Header Logo
SLIC
வணிகம்
DIMO Agri Machinery இன் LOVOL ஹாவெஸ்டர் பஞ்ச மஹா புதையல் இரண்டாம் கட்டத்தின் ஊடாக 5 வாடிக்கையாளர்களுக்கு DIMO Batta வாகனங்கள்

Jun 16, 2026 - 07:08 AM

DIMO Agri Machinery இன் LOVOL ஹாவெஸ்டர் பஞ்ச மஹா புதையல் இரண்டாம் கட்டத்தின் ஊடாக 5 வாடிக்கையாளர்களுக்கு DIMO Batta வாகனங்கள்
Mobitel Inner 1278
EDEX Inner

DIMO Agri Machinery நிறுவனம், LOVOL ஹாவெஸ்டர் பஞ்ச மஹா புதையல் (பஞ்ச மஹா நிதானய) அதிர்ஷ்ட சீட்டிழுப்பின் இரண்டாம் கட்டத்தை அண்மையில் மிக வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இலங்கையின் விவசாய சமூகத்திற்கு நன்மதிப்பை சேர்க்கும் வாடிக்கையாளர் மேம்பாட்டுத் திட்டங்களுக்கான தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இதன் ஊடாக DIMO நிறுவனம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. 

இத்திட்டத்தின் கீழ், ஊக்குவிப்பு திட்ட காலப்பகுதியில் LOVOL ஹாவெஸ்டர் அறுவடை இயந்திரங்களை கொள்வனவு செய்த ஐந்து அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர்களுக்கு DIMO Batta வாகனங்கள் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டன. இதற்கு தகுதி பெறுவதற்கான காலப்பகுதி 2025 ஒக்டோபர் 01 முதல் 2026 மார்ச் 31 வரை (பெரும் போகம்) ஆகும். இந்த அதிர்ஷ்ட சீட்டிழுப்பு 2026 மே 25 ஆம் திகதி நடைபெற்றதுடன், DIMO Batta வாகனங்களை வென்ற வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று ஜூன் மாதம் 02, 03, 04, 05 ஆம் திகதிகளில் வாகனங்கள் கையளிக்கப்பட்டன. 

இதற்கு முன்னர் இடம்பெற்ற திட்டத்தின் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு, LOVOL ஹாவெஸ்டர் பஞ்ச மஹா புதையல் திட்டமானது, இலங்கையின் விவசாய இயந்திரங்கள் துறையில் இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்ட அதிக மதிப்புமிக்க மற்றும் மிகப்பெரிய வாடிக்கையாளர் நன்மதிப்புத் திட்டங்களில் ஒன்றாக தொடர்ந்து விளங்குகிறது. இத்திட்டம் DIMO Agri Machinery நிறுவனத்தின் நற்பெயரை மேம்படுத்தியுள்ளதுடன், நாடளாவிய ரீதியில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியாக சிறந்த மதிப்பை வழங்கியுள்ளது. 

நாடளாவிய ரீதியில் பரந்து விரிந்துள்ள DIMO நிறுவனத்தின் விற்பனை, சேவை, உதிரிப்பாகங்கள் வலையமைப்பின் வலுவான ஆதரவுடன், LOVOL ஹாவெஸ்டர் இயந்திரங்கள் இலங்கை முழுவதிலும் உள்ள விவசாயிகளுக்கு நம்பகமான செயற்பாட்டையும் செயற்பாட்டுத் திறனையும் வழங்குகின்றன. DIMO Agri Machinery இன் நம்பகத்தன்மை, வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் உள்ளூர் விவசாயத் தேவைகளுக்குப் பொருத்தமான உலகத்தரம் வாய்ந்த இயந்திர தீர்வுகளை வழங்குவதற்கான தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் பெறுபேறே, இந்த வர்த்தகநாமத்தின் மீது விவசாய சமூகம் கொண்டுள்ள வளர்ந்து வரும் நம்பிக்கையாகும். 

இத்திட்டம் குறித்து DIMO நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ரஜீவ் பண்டிதகே கருத்துத் தெரிவிக்கையில், இலங்கையின் விவசாய சமூகத்திற்கு நீண்டகால மதிப்பை உருவாக்கும் நம்பகமான மற்றும் புத்தாக்கமான இயந்திர தீர்வுகளை வழங்குவதில் DIMO நிறுவனமாகிய நாம் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறோம். LOVOL ஹாவெஸ்டர் பஞ்ச மஹா புதையல் திட்டமானது நம்பகத்தன்மை, சிறந்த சேவைத் தரம் மற்றும் வாடிக்கையாளர் திருப்தி ஆகியவற்றிற்கான எமது அர்ப்பணிப்பை மேலும் உறுதிப்படுத்துவதுடன், எமது வாடிக்கையாளர்கள் எம் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு எமது தொடர்ச்சியான நன்றியையும் பிரதிபலிக்கிறது. என்றார். 

உற்பத்தித்திறனை அதிகரிக்கவும், செயற்பாட்டுத் திறனை அதிகப்படுத்தவும் நம்பகமான இயந்திர தீர்வுகளைத் தேடும் விவசாயிகள் மற்றும் விவசாய தொழில்முனைவோர் மத்தியில் LOVOL ஹாவெஸ்டர் இயந்திரங்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன் ஆயுட்காலம், செயல்திறன், நவீன தொழில்நுட்பம் மற்றும் வலுவான விற்பனைக்குப் பிந்தைய சேவை ஆகியவற்றின் மீது கட்டியெழுப்பப்பட்டுள்ள நம்பிக்கையே இதற்கு காரணமாகும். இத்திட்டத்தின் ஊடாக DIMO Agri Machinery நிறுவனமானது, அதிகளவிலான வாடிக்கையாளர்களுக்கு LOVOL ஹாவெஸ்டரின் நீண்டகால மதிப்பையும் நம்பகத் தன்மையையும் அனுபவிப்பதற்கான வாய்ப்பை வழங்குகிறது. 

வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத் தன்மையை உறுதி செய்வதற்காக உத்தியோகபூர்வ கண்காணிப்பின் கீழ் நடத்தப்பட்ட LOVOL ஹாவெஸ்டர் பஞ்ச மஹா புதையல் அதிர்ஷ்ட சீட்டிழுப்பில் DIMO Batta வாகனங்களை வென்ற 5 அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர்களாக, பொத்துஹெரவைச் சேர்ந்த பி. நயன பிரதீப் ஹந்துகல, எப்பாவலவைச் சேர்ந்த டி.சி. பந்துல பிரியந்த குமார திஸாநாயக்க, பிபிலையைச் சேர்ந்த ஆர்.எம். ரொஷான் புஷ்பகுமார, புத்தளவைச் சேர்ந்த யூ.ஏ. ரசாங்க நந்த குமார, கோமரங்கடவலவைச் சேர்ந்த எச்.எம். மாலக மிஹிர பண்டார ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். இந்த ஐந்து அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர்களும் நொச்சியாகம மற்றும் தம்புத்தேகமவில் உள்ள கே.என். மல்டி சென்டர், பிபிலையில் உள்ள ஸ்டைலோ ஹோல்டிங்ஸ், திஸ்ஸமஹாராமவில் உள்ள ஆர்.டி. மோட்டார்ஸ், கோமரங்கடவலவில் உள்ள பந்துல ஹார்ட்வெயார் மோட்டார்ஸ் ஆகிய DIMO Agri Machinery இன் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் மூலம் உருவாகியிருந்தனர். 

LOVOL ஹாவெஸ்டர் பஞ்ச மஹா புதையல் போன்ற திட்டங்களின் ஊடாக DIMO Agri Machinery நிறுவனம், இலங்கையின் விவசாய இயந்திரமயமாக்கலை விரைவுபடுத்துவதற்கும், விவசாய சமூகத்தின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளை வலுவூட்டுவதற்கும் தனித்துவமான பங்களிப்பை வழங்குகிறது. நம்பகமான சேவையின் விசேடத்துவம், நீண்டகால வாடிக்கையாளர் மதிப்பு மற்றும் நம்பகத்தன்மை வாய்ந்த உலகத்தரம் வாய்ந்த விவசாய இயந்திர தீர்வுகளை வழங்குவதற்கு DIMO நிறுவனம் தொடர்ச்சியாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது.


MOST READ

காணொளி
20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

Mobitel 1278