Header Logo
Mogo Academy

வணிகம்
Sun Siyam மற்றும் Studio Sixty7, இலங்கை மற்றும் மாலைத்தீவின் வடிவமைப்புச் சிறப்பிற்காக International Property Awards Asia Pacific விருதுகளில் இரண்டு வ

Jun 17, 2026 - 02:34 PM -

0

Sun Siyam மற்றும் Studio Sixty7, இலங்கை மற்றும் மாலைத்தீவின் வடிவமைப்புச் சிறப்பிற்காக International Property Awards Asia Pacific விருதுகளில் இரண்டு வ
Mobitel inner

மாலைத்தீவைச் சேர்ந்த Sun Siyam விருந்தோம்பல் குழுமம், மாலைத்தீவு மற்றும் இலங்கையில் ஆறு ரிசார்ட்களை நடத்தி வரும் நிலையில், கட்டிடக்கலை, வடிவமைப்பு மற்றும் நில ஆதன துறைகளில் சிறப்பிற்கான உலகின் மிகவும் மதிப்புமிக்க அளவுகோல்களில் ஒன்றாகக் கருதப்படும் International Property Awards Asia Pacific விருதுகளில் இரண்டு விருதுகளை வென்றுள்ளது.தாய்லாந்தின் பாங்கொக்கில் நடைபெற்ற விழாவில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன. 

இவ்விருதுகள், குழுமத்தின் இரண்டு சிறப்புமிக்க சொத்துகளான இலங்கையின் Sun Siyam Pasikudah மற்றும் மாலைத்தீவின் Sun Siyam Iru Fushi ஆகியவற்றின் சிறந்த வடிவமைப்பு சாதனைகளை கௌரவிக்கின்றன. 

International Property விருதுகள், 80-க்கும் மேற்பட்ட துறை நிபுணர்களைக் கொண்ட சுயாதீன நடுவர் குழுவினால் மதிப்பிடப்படுகின்றன. மேலும், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் வடிவமைப்பு மற்றும் கட்டிடக்கலைச் சாதனைகளுக்கான தங்கத் தரநிலையாக இவ்விருதுகள் கருதப்படுகின்றன. 

விருது பெற்ற இந்த இரண்டு திட்டங்களும், Sun Siyam மற்றும் லண்டனைத் தளமாகக் கொண்ட உள்துறை வடிவமைப்பு நிறுவனமான Studio Sixty7 ஆகியவற்றுக்கிடையேயான நீண்டகால படைப்பாற்றல் பங்குடைமையின் மூலம் உருவாக்கப்பட்டவையாகும். ஒரு இடத்தின் சூழல், பொருட்களின் தன்மை மற்றும் அதன் தனித்துவத்தை நுணுக்கமாக உணர்ந்து வடிவமைப்பதில் Studio Sixty7 சிறப்பாக அறியப்படுகிறது. 

Jose Rivero மற்றும் Lee McNichol ஆகியோர், இலங்கையின் கடற்கரைப் பகுதி மாலைத்தீவின் நீர்நிலைக் குளப்பகுதி போன்ற முற்றிலும் மாறுபட்ட இரண்டு தீவு சூழல்களின் வடிவமைப்பு மாற்றங்களை வழிநடத்தினர். அதேசமயம், “ஆடம்பரம் என்பது அது அமைந்துள்ள நிலத்தின் இயல்பிலிருந்தே இயற்கையாக உருவாக வேண்டும்; அந்த நிலத்தின் மீது திணிக்கப்படக் கூடாது” என்ற ஒருமித்த வடிவமைப்புத் தத்துவத்தையும் அவர்கள் தொடர்ந்து பேணினர். 

Studio Sixty7 நிறுவனத்தின் இணை நிறுவுநர்களான Jose Rivero மற்றும் Lee McNichol இது தொடர்பாக தெரிவிக்கையில் : 

“இலங்கையில் அமைந்துள்ள Sun Siyam Pasikudah மற்றும் மாலைத்தீவில் உள்ள Sun Siyam Iru Fushi ஆகிய சொத்துகளுக்காக International Property Awards Asia Pacific விருதுகளில் இரண்டு விருதுகளைப் பெற்றிருப்பதில் நாம் மிகுந்த பெருமை அடைகிறோம். இந்தத் திட்டங்கள் எங்களுக்கு மிகவும் அர்த்தப் பூர்வமானவையாகும். Sun Siyam உடன் இணைந்து மேற்கொண்ட பணிகள், வெறும் அழகியல் ரீதியில் மட்டுமல்லாமல், அந்த இடங்களின் உணர்வையும் விருந்தினர்கள் அவற்றை அனுபவிக்கும் விதத்தையும் பிரதிபலிக்கும் வகையில், அவற்றின் இயற்கைச் சூழலோடு ஆழமாக இணைந்த இடங்களை வடிவமைக்க எம்மைத் தூண்டின. 

எமது இந்த முயற்சிக்கு அங்கீகாரம் கிடைத்திருப்பது, ஒரு வடிவமைப்பு நிறுவனமாக எங்களுக்கு மிகுந்த பெருமையை அளிக்கிறது.Sun Siyam குழுவின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த சாதனையை எங்களால் அடைந்திருக்க முடியாது. அவர்கள் தங்களது தொலைநோக்கு பார்வையில் எங்களை நம்பினர், எங்களின் சிறந்த பணியை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரத்தை வழங்கினர், மேலும் ஆடம்பரமும் ஒரு இடத்தின் தனித்துவத்திற்கான ஆழமான மரியாதையும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட கருத்துகள் அல்ல என்ற நம்பிக்கையையும் பகிர்ந்து கொண்டனர்.அந்த பங்குடைமைக்காக நாங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறோம். அவர்கள் மேற்கொண்டு வரும் சிறப்பான பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நாம் பெருமை கொள்கிறோம்.” என்று தெரிவித்தனர். மாலைத்தீவின் மந்திரமயமான அழகை அதன் உச்சமான வடிவில் அனுபவிக்கச் செய்யும் Noonu Atoll பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் தீவில் Sun Siyam Iru Fushi ரிசார்ட் திகழ்கிறது. இது Sun Siyam Luxury Collection-இன் முதன்மைச் சொத்தாகும். 

ஐந்து நட்சத்திர ஆடம்பர விடுதியாக விளங்கும் இந்த ரிசார்ட்டில், நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட சூழல், அமைதியை மையமாகக் கொண்ட அனுபவம் மற்றும் ஒவ்வொரு விருந்தினரின் விருப்பத்திற்கேற்ப வடிவமைக்கப்பட்ட சேவைகள் அனைத்தும் இயல்பாக ஒன்றிணைகின்றன.குடும்பங்களுக்குப் போதுமான விசாலத்தன்மையையும், காதல் பயணங்களுக்கு தேவையான நெருக்கத்தையும், ஓய்வும் புத்துணர்ச்சியும் நாடுபவர்களுக்கு அமைதியான சூழலையும் வழங்கும் இந்த ரிசார்ட்டில், 15 உணவகங்கள் மற்றும் பார் வசதிகள், 165-க்கும் மேற்பட்ட சிகிச்சைகளை வழங்கும் விருது பெற்ற ஸ்பா மையம், மேலும் பிராந்தியத்திலேயே மிகப்பெரிய முக்குளித்தல் நிலையம் ஆகியவை உள்ளன.Hotel Suite Interiors பிரிவுக்கான International Property Award, ரிசார்ட்டின் புதிதாக மறுவடிவமைக்கப்பட்ட Deluxe Water Villa-வை கௌரவித்துள்ளது. இது Studio Sixty7- இன் படைப்பாற்றல் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்படும் ரிசார்ட் முழுமையான வடிவமைப்பு மாற்றத்தின் முதல் அத்தியாயமாகும். ஒவ்வொரு சிறிய விவரமும் விருந்தினர்களை இன்னும் சிறிது நேரம் தங்கத் தூண்டும் வகையில் அமைந்துள்ள இந்த இடத்தின் தனித்துவத்தை இது பிரதிபலிக்கிறது. 

இந்த புதிய வடிவமைப்பானது அழகியல், மென்மையான நிறத் தேர்வுகள், இயற்கையான அமைப்புகள் மற்றும் நயமாக வடிவமைக்கப்பட்ட வடிவங்களைக் கொண்டுள்ளது. சிறிதளவு இயல்பான பிளாஸ்டர் சுவர்கள், தொடுதலுக்கு இனிமையான மேற்பரப்புகள் மற்றும் காற்றோட்டமுள்ள லினன் துணிகள் ஆகியவை, சௌகரியமானதாக இருக்கும் அதேவேளை உயர்தரமான ஆடம்பர உணர்வை உருவாக்குகின்றன.ஒவ்வொரு வில்லாவும் கடலின் அழகைக் காட்சிப்படுத்தும் ஓர் ஓவியச் சட்டகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. திறந்தவெளி அமைப்பு, அமைதியான சூழல் மற்றும் நேரடியாக நீர்நிலைக் குளத்தை நோக்கிக் காட்சியளிக்கும் குளியலறை ஆகியவை அதன் சிறப்பம்சங்களாகும்.தனிப்பட்ட டெக்குகளில் தொங்கும் ஊஞ்சல்கள் மற்றும் மென்மையான பச்சை நிற அலங்காரங்கள் அமைதியான ஓய்வுக்கு அழைப்பு விடுகின்றன. அதேவேளை, Horizon Water Villas-இல் 22 சதுர மீட்டர் தனியார் நீச்சல் குளம் மற்றும் சூரிய உதயத்தை ரசிப்பதற்கும் மாலைத்தீவின் பிற்பகல்களை அனுபவிப்பதற்கும் ஏற்ற வகையில் அமைக்கப்பட்ட தாழ்வான அமர்வு பகுதிகளும் இடம்பெற்றுள்ளன. 

“ஒவ்வொரு வடிவமைப்பு அம்சமும் இயற்கையுடன் இணைந்ததாய் மற்றும் உணர்வுகளைத் தூண்டும் வகையில் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அவை விருந்தினர்களை ஆழமான அமைதி மற்றும் மனநிறைவு உணர்விற்குள் அழைத்துச் செல்கின்றன,” என்று Lee McNichol மற்றும் Jose Rivero தெரிவித்தனர். 

இலங்கையின் வடகிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள அழகிய மற்றும் தூய்மையான கடற்கரைப் பகுதியில் Sun Siyam Pasikudah அமைந்துள்ளது. The House of Siyam-இன் தனிப்பட்ட தொகுப்புகளின் ஒரு பகுதியாக விளங்கும் இந்த பூட்டிக் ரிசார்ட்டில், நவீன வடிவமைப்பைக் கொண்ட 34 தனித்துவமான பவிலியன்கள் உள்ளன. 

இந்த ரிசார்ட் விரிவான மறுசீரமைப்புப் பணிகளுக்குப் பிறகு 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மீண்டும் திறக்கப்பட்டது. புதிய வண்ணங்கள், உள்துறை பொருத்துதல்கள், அலங்காரப் பொருட்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட சேவைகளுடன் முழுமையாகப் புதுப்பிக்கப்பட்டாலும், ரிசார்ட்டின் தனித்துவமான கட்டிடக்கலை அடையாளத்தை வழங்கும் அசல் கட்டமைப்பு பாதுகாக்கப்பட்டு அதன் சிறப்பம்சம் தொடர்ந்தும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. 

ஹோட்டலின் உள்ளகவடிவமைப்பு – இலங்கை பிரிவில் வழங்கப்பட்ட International Property Award, இந்த மறுசீரமைப்புப் பணியின் ஆழத்தையும் உயர்வையும் பிரதிபலிக்கிறது.இந்த வடிவமைப்பின் மையக் கருத்தாக உள்ளூர் கைவினைப் பாரம்பரியத்தை முன்னிறுத்தும் உறுதிப்பாடு இருந்தது. இந்த மாற்றம், இலங்கை கைவினைஞர்கள் மற்றும் உள்ளூர் சமூகத்தைச் சேர்ந்த மரப்பணிக் கலைஞர்களுடன் நெருக்கமான ஒத்துழைப்பில் மேற்கொள்ளப்பட்டது. 

தனிப்பயனாக வடிவமைக்கப்பட்ட மரத்தளபடங்கள் , கையால் உருவாக்கப்பட்ட அலங்கார விளக்குகள் மற்றும் மர இணைப்புப் பொருட்கள் அனைத்தும் உள்ளூரிலேயே தயாரிக்கப்பட்டு, உள்துறை வடிவமைப்பின் ஒவ்வொரு பகுதிக்கும் அழகாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக, இந்த சொத்து வெளியிலிருந்து கொண்டுவரப்பட்ட வடிவமைப்பைப் போன்றதல்லாமல், நாட்டின் இயற்கை மற்றும் பண்பாட்டு அடையாளங்களிலிருந்தே உருவாகி வளர்ந்ததுபோல உணரப்படும் ஒரு தனித்துவமான இடமாக மாறியுள்ளது.மேலும், ரிசார்ட்டின் பணியாளர்களில் சுமார் 90 சதவீதம் பேர் சுற்றியுள்ள உள்ளூர் சமூகங்களைச் சேர்ந்தவர்கள். இந்த எண்ணிக்கை, வடிவமைப்பைத் தாண்டி, ரிசார்ட்டின் அன்றாட செயல்பாடுகளிலும் உள்ளூர் சமூகங்களுடனான ஆழமான இணைப்பை பிரதிபலிக்கும் தத்துவத்தை வெளிப்படுத்துகிறது.


MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara