Header Logo
SLIC
வணிகம்
BestWeb.LK 2026 நிகழ்வுக்கு வலுவூட்டும் வகையில் அதன் உத்தியோகபூர்வ தொலைதொடர்பாடல் பங்காளராக HUTCH கைகோர்த்துள்ளது

Jun 16, 2026 - 01:28 PM

BestWeb.LK 2026 நிகழ்வுக்கு வலுவூட்டும் வகையில் அதன் உத்தியோகபூர்வ தொலைதொடர்பாடல் பங்காளராக HUTCH கைகோர்த்துள்ளது
Mobitel Inner 1278
EDEX Inner

புத்தாக்கம், மற்றும் மிகச் சிறப்பான டிஜிட்டல் மேன்மை ஆகியவற்றை அங்கீகரிக்கும் வகையில் இலங்கையின் டிஜிட்டல் துறையின் வளர்ச்சிக்கு இடமளிக்கும் தனது பங்களிப்பை மேலும் வலுப்படுத்தியவாறு BestWeb.LK 2026 நிகழ்வுடன் HUTCH Sri Lanka கைகோர்த்துள்ளது. 

LK Domain Registry அமைப்பின் ஏற்பாட்டில் இலங்கையின் முதன்மையான இணைய வடிவமைப்புப் போட்டியாக அமைந்துள்ள BestWeb.LK நிகழ்வானது 2009 ம் ஆண்டு முதல் வருடாந்தம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. தற்போது 16 வது ஆண்டாகவும் இடம்பெறுகின்ற 2026 ம் ஆண்டு போட்டியானது “.lk” domain ன் கீழ் இயங்கும் மிகச் சிறந்த இணையத்தளங்களுக்கு அங்கீகாரமளிக்கும் அதேசமயம், இலங்கையின் இணையரீதியான வளர்ச்சியின் தராதரத்தை மேம்படுத்துவதற்கு வணிகங்கள், உருவாக்குனர்கள், வடிவமைப்பாளர்கள், நிறுவனங்கள், மற்றும் டிஜிட்டல் படைப்பாளர்களை ஊக்குவிக்கும் தனது இலக்கினை தொடர்ந்தும் சிறப்பாக முன்னெடுத்து வருகின்றது. 

LK Domain Registry உடன் கொண்டுள்ள மூலோபாயரீதியாக முக்கியத்துவம் மிக்க இந்த ஒத்துழைப்பின் மூலமாக தொடக்க வணிக முயற்சிகள் முதல் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள், பாரிய அளவிலான நிறுவனங்கள் மற்றும் அரச நிறுவனங்கள் வரை ஒவ்வொரு துறையிலும் இலங்கையின் வணிகத் துறைக்கு வலுவூட்டும் தனது அர்ப்பணிப்பை HUTCH வலுப்படுத்தி வருகின்றது. 

இலங்கை வணிகங்களும், நிறுவனங்களும் டிஜிட்டல் ரீதியாக தமது இருப்பினை வலுப்படுத்தி, புத்தாக்கத்தை உள்வாங்கிக் கொள்வதற்கு அவற்றுக்கு ஊக்கமளிப்பதில் BestWeb.LK ன் பங்கு அளப்பெரியது. உத்தியோகபூர்வ தொலைதொடர்பாடல் பங்காளராக HUTCH வழங்கும் ஒத்துழைப்பு, நாடெங்கிலும் டிஜிட்டல் மேன்மையை அங்கீகரித்து, போற்றிக் கொண்டாடும் தேசிய தளமொன்றுக்கு மிகவும் வலுவூட்டுகின்றது. தொடர்பாடல் வசதிகளுக்கு அப்பாலும் தனது பங்களிப்பை வியாபிக்கச் செய்ய வேண்டும் என்ற நிறுவனத்தின் நோக்கத்திற்கு அமைவாக, டிஜிட்டல் யுகத்தில் வளம் காண்பதற்கு வணிகங்கள், சமூகங்கள், மற்றும் புத்தாக்குனர்களுக்கு இடமளித்து, இலங்கையில் வளர்ச்சி கண்டுவருகின்ற டிஜிட்டல் துறைக்கு வலுவூட்டுவதில் அது அர்ப்பணிப்புடன் உள்ளது.

MOST READ

காணொளி
20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

Mobitel 1278