Header Logo
SLIC
வணிகம்
ஸ்மார்ட்டான மற்றும் இடையூறு இல்லாத மோட்டார்க் காப்புறுதியை வழங்கும் நோக்கில் ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் நிறுவனம் அறிமுகப்படுத்திய ‘SLICGL

Jun 12, 2026 - 11:36 AM

ஸ்மார்ட்டான மற்றும் இடையூறு இல்லாத மோட்டார்க் காப்புறுதியை வழங்கும் நோக்கில் ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் நிறுவனம் அறிமுகப்படுத்திய ‘SLICGL
Mobitel Inner 1278
EDEX Inner

இலங்கையின் முதல்தர பொதுக் காப்புறுதிதாரரான ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் லிமிடெட் நிறுவனம் (SLICGL) அண்மையில் SLICGL Digital செயலியை அறிமுகப்படுத்தியது. அரசாங்கத்தின் ஆதரவுடன் அறுபது வருடங்களுக்கு மேலாக நிரூபிக்கப்பட்ட SLICGL நிறுவனத்தின் நம்பகத்தன்மையை நவீன டிஜிட்டல் அனுபவத்துடன் இணைத்து வழங்குகிறது. 

SLICGL Digital செயலின் ஊடாக மோட்டார் காப்புறுதி சேவைகள் இப்போது உண்மையிலேயே வாடிக்கையாளர்களின் விரல் நுனியில் கிடைக்கின்றன. வாடிக்கையாளர்கள் கையடக்கத் தொலைபேசித் தளத்தின் ஊடாக காப்புறுதி திட்டம் பற்றிய தகவல்கள், இழப்பீட்டுக் கோரிக்கைகளின் தற்போதைய நிலை, புதிய திட்டங்கள் மற்றும் அவர்களின் மோட்டார் அட்டைகள் என்பவற்றை இலகுவாக அணுக முடியும். 2026ஆம் ஆண்டு மே 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப் படுத்தல் ஆணைக்குழுவினால் கொண்டுவரப்பட்டுள்ள புதிய வழிகாட்டல்களுக்கு இணங்கும் வகையில் டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை இந்தச் செயலிகளின் ஊடாக தரவிறக்கம் செய்ய முடியும். 

SLICGL நிறுவனத்தின் டிஜிட்டல் பரிமாற்றத்தின் பகுதியாகவே இந்த முயற்சி அமைந்துள்ளது. இது வேகமான, புத்திசாலித்தனமான மற்றும் அதிக வசதியுள்ள காப்புறுதி சேவைகளை வழங்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. காப்புறுதி சேவைகளுடனான தொடர்புகளை எளிமைப்படுத்தி, எப்போது வேண்டுமானாலும், எங்கிருந்தும் சேவைகளை அணுகும் வசதியை SLICGL Digital செயலி வழங்குவதுடன், வாடிக்கையாளர்கள் அழைப்பு மைய அதிகாரியை தொடர்புகொள்ள வேண்டிய தேவையை நீக்குகிறது. காப்புறுதி சேவைகள் சிக்கல் நிறைந்தவை, அதிக நேரம் எடுத்துக்கொள்பவை மற்றும் கிளை அலுவலகங்களை மையாகக் கொண்டவை என நீண்டகாலமாக நிலவிவரும் கருத்துக்களுக்குத் தீர்வாக இச்செயலி அமைகிறது. வாகன உரிமையாளர்கள், இளம் தொழில்முயற்சியாளர்கள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு வசதிகளை வழங்கும், நவீன தொழில்நுட்ப அடிப்படையிலான காப்புறுதி நிறுவனமாக SLICGL இதன் மூலம் தன்னை நிலைநிறுத்துகிறது. 

SLICGL நிறுவனத்தின் மோட்டார் காப்புறுதி பிரிவு 2025 ஆம் ஆண்டில் வெளிப்படுத்திய வலுவான செயல்திறனைத் தொடர்ந்து இந்த டிஜிட்டல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது, மோட்டார் காப்புறுதி துறையில் மறுக்க முடியாத முன்னணி நிறுவனமாக அதன் நிலையை மேலும் வலுப்படுத்துவதோடு, இலங்கையின் முன்னணி பொது காப்புறுதி நிறுவனமாக அதன் ஒட்டுமொத்த தலைமைத்துவத்தையும் உறுதிப்படுத்துகிறது. 

SLICGL Digital செயலியைத் தற்பொழுது App Store மற்றும் Google Play Store ஆகியவற்றில் தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.


MOST READ

காணொளி
20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

Mobitel 1278