Jun 16, 2026 - 07:58 AM -
0
ஆதிகாலம் தொட்டே பல்வேறு சுவைகளைக் கொண்ட உணவு மற்றும் பானங்களுக்குப் புகழ்பெற்ற கொழும்பு நகரம், வீதி உணவுகள் (Street foods) முதல் பல்வேறு வகையான உணவு வகைகளுக்கான ஒரு தனித்துவமான இடமாக விளங்கியது. இதன் காரணமாகவே, அந்த உணவுகளைச் சுவைப்பதற்காக கொழும்புக்கு வருகை தந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் மிக அதிகமாக இருந்தது. கொழும்பு நகரின் இந்த தனித்துவமான அடையாளத்தில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்த இது முற்பட்டுள்ளதுடன், கொழும்பு உணவு கலாசாரத்தின் சிறப்பில் ஒரு புதிய யுகத்தையும் குறிப்பதாக அமைந்துள்ளது.
தெற்காசியாவின் முதலாவது ஒருங்கிணைந்த ஹோட்டல் வளாகமான City of Dreams Sri Lanka, ஆடம்பரமான சுற்றுலாச் சேவையுடன் கூடிய பொழுதுபோக்கு, ஷொப்பிங் மற்றும் உடற்பயிற்சி ஆகிய வசதிகளை ஒரே கூரையின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. ஒவ்வொரு கலாசாரத்தையும் உள்ளடக்கும் வகையில், பல்வேறு வகையான உணவு மற்றும் பானங்கள் மூலம் தனது வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் நோக்கத்தை முன்னிறுத்திச் செயல்படும் இந்த வளாகத்தில், Nuwa மற்றும் Cinnamon Life ஆகிய இரு ஹோட்டல்களுக்குள் வெவ்வேறு விதமான உணவு அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய 16 உணவகங்கள் மூலம், தங்களுக்கு விருப்பமான சுவைகளை அனுபவிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இங்குள்ள ஆடம்பர உணவகங்களுக்குள் Sapphire Dragon உணவகத்திற்கு முதன்மையான இடம் கிடைக்கிறது. இது சீன உணவு பாரம்பரியங்களையும், நவீன பாணிகளையும் நேர்த்தியாகப் பொருத்தித் தயாரிக்கப்பட்ட ஒரு உயர்தர Cantonese உணவகமாகும். இதிலுள்ள அழகான உட்புற அலங்காரங்கள், கவரக்கூடிய உணவுப் பரிமாறல் மற்றும் மிக உயர்தரமான மூலப்பொருட்களின் பயன்பாடு ஆகியவற்றின் காரணமாக, இது கொழும்பு நகரின் மிகச்சிறந்த ஆசிய உணவு அனுபவங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஜப்பானிய உணவுக்கலை பற்றிப் பேசும்போது Yoroko உணவகத்திற்கு முதன்மையான இடம் கிடைக்கிறது. Robatayaki முறையில் உணவு சமைத்தல் மற்றும் நவீன ஜப்பானிய சுவைகள் காரணமாக, சுறுசுறுப்பான மற்றும் கவரக்கூடிய ஒரு சூழல் இங்கு உருவாக்கப்பட்டுள்ளது. இது டோக்கியோ நகரின் உணவகங்களின் ஆற்றலை கொழும்புக்குக் கொண்டு வருவதுடன், கொழும்பின் உணவு கலாசாரத்திற்கு ஒரு புதிய அர்த்தத்தையும் சேர்க்கிறது.
Bistro des Marées உணவகமானது மத்திய தரைக்கடல் பகுதியின் தாக்கத்தைப் பெற்ற கடல் உணவு என்ற கருப்பொருளின் ஊடாக, கொழும்பு நகரின் கடலோர அடையாளத்தை மிக நேர்த்தியாக வெளிப்படுத்துகிறது. புத்துணர்ச்சி, அழகு மற்றும் எளிமை ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளித்துள்ள இந்த உணவகம், மிக உயர்தரமான உணவுகளைத் தயாரிக்கும் கலையைப் பாதுகாத்துக்கொண்டு, இலகுவான மற்றும் சுதந்திரமான சூழலில் ஆடம்பரமான உணவு அனுபவத்தை விருந்தினர்கள் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
உயர்தர இறைச்சி வகைகள் மற்றும் மேற்கத்திய பாணியிலான சிறந்த சுவைகளை விரும்புபவர்களுக்கான Staten Bar & Grill உணவகம், ஒரு பாரம்பரிய steakhouse அனுபவத்தை அறிமுகப்படுத்துகிறது. இது உயர்தரமான, அதேசமயம் எவரும் எளிதாகச் செல்லக்கூடிய ஒரு இடமாகும். இதன் மூலம் வணிகக் காரணங்களுக்காக மற்றும் பொழுதுபோக்கிற்காக வருகை தரும், ஆடம்பரமான மற்றும் வசதியான உணவை எதிர்பார்க்கும் இருதரப்பு விருந்தினர்களுக்கும் தேவையான சேவையை இது வழங்குகிறது. நாள் முழுவதும் திறந்திருக்கும் Quizine உணவகம், தன்னகத்தே கொண்டுள்ள நேரடி உணவு சமைக்கும் இடங்கள் (Live cooking stations) மூலம் உலகெங்கிலும் உள்ள பல்வேறு சுவைகளை ஒரே கூரையின் கீழ் கொண்டு வருகிறது. நவீன சுற்றுலா உலகின் பல்வேறு கலாசாரங்களைப் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த உணவகம், உணவு உட்கொள்வது என்பதை புதிய சுவைகளைத் தேடிச் செல்லும் ஒரு ஊடாடும் பயணமாக மாற்றுகிறது.
NUWA இல் உள்ள The Crystal Lounge மிகவும் தனிப்பட்ட மற்றும் ஆடம்பரமான சூழலுடன் கூடிய உயர்தர தேநீர் விருந்துகள், சுவையான பானங்கள் மற்றும் தனிப்பட்ட கலந்துரையாடல்களுக்காகவே சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் NUWA வர்த்தக நாமத்திற்கு ஒரு கவர்ச்சிகரமான தோற்றமும், வாடிக்கையாளர்களுக்கு ஒரு அழகான அனுபவமும் கிடைக்கும்.
இவற்றுக்கு மேலதிகமாக, இரவு நேரப் பொழுதுபோக்கிற்காகவே பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டுள்ள, பாரம்பரிய பானங்கள் மற்றும் இசையால் நிறைந்த Flux உணவகமும் இங்கு மிக முக்கியமானதாகும். தங்களுக்குப் பிடித்த பொழுதுபோக்கு பானங்களை மனமாரச் சுவைக்கக்கூடிய The Vault, மற்றும் அன்பான சந்திப்புகள் மற்றும் மாலைப் பொழுதுகளுக்காகவே பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டு, Wine வகைகளுக்கு மிகவும் புகழ்பெற்ற Cloud Wine ஆகியனவும் இங்குள்ள மற்றுமொரு விசேடமான இரு உணவகங்களாகும்.
விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கிற்காகவே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள Spice8, பரபரப்பான சூழலுக்கு மத்தியில் ஆசிய சுவைகளால் வாடிக்கையாளர்களை மகிழ்விக்க முடிந்துள்ளதுடன், 24 மணி நேரமும் தேவையான சேவைகளையும் வழங்கி வருகிறது.
இது தவிர, எளிமையான Cafe கலாசாரத்தை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் Sweet Lab போன்ற உணவகங்கள் மூலம், விருந்தினர்கள் தங்களுக்குத் தேவையான இனிப்பு வகைகள் (Desserts), பேஸ்ட்ரிகள் (Pastries) மற்றும் பல்வேறு பான வகைகளைச் சுவைக்க முடியும்.

