Jun 12, 2026 - 11:42 AM -
0
உலகின் மிகச் சிறந்த இளம் வயது கால்பந்து போட்டிகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்த சர்வதேச போட்டிக்கு தெரிவு செய்யப்பட்ட முதல் இலங்கை கால்பந்து அகாடமிகளில் ஒன்றாக Colombo Athletic Football Academy திகழ்கிறது
கொழும்பைத் தளமாகக் கொண்ட Colombo Athletic Football Academy, போர்த்துகலில் வருடாந்தம் நடைபெறும் மற்றும் உலகின் முக்கியமான இளம் வயது கால்பந்து போட்டிகளில் ஒன்றாக பரவலாகக் கருதப்படும் Iber Cup போட்டிக்கு அழைப்புப் பெற்ற முதல் இலங்கை கால்பந்து அகாடமியாக வரலாறு படைத்துள்ளது.
இலங்கை கால்பந்துக்கான முக்கியமான மைல்கல்லாக அமையும் இந்த அழைப்பு, உலகம் முழுவதிலிருந்தும் இப்பிரதிஷ்டைமிக்க போட்டியில் ஆண்டுதோறும் பங்கேற்கும் முன்னணி கால்பந்து அகாடமிகளின் வரிசையில் Colombo Athletic Football Academy-யை இணைக்கிறது. Iber Cup, இன்று உலக கால்பந்தின் உச்சநிலைகளில் விளையாடும் பல முன்னணி வீரர்களுக்கான ஆரம்ப மேடையாக விளங்கியுள்ளது. Manchester City அணியின் Bernardo Silva மற்றும் Rúben Dias, AC Milan அணியின் Rafael Leão, Paris Saint-Germain அணியின் Vitinha, Gonçalo Ramos மற்றும் João Neves உள்ளிட்ட உலகத் தர வீரர்கள், இப்போட்டியுடன் தொடர்புடைய குறிப்பிடத்தக்க முன்னாள் வீரர்களில் அடங்குவர் இந்த சாதனையை மேலும் சிறப்பாக்குவது, Colombo Athletic Football Academy நிறுவப்பட்டு வெறும் பதினைந்து மாதங்களே ஆன நிலையில் இந்த சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றிருப்பதே ஆகும். இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில், உலகின் சிறந்த இளம்வயது கால்பந்து அகாடமிகளுக்கே அழைப்பு விடுக்கும் போட்டி ஏற்பாட்டாளர்களின் கவனத்தை ஈர்த்து, கழகம் சர்வதேச மேடையில் தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியுள்ளது.
Colombo Athletic Football Academy-யின் வேகமான முன்னேற்றத்திற்கு மையமாக அமைந்துள்ளது AC Milan Academy Junior Camp உடனான அதன் நீண்டகால ஒத்துழைப்பு. புகழ்பெற்ற AC Milan வளர்ச்சி முறைமையைத் தழுவியுள்ள இந்த அகாடமி, தனது இளம் வீரர்களுக்கு அடிப்படை நிலையிலிருந்தே உலகத் தரப் பயிற்சி முறைகள், தொழில்நுட்ப ஒழுக்கம் மற்றும் உயர்தர கால்பந்து தத்துவத்தை வழங்கி வருகிறது.
Milan Method எனப்படும் இந்த முறைமையை ஒழுங்குமுறையாகப் பின்பற்றியதன் விளைவாகவே Iber Cup போட்டிக்கான இந்த மதிப்புமிக்க அழைப்பு கிடைத்ததாகக் கருதப்படுகிறது. Colombo Athletic அணியின் பயிற்சிகள் Thurstan Grounds-ஐ தனது இல்ல மைதானமாகக் கொண்டு நடைபெற்று வருகின்றன.
நாங்கள் ஆரம்பித்து வெறும் 15 மாதங்களிலேயே, உலகின் மிகவும் பிரதிஷ்டைமிக்க இளம் வயது கால்பந்து போட்டிகளில் ஒன்றிற்கு அழைக்கப்பட்டிருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. போட்டியின் முடிவு எப்படியிருந்தாலும், இந்த வாய்ப்புக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளோம். இத்தகைய சர்வதேச வெளிப்பாடு இலங்கை இளம் வீரர்களுக்கு மிகப் பெரிய அர்த்தம் கொண்டது.
AC Milan உடனான ஒத்துழைப்பைக் கொண்டுள்ள இலங்கையின் முதல் கால்பந்து அகாடமி நாங்களாகும். இது Milan Method எனப்படும் வெற்றிகரமான பயிற்சி முறைமையை எங்கள் வீரர்களுக்குக் கற்பிக்க வலுவான அடித்தளத்தை வழங்கியுள்ளது. இந்த முறைமையின் கீழ் நாங்கள் பயிற்சி வழங்கி வருகிறோம்; அதன் பலன்கள் இப்போது வெளிப்படத் தொடங்கியுள்ளன, என Colombo Athletic Football Club / AC Milan Junior Academy Camp Sri Lanka இன் தலைவர் அஜய் வீர் சிங் தெரிவித்தார்.
Colombo Athletic Football Academy-யின் Iber Cup பங்கேற்பு, அந்த அகாடமிக்கான ஒரு சாதனை மட்டுமல்ல; இலங்கையின் இளையோர் கால்பந்து வளர்ச்சிக்கான வரலாற்றுப் பொக்கிஷமாகவும் அமைகிறது. உலகின் சிறந்த அணிகளுடன் போட்டியிட இலங்கை தயாராக உள்ளது என்ற வலுவான செய்தியையும் இது வெளிப்படுத்துகிறது.
மேலும், Colombo Athletic Football Academy, நாட்டின் பல பகுதிகளில் இருந்து வரும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையிலுள்ள திறமையான இளம் வீரர்களுக்கு ஆண்டுதோறும் புலமைப்பரிசில்களையும் வழங்கி வருகிறது.
இந்த அகாடமிக்கு Prima KottuMee, Mastercard, Cinnamon Grand, Sorrell மற்றும் Health Scan ஆகிய நிறுவனங்கள் அனுசரணை வழங்குகின்றன. மேலும், மூன்று முக்கிய ஆளுமைகளின் ஆதரவும் அகாடமிக்கு கிடைக்கிறது.
Colombo Athletic Football Club பற்றி
Colombo Athletic Football Academy என்பது 2024 நவம்பரில் நிறுவப்பட்ட, கொழும்பைத் தளமாகக் கொண்ட இளம் வயது கால்பந்து அகாடமியாகும். AC Milan Academy Junior Camp, Sri Lanka உடனான கூட்டாண்மையின் மூலம், உயர்தர பயிற்சி முறைமைகள் மற்றும் சர்வதேச வெளிப்பாட்டின் வாயிலாக உலகத்தர கால்பந்து வீரர்களை உருவாக்கும் நோக்கத்துடன் அகாடமி செயல்பட்டு வருகிறது.
Iber Cup பற்றி
Iber Cup என்பது போர்த்துக்கலில் வருடாந்தம் நடைபெறும் உலகின் மிகவும் புகழ்பெற்ற இளம் வயது கால்பந்து போட்டிகளில் ஒன்றாகும். உலகம் முழுவதிலிருந்தும் சிறந்த இளம் வயது கால்பந்து அகாடமிகள் இதில் பங்கேற்கின்றன. இப்போட்டியில் பங்கேற்ற பல வீரர்கள் பின்னர் உலகளாவிய தொழில்முறை கால்பந்து அரங்கில் முன்னணி வீரர்களாக உருவெடுத்துள்ளனர்.

