Jun 22, 2026 - 11:48 AM -
0
John Keells Properties நிறுவனத்தால் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற VIMAN Ja-Ela செயற்திட்ட அமைவிடத்தில் மாதிரி அடுக்குமனையொன்றை அது காட்சிப்படுத்தலுக்காக உத்தியோகபூர்வமாக திறந்து வைத்துள்ளது. VIMAN Ja-Ela செயற்திட்டத்தில் வாழ்வியல் எவ்வாறு அமையும் என்பதை இப்போதே அனுபவிக்கும் வாய்ப்பினை வீட்டு உரிமையாளர்களுக்கு வழங்கி, நவீன புறநகர் வாழ்வியலை விரும்புகின்ற கொள்வனவாளர்களுக்கு அதனை மேலும் ஒரு படி நெருக்கமாகக் கொண்டு வந்துள்ளது.
செயற்திட்டம் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற இடத்திலேயே நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த மாதிரி அடுக்குமனைக்கு பார்வையாளர்கள் வருகை தந்து, VIMAN Ja-Ela இல்லத்தில் கிடைக்கவுள்ள உண்மையான அனுபவம், அதன் தள வடிவமைப்பு, அளவுகள், முடிவு வேலைப்பாடுகள், மற்றும் தரத்தை நேரடியாக கண்டு அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிட்டியுள்ளது. சௌகரியம், இயற்கை, மற்றும் நவீன வாழ்வியல் ஆகியவற்றைச் சங்கமிக்கச் செய்யும் வகையில் மிகவும் கவனமாகத் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டுள்ள இட வசதிகளை ஆராய்ந்து அனுபவிக்குமாறு எதிர்காலக் கொள்வனவாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகின்றது. ஜா-எல நகரின் மையப்பகுதியில் இயற்கையான சூழலில் அமைக்கப்பட்டு வருகின்ற VIMAN செயற்திட்டமானது வெறுமனே ஒரு வாழ்விடம் என்பதற்கு அப்பாற்பட்ட ஒரு சௌகரியத்தை வழங்கும் வகையில் மிகக் கவனமாகத் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
சௌகரியம் மற்றும் அன்றாட வாழ்வியல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டு வருகின்ற ஒரு சமூகமாக இது மாறுமென எதிர்பார்க்கப்படுகின்றது. ஆறு ஏக்கருக்கும் மேலான விஸ்தீரணம் கொண்ட இடப்பரப்பில், 60% க்கும் மேற்பட்ட பகுதி பசுமை பொங்கும் சூழலுக்கும், திறந்தவெளி இட வசதிகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அன்றாட வாழ்வின் மையத்தில் இயற்கை மற்றும் சமூக உணர்வு ஆகியவற்றை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகின்றது. குடியிருப்பாளர்கள் சங்கம், நீச்சல் தடாகம், உடற்பயிற்சிக்கூடம், நடைப்பயிற்சி மற்றும் சைக்கிளோட்ட வசதி, சிறுவர்களுக்கான விளையாட்டு வசதிகள், ஈர்ப்புமிக்க வெளிப்புற சமூக ஒன்றிப்புக்கான இட வசதிகள் என மிகவும் சிந்தித்து வடிவமைக்கப்பட்டுள்ள வாழ்வியல் வசதிகள், வயது வேறுபாடின்றி குடியிருப்பாளர்கள் அனைவரும் ஒன்றுகூடி, ஓய்வாகப் பொழுதைப் போக்கி, தமக்கிடையில் அன்னியோன்னியத்தை வளர்ப்பதற்கு வழிவகுக்கும். அம்பலம் போன்ற தனித்துவமான சமூக ஒன்றுகூடல் இட வசதிகள் சமூக உணர்வுக்கு மேலும் உரமூட்டி, அயலவர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்து, ஓய்வாக பொழுதைப் போக்குவதற்கான இயற்கையான அமைவிடங்களை அவர்களுக்கு வழங்குகின்றன.
John Keells Properties நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் துறை தலைமை அதிகாரியும், ஜோன் கீல்ஸ் குழுமத்தின் துணைத் தலைவருமான நதீம் ஷம்ஸ் அவர்கள் இதனைத் திறந்து வைத்துள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடுகையில், “எமது காட்சிப்படுத்தல் அடுக்குமனையைத் திறந்து வைத்துள்ளதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சி அடைவதுடன், VIMAN Ja-Ela செயற்திட்டத்தின் சிறப்பினை நேரடியாக வருகை தந்து அறிந்துகொள்ளுமாறு மக்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம். நாங்கள் இங்கு வழங்கத் திட்டமிட்டுள்ள வாழ்வியலை விபரிப்பது ஒருபுறம் இருந்தாலும், அந்த இடத்திற்குள் நேரே வந்து, அதன் வடிவமைப்பையும் தரத்தையும் நேரடியாகக் காண்பது உண்மையிலேயே ஒரு சிறப்புமிக்க அனுபவமாகும்.”
John Keells Properties நிறுவனத்தால் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற VIMAN Ja-Ela செயற்திட்டமானது, மிகவும் கவனமாகத் திட்டமிடப்பட்ட சூழலில், நவீன வடிவமைப்பு, அன்றாட வசதி, மற்றும் வலுவான சமூக உணர்வு ஆகியன ஒன்றிணைந்த புறநகர் வாழ்வியலின் புதிய அத்தியாயமொன்றைக் குறித்து நிற்கின்றது. கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில், ஜா-எல இடம்மாறல் பகுதியிலிருந்து வெறும் 4 கிமீ தூரத்தில் அமைந்துள்ள இச்செயற்திட்டமானது அமைதியான, அழகியல் சூழல் கொண்ட அமைவிடத்தை, முக்கிய நகர மையங்களுடன் சிறப்பாக இணைக்கும் போக்குவரத்து வசதிகளைக் கொண்டுள்ளது. காட்சிப்படுத்தல் அடுக்குமனையை திறந்து வைத்துள்ளதன் மூலமாக, பார்வையாளர்கள் தற்போது குடியிருப்புக்களின் தளவமைப்பு, தரம், மற்றும் வடிவமைப்பை நேரில் ஆராய்ந்து அனுபவிக்கும் அதேசமயம், வெகுவேகுமாக வளர்ச்சி கண்டு வருகின்ற குடியிருப்பு சுற்றுச்சூழலில் காத்திருக்கும் வாழ்வியலை நேரடியாக அறிந்துகொள்ள முடியும்.
VIMAN Ja-Ela காட்சிப்படுத்தல் அடுக்குமனை தொடர்பான மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள அல்லது அங்கு செல்வதற்கான ஏற்பாட்டை மேற்கொள்ள www.viman.lk என்ற இணையத்தளத்திற்குச் செல்லவும் அல்லது 0706 062 062 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக John Keells Properties நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளவும்.

