Header Logo
SLIC
வணிகம்
சிலோன் கோல்ட் ஸ்ரோர்ஸ் பிஎல்சியின் அறிவிப்பு

Jun 8, 2026 - 04:16 PM

சிலோன் கோல்ட் ஸ்ரோர்ஸ் பிஎல்சியின் அறிவிப்பு
Mobitel Inner 1278
EDEX Inner

மதிப்புமிக்க வாடிக்கையாளர்கள் மற்றும் தொடர்புபட்ட தரப்பினருக்கு, 

எலிஃபன்ட் ஹவுஸ் வழங்கவுள்ளதாகக் குறிப்பிட்டு, “Shakira Live in Kandy 2026” மற்றும் “Pitbull Live in Sri Lanka 2026” ஆகிய நிகழ்வுகள் தொடர்பான விளம்பரங்கள் இணைய வழியாக பரப்பப்பட்டு வருவதாக சிலோன் கோல்ஸ் ஸ்ரோர்ஸ் பிஎல்சி நிறுவனத்திற்கு அறியக் கிடைத்துள்ளது. 

அத்தகைய எந்தவொரு நிகழ்வுடனும் சிலோன் கோல்ட் ஸ்ரோர்ஸ் பிஎல்சி அல்லது எலிஃபன்ட் ஹவுஸ் ஆகியவற்றுக்கு எவ்விதமான தொடர்புகளோ அல்லது ஈடுபாடோ அல்லது அனுசரணையோ கிடையாது என்பதை நாம் அறியத்தர விரும்புகின்றோம். இந்த நிகழ்வுகளுக்கு எலிஃபன்ட் ஹவுஸ் வழங்குவதாக, ஆதரவளிப்பதாக, அல்லது அவற்றுடன் இணைந்துள்ளதாகக் குறிப்பிடும் எந்தவொரு விளம்பரமும் அனுமதியற்றவை என்பதுடன் உண்மைக்குப் புறம்பானவை. 

தனது அனுமதியின்றி வர்த்தக அடையாளம் பயன்படுத்தப்படுவதை மிகவும் பாரதூரமான ஒரு விடயமாக சிலோன் கோல்ட் ஸ்ரோர்ஸ் பிஎல்சி எடுத்துக் கொள்கின்றது. ஆதாரமற்ற விளம்பரங்களை பகிர்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு பொதுமக்கள், ஊடகம், மற்றும் தொடர்புபட்ட அனைத்துத் தரப்பினரையும் நாம் வலியுறுத்துவதுடன், உத்தியோகபூர்வ சமூக ஊடகப் பக்கங்கள் அடங்கலாக, சிலோன் கோல்ட் ஸ்ரோர்ஸ் பிஎல்சி மற்றும் எலிஃபன்ட் ஹவுஸ் ஆகியவற்றால் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் ஊடகங்கள் மூலமாக வெளியிடப்படும் உத்தியோகபூர்வ அறிவிப்புக்களை மாத்திரமே நம்புமாறு கேட்டுக்கொள்கின்றது. எலிஃபன்ட் ஹவுஸ் உடன் தொடர்புபட்ட எந்தவொரு நிகழ்வு, அனுசரணை, கூட்டாண்மை, அல்லது விளம்பரம் ஆகியன மேற்குறிப்பிட்ட உத்தியோகபூர்வ ஊடகங்கள் வாயிலாக மாத்திரமே பொதுமக்களுக்கு அறியத்தரப்படுகின்றது. 

எமது வர்த்தகநாமங்கள் மீதான நம்பிக்கையைக் கட்டிக்காப்பதில் நாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளதுடன், எலிஃபன்ட் ஹவுஸ் நாமம், இலச்சினை, அல்லது வர்த்தகநாம விளம்பரங்களை தவறாக பயன்படுத்துவதற்கு எதிராக உரிய நடவடிக்கைகளை நாம் முன்னெடுப்போம். அதேசமயம், இந்த வகையிலான மோசடிகள் மற்றும் உண்மைக்குப் புறம்பான செயற்பாடுகளிலிருந்து எமது நுகர்வோரைப் பாதுகாப்பதில் நாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளோம். 

நிர்வாகம் 

சிலோன் கோல்ட் ஸ்ரோர்ஸ் பிஎல்சி


MOST READ

காணொளி
20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

Mobitel 1278