Header Logo

வணிகம்
லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் பிரத்தியேக ஊடக மற்றும் ஒளிபரப்புப் பங்காளராக IPG Group உடன் SLT-MOBITEL PEOTV கைகோர்ப்பு

Jun 16, 2026 - 06:50 AM -

0

லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் பிரத்தியேக ஊடக மற்றும் ஒளிபரப்புப் பங்காளராக IPG Group உடன் SLT-MOBITEL PEOTV கைகோர்ப்பு

எதிர்வரும் லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடருக்காக, IPG Group மற்றும் SLT-MOBITEL PEOTV ஆகிய நிறுவனங்கள் ஒரு மூலோபாயக் பங்காண்மையை ஏற்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளன. இதற்கமைய, இலங்கையின் முன்னோடி இணைய நெறிமுறை தொலைக்காட்சி (IPTV) சேவை வழங்குநரான PEOTV, இப்போட்டித் தொடர் முழுமைக்குமான பிரத்தியேக ஊடக மற்றும் ஒளிபரப்புப் பங்காளராக நியமிக்கப்பட்டுள்ளது. 

இந்தப் பங்காண்மையின் ஊடாக, இலங்கை முழுவதிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் இப்போட்டித் தொடர் முழுவதையும் PEOTV, PEO MOBILE மற்றும் டிஜிட்டல் தளங்கள் உள்ளிட்ட அனைத்து PEOTV தளங்களின் வழியாகவும் நேரலையாகக் கண்டுகளிக்க முடியும். அனைத்துப் போட்டிகளும் True HD) தரத்தில் ஒளிபரப்பப்படவுள்ளதால், ரசிகர்கள் இத்தொடர் முழுவதும் படிகம் போன்ற தெளிவான காட்சித் தரத்துடன் ஒரு நேரடி மைதான அனுபவத்தைப் பெற வழிவகுக்கும். 

இந்தக் பங்காண்மையின் கீழ், PEOTV ஊடக மற்றும் ஒளிபரப்பு உரிமைகளுக்கான பிரத்தியேக பங்காளராகச் செயல்படவுள்ளதுடன், பல்வேறு காட்சித் தளங்களின் ஊடாக இப்போட்டித் தொடரின் நுகர்வோர் சென்றடைவை விரிவுபடுத்துவதற்கு IPG Group நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றும். அத்துடன், இலங்கை மற்றும் ஏனைய பிராந்தியங்களில் இன்னும் பரந்தளவிலான நுகர்வோர் சென்றடைவைச் சாத்தியமாக்கும் பொருட்டு, terrestrial மற்றும் டிஜிட்டல் ஊடகப் பங்காளர்களையும் தம்மோடு இணைந்து கொள்ளுமாறு PEOTV அழைப்பு விடுக்கவுள்ளது. இப்போட்டித் தொடரானது 2026 ஜூலை 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், வீரர்களுக்கான ஏலம் 2026 ஜூன் 01 ஆம் திகதி நடத்தப்படத் திட்டமிடப்பட்டுள்ளது. 

உள்நாட்டுப் பார்வையாளர்கள் தொலைக்காட்சி, பொழுதுபோக்கு, நேரலை விளையாட்டுகள், செய்திகள், தகவல்-பொழுதுபோக்குகள், சிறுவர் உள்ளடக்கங்கள், கல்வித் திட்டங்கள் மற்றும் உலகளாவிய புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அணுகும் முறையை மறுவடிவமைப்பு செய்வதில் SLT-MOBITEL PEOTV ஒரு முக்கிய பங்காற்றியுள்ளது. True HD தரத்திலான உள்நாட்டு மற்றும் சர்வதேச உள்ளடக்கங்களை வழங்கும் இலங்கையின் மிகப்பெரிய சேவை வழங்குநர் என்ற வகையில், PEOTV தனது வலுவான, தொழில்நுட்பம் சார்ந்த ஒளிபரப்பு சூழலமைப்பின் மூலம் LPL தொடரை இன்னும் பரந்தளவிலான பார்வையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதற்குத் தகுந்த நிலையில் உள்ளது. அதேவேளையில், நாட்டின் பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு ஒளிபரப்புத் துறையைத் தொடர்ந்து வலுப்படுத்துவதிலும் இது பங்களிப்புச் செய்கிறது. 

SLT-MOBITEL PEOTV இன் பிரதம அதிகாரி ருச்சிர விரகோன் இந்தப் பங்காண்மை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், “LPL தொடரின் பிரத்தியேக ஊடக மற்றும் ஒளிபரப்புப் பங்காளராக IPG Group நிறுவனத்துடன் கைகோர்ப்பதில் SLT-MOBITEL PEOTV பெருமிதம் கொள்கிறது. இலங்கையின் முன்னோடி IPTV சேவை வழங்குநர் என்ற வகையில், நாடு முழுவதும் உள்ள வீடுகளுக்கு உயர்தர உள்ளடக்கங்களையும் அதிஉயர் காட்சி அனுபவத்தையும் வழங்குவதே எங்களது எப்போதும் நிலையான நோக்கமாக இருந்து வருகின்றது. எங்களது ஒருங்கிணைந்த தளங்களின் ஊடாக, இன்னும் பரந்தளவிலான பார்வையாளர்களைச் சென்றடைவதையும், அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் மிகவும் வலுவான மற்றும் நெகிழ்வுத்தன்மை வாய்ந்த காட்சி அனுபவத்தை உருவாக்குவதையும் நாங்கள் இலக்காகக் கொண்டுள்ளோம்.” என்றார். 

IPG Group ஸ்தாபகர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி அனில் மொஹான் கருத்துத் தெரிவிக்கையில், “LPL தொடர், ஒரு போட்டித்தன்மை மிக்க கிரிக்கெட் மற்றும் பொழுதுபோக்குத் தளமாகத் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகின்றது. இந்த முன்னேற்றத்திற்கு வலுவான ஒளிபரப்புக் பங்காண்மைகள் மிக முக்கியமான அடித்தளமாக அமைகின்றன. இலங்கையின் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் பொழுதுபோக்குத் துறையில் நம்பகமான மற்றும் முன்னோடித் தளமாக விளங்கும் SLT-MOBITEL PEOTV உடன் கைகோர்ப்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இந்த பங்காண்மையானது, இப்போட்டித் தொடரை ரசிகர்களுக்கு அதிஉயர் தரம், பரந்தளவிலான நுகர்வோர் சென்றடைவு மற்றும் சீரான தன்மை ஆகியவற்றுடன் கொண்டு சேர்க்க எங்களுக்குப் பெருமளவில் உதவும்.” என்றார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில், “லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் ஒட்டுமொத்த சூழலமைப்பை வலுப்படுத்தக்கூடிய பங்காளர்களுடன் இணைந்து IPG Group தொடர்ந்து பணியாற்றும். உயர்தர தயாரிப்பு, பரந்த ஒளிபரப்பு அணுகல் மற்றும் ரசிகர்களின் ஈடுபாடு ஆகியவற்றின் ஆதரவுடன், வணிக ரீதியாக வலுவான மற்றும் உலகெங்கிலும் பரந்தளவில் பின்பற்றப்படும் ஒரு போட்டித் தொடராக LPL ஐக் கட்டியெழுப்புவதே எங்களது முக்கிய நோக்கமாகும். PEOTV எமது பிரத்தியேக ஊடக மற்றும் ஒளிபரப்புப் பங்காளராக எம்மோடு இணைந்திருப்பதன் மூலம், வரவிருக்கும் போட்டி பருவம் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் மேம்படுத்தப்பட்டதொரு காட்சி அனுபவத்தை வழங்கும் என்பதில் நாங்கள் முழு நம்பிக்கையுடன் இருக்கிறோம் என்று IPG Group தெரிவித்துள்ளது.” என்றார். 

ஸ்ரீ லங்கா கிரிக்கட், லங்கா ப்ரீமியர் லீக் போட்டித் தொடர் பணிப்பாளர் சமந்த தொடன்வெல கருத்துத் தெரிவிக்கையில், “LPL தொடருக்கான அணுகலை மேலும் விரிவுபடுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல்லாக, IPG Group மற்றும் SLT PEOTV ஆகிய நிறுவனங்களுக்கு இடையிலான கூட்டாண்மையை ஸ்ரீலங்கா கிரிக்கெட் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது. PEOTV யின் IPTV, OTT மற்றும் multi-platform ஆற்றல்கள் ஆகியவற்றின் ஊடாக, இலங்கை முழுவதிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் இப்போட்டித் தொடரை மிகவும் வசதியாகவும், அதிஉயர் தரத்துடனும் அனுபவிக்க முடியும். LPL தொடரை ஒரு முன்னணி கிரிக்கெட் மற்றும் பொழுதுபோக்கு சொத்தாக தொடர்ச்சியாக கட்டியெழுப்புவதற்கு இத்தகைய வலுவான ஒளிபரப்புக் கூட்டாண்மைகள் இன்றியமையாதவையாகும்.” என்றார். 

லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரில், இலங்கையின் முன்னணி கிரிக்கெட் வீரர்கள், சர்வதேசத் திறமையாளர்களையும் கொண்ட விறுவிறுப்பான T20 போட்டிகளினூடாக ஒன்றிணைத்து, கிரிக்கெட் விளையாட்டின் வளர்ச்சி, விளையாட்டு உலகிற்கான பொழுதுபோக்கு மற்றும் நாடு தழுவிய ரீதியில் பரந்தளவிலான பொருளாதாரச் செயல்பாடுகளுக்குப் பக்கபலமாக அமையும் ஒரு சிறந்த தளத்தை உருவாக்குகிறது.


MOST READ

காணொளி
உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!