு மிகவும் முக்கியத்துவமளிக்கும் போக்கு வணிகங்கள் மத்தியில் அதிகரித்துச் செல்கின்றது.
Cinnamon Life at City of Dreams போன்ற செயற்திட்டங்களை நிர்மாணிப்பதன் மூலமாக, நகரத்திற்கும், மற்றும் அதன் சமூகங்களுக்கும் நீண்ட கால மதிப்பைத் தோற்றுவிப்பதற்கு நிலைபேற்றியல், புத்தாக்கம், மற்றும் உலகத்தரம் வாய்ந்த வடிவமைப்பு ஆகியவற்றை ஒருங்கிணைந்த செயற்திட்டங்களை வழங்கி, இலங்கையின் நகர்ப்புற எதிர்காலத்தை வளர்ச்சி பெறச் செய்வதில் John Keells Properties தொடர்ந்து முக்கிய பங்காற்றி வருகின்றது.
இலங்கையில் பங்குச்சந்தையில் நிரற்படுத்தப்பட்டுள்ள மிகப் பாரிய கூட்டு நிறுவனங்கள் குழுமமான ஜோன் கீல்ஸ் குழுமத்தின் ஆதனத்துறைப் பிரிவாக John Keells Properties இயங்கி வருகின்றது. Crescat City ல் அமைந்துள்ள Emperor மற்றும் Monarch, OnThree20, 7th Sense, TRI-ZEN, The Residences at Cinnamon Life, VIMAN Ja-Ela, மற்றும் சமீபத்தைய நிர்மாணச் செயற்திட்டமான Vauxhall DSTRCT போன்ற பிரசித்தி பெற்ற நிர்மாணச் செயற்திட்டங்களை நிறைவேற்றி சாதனை படைத்த வரலாறை இந்நிறுவனம் கொண்டுள்ளது. புத்தாக்கம், தரம், மற்றும் நம்பிக்கை ஆகியவற்றின் மூலமாக நகர்ப்புற வாழ்வியல் மற்றும் வணிக ஆதனத் துறையில் புதிய தர ஒப்பீட்டு நியமங்களை இந்நிறுவனம் தொடர்ந்தும் நிலைநாட்டி வருகின்றது.
City of Dreams Sri Lanka ல் கிடைக்கும் முதலீட்டு வாய்ப்புக்கள் தொடர்பான மேலதிக விபரங்களை www.johnkeellsproperties.com என்ற இணையத்தளத்திற்கு செல்வதன் மூலமாக அல்லது 070 2 151 151 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொள்வதன் மூலமாக அறிந்து கொள்ள முடியும்.

