Jun 17, 2026 - 03:45 PM -
0
நுகர்வோர் மத்தியில் பாதுகாப்பான, தங்குதடையற்ற, மற்றும் தொடுகையற்ற டிஜிட்டல் வணிக அனுபவத்தை மேம்படுத்துவதில் முக்கியமான படியொன்றைக் குறிக்கும் வகையில், இலங்கையில் ‘Click to Pay’ தீர்வை இன்று அறிமுகம் செய்து வைப்பதாக வீசா அறிவித்துள்ளது. பின்வரும் வசதிகளுக்கு இடமளிப்பதன் மூலமாக இணைய வழியில் பணக் கொடுப்பனவு வழிமுறைகளை ‘Click to Pay’ தீர்வு பாரிய அளவில் மேம்படுத்துகின்றது:
- நுகர்வோர் எவ்விதமான தொடுகையுமின்றி, விரைவான, மேலும் பாதுகாப்பான வழியில் கொள்வனவுகளை அனுபவிக்கலாம்.
- வர்த்தகர்கள் கொடுப்பனவுகளை வெற்றிகரமாக ஏற்றுக்கொள்வதுடன், வாடிக்கையாளர்களை மேலும் அதிகமாக சம்பாதிக்கலாம்.
- அட்டைகளை வழங்கும் வங்கிகள் அட்டைகளின் பயன்பாட்டை அதிகரித்துக் கொள்ளலாம்.
டிஜிட்டல் வர்த்தகம் இலங்கையில் தொடர்ந்தும் வளர்ச்சி கண்டு வருகின்ற நிலையில், நுகர்வோரும், வர்த்தகர்களும் விரைவான, எளிதான, மற்றும் பாதுகாப்பான கொடுப்பனவு அனுபவங்களுக்கு முக்கிய மதிப்பளித்து வருகின்றனர். எனினும் இணைய கொடுப்பனவு அனுபவத்தில் முக்கியமான படியாகக் காணப்படுகின்ற ஒரு செயற்பாடாக இணையத்தளங்கள் மற்றும் செயலிகளில் கொடுப்பனவு செயன்முறையை நிறைவு செய்யும் படிமுறை இன்னமும் சிக்கல் நிறைந்ததாக காணப்படுவதுடன், கைமுறையாக அட்டையை உள்நுழைத்தல், பல்வேறு தகவல் விபரங்களை பூரணப்படுத்த வேண்டியுள்ளமை, மற்றும் மீண்டும் மீண்டும் மேற்கொள்ளப்பட வேண்டிய அங்கீகார நடைமுறைப் படிகள் போன்ற தேவைப்பாடுகள் பரிவர்த்தனைகளை விரைவாக நிறைவேற்றிக் கொள்வதற்கு முட்டுக்கட்டைகளாகக் காணப்படுகின்றன. தாம் இணையவழியாக தெரிவு செய்து கொள்வனவை இறுதிக்கட்டம் வரை சென்று அதனைக் கைவிடும் நிலைமையும் காணப்படுவதுடன், நுகர்வோருடனான ஈடுபாடுகளின் போது அவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி, வர்த்தகர்களுக்கு வணிக வாய்ப்புக்களை இழக்கச் செய்கின்றன.
‘Click to Pay’ தீர்வுடன் இணைந்துள்ள வர்த்தகரின் இணையத்தளத்தில் அல்லது செயலியில் வாடிக்கையாளர் ஒருவர் முதல்முறையாக கொடுப்பனவொன்றை மேற்கொள்ளும் சமயத்தில் எளிமையான, ஒரு முறை மாத்திரம் மேற்கொள்ள வேண்டிய நடைமுறையுடன் இதனை ஆரம்பிக்க முடியும். தமது மின்னஞ்சல் முகவரி அல்லது மொபைல் தொலைபேசி இலக்கத்தை மாத்திரம் உபயோகித்து ஒரு சில எளிய படிமுறைகளுடன் தமது வீசா அட்டையை அவர்கள் பாதுகாப்பாக இதில் உள்வாங்கிக் கொள்ள முடியும். அதன் பிறகு மேற்கொள்ளும் கொள்வனவுச் செயற்பாடுகளின் போது தாம் ஏற்கனவே பதிவு செய்துள்ள அட்டையின் விபரங்களை நேரடியாக இணைத்து, தாம் விரும்பும் அட்டையைத் தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு தடவையும் அட்டையின் விபரங்களை மீண்டும் உள்ளிட வேண்டிய தேவையைப் போக்கி, ஒரு சில படிகளுடன் பரிவர்த்தனைகளைப் பூர்த்தி செய்ய முடியும். பரிவர்த்தனை ஒவ்வொன்றும் பாதுகாப்பாக முன்னெடுக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, ஒரு முறை கடவுச்சொல் போன்ற ஏற்கனவே உள்ள அங்கீகார உறுதிப்படுத்தல் வழிமுறைகள் தேவைக்கேற்றவாறு தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும்.
பாதுகாப்பே ‘Click to Pay’ தீர்வின் மையமாகவுள்ளது. வடிவமைப்பு ரீதியாகவே டிஜிட்டல் அடையாளமாக்கம் செய்யப்பட்டுள்ளமை, கொடுப்பனவின் போது அட்டை தொடர்பான அந்தரங்கமான தரவுகள் வெளிப்படுத்தப்படுவதற்குப் பதிலாக, பாதுகாப்பு ஏற்பாடாக டிஜிட்டல் அடையாளமாக்கம் செய்யப்பட்ட விபரங்கள் உபயோகிக்கப்படுகின்றன. அட்டையின் இலக்கம் வெளித்தெரிவது தவிர்க்கப்பட்டு, விரைவாக கொடுப்பனவை மேற்கொள்ளும் திறனை மேலும் வலுப்படுத்தும் அதேசமயம், மோசடி ஆபத்துக்களைக் குறைக்க உதவுகின்றது.
வீசா நிறுவனத்தின் இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான முகாமையாளர் அவாந்தி கொலம்பகே அவர்கள் கருத்து தெரிவிக்கையில், “இலங்கை மக்கள் மத்தியில் கொள்வனவுகள் மற்றும் கொடுப்பனவுகளை டிஜிட்டல்ரீதியாக மேற்கொள்ளும் போக்கு அதிகரித்துச் செல்வதை வீசா தெளிவாக இனங்கண்டுள்ளதுடன், நம்பிக்கையான, பாதுகாப்பான, மற்றும் தங்குதடையற்ற கொடுப்பனவு அனுபவங்களை வழங்கவேண்டியதன் முக்கியத்துவமும் அதிகரித்துள்ளது. ‘Click to Pay’ தீர்வின் மூலமாக இணையவழி கொடுப்பனவுகளை எளிமையாகவும், பாதுகாப்பாகவும் மேற்கொள்வதற்கு தங்குதடையற்ற டிஜிட்டல் கொடுப்பனவுகளை நுகர்வோர் பயன்படுத்தும் வழிமுறைகளை மேம்படுத்த வீசா உதவுகின்றது.
கொடுப்பனவுச் செயற்பாட்டின் போது டிஜிட்டல் அடையாளமாக்கத்தை உள்ளிணைத்துள்ளதன் மூலமாக, கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்படும் போது அட்டை தொடர்பான அந்தரங்கமான தகவல் விபரங்கள் வெளிப்படுத்தப்படும் ஆபத்தை நாம் குறைப்பதுடன், நுகர்வோர் தமது அட்டையைத் தொடுகையின்றி, பாதுகாப்பாக ஒவ்வொரு இணையவழி கொள்வனவையும் பூர்த்தி செய்வதற்கு நாம் அவர்களுக்கு வலுவூட்டுகின்றோம். நாட்டில் டிஜிட்டல் கொடுப்பனவுகள் துறையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற வளர்ச்சிக்கு ஆதரவாக, இலங்கையில் கொடுப்பனவுத் திறன்களை மேம்படுத்துவதற்கு வீசா அறிமுகப்படுத்துகின்ற முக்கியமானதொரு படியாக இது காணப்படுகின்றது.”
வீசா (Visa Inc.) குறித்த விபரங்கள்
டிஜிட்டல் கொடுப்பனவுகளில் உலகளாவில் முன்னிலை வகித்து வருகின்ற Visa (NYSE: V), 200 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் நுகர்வோர், வணிகர்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் அரச ஸ்தாபனங்கள் ஆகியவற்றுக்கிடையில் கொடுக்கல்வாங்கல் நடவடிக்கைகளுக்கு அனுசரணையளித்து வருகின்றது. தனிநபர்களும், வணிகங்களும், மற்றும் பொருளாதாரங்களும் வளம் காண்பதற்கு இடமளிக்கின்ற புத்தாக்கம்மிக்க, சௌகரியமான, நம்பகமான, மற்றும் பாதுகாப்பான கொடுப்பனவுகள் வலையமைப்பினூடாக உலகினை ஒன்றிணைப்பதே எமது நோக்கம். எங்கும், அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதாரங்கள், எங்கும் அனைவரையும் மேம்படுத்தும் என்றும், பண இயக்கத்தின் எதிர்காலத்திற்கு அணுகலை அத்திவாரமாகக் காண்பிக்கும் என்றும் நாங்கள் நம்புகிறோம். மேலும் தகவல் விபரங்களுக்கு Visa.com.
தொடர்புகளுக்கு: சந்தீபனி ரத்நாயக்க
sandeepani@hardtalk.lk

