Jun 22, 2026 - 03:38 PM -
0
David Pieris Group of Companies நிறுவனத்தின் துணை நிறுவனமும், இலங்கையின் முன்னணி காப்புறுதித் தரகு நிறுவனங்களில் ஒன்றான Assetline Insurance Brokers (Private) Limited (AIBL) ஆனது, Asia Asset Finance பிஎல்சி (AAF) நிறுவனத்துடன் ஒரு மூலோபாயக் கூட்டாண்மையை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட நிதி மற்றும் காப்புறுதித் தீர்வுகளை வழங்குவதற்கான இரு நிறுவனங்களினதும் அர்ப்பணிப்பை இந்த கூட்டாண்மை மீள உறுதிப்படுத்துகிறது.
AAF இன் பரந்த நிதிச் சேவை தளத்தையும், AIBL இன் விசேட காப்புறுதி நிபுணத்துவத்தையும் ஒன்றிணைப்பதன் மூலம், ஒருங்கிணைந்த சேவை வழங்கலை வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கிய படியாக இக் கூட்டாண்மை அமைகிறது. இந்த ஒத்துழைப்பின் மூலம், Asia Asset Finance வாடிக்கையாளர்கள் தங்களது நிதித் தேவைகளுக்குப் பொருத்தமான விரிவான காப்புறுதித் தீர்வுகளை மிக எளிதாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், Assetline Insurance Brokers (Private) Limited (AIBL) நிறுவனம் AAF வாடிக்கையாளர்களுக்கு காப்புறுதிக் கொள்கை ஏற்பாடுகள், காப்புறுதி ஆலோசனை, காப்புறுதி கோரிக்கைக்கான உதவிகள் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட இடர் முகாமைத்துவ தீர்வுகள் உள்ளிட்ட ஆரம்பத்திலிருந்து இறுதி வரையிலான (end-to-end) முழுமையான காப்புறுதிச் சேவைகளை வழங்கும். இந்த கூட்டணி மூலம், காப்புறுதி அணுகலை எளிதாக்கவும், சேவைத் திறனை மேம்படுத்தவும், தொழில்முறை நிபுணத்துவம் மற்றும் வலுவான காப்புறுதி நிறுவன கூட்டாண்மைகளின் ஆதரவுடன், போட்டித்தன்மை வாய்ந்த காப்புறுதி நன்மைகளை வாடிக்கையாளர்கள் பெறுவதை உறுதி செய்யவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இக் கூட்டாண்மை குறித்து AIBL இன் முகாமைத்துவ பிரிவினர் கருத்துத் தெரிவிக்கையில், இக் கூட்டணியானது இலங்கையின் நிதிச் சேவை கட்டமைப்பிற்குள் தமது இருப்பை விரிவுபடுத்தும் வகையிலான நிறுவனத்தின் பரந்த மூலோபாய தொலைநோக்குப் பார்வையுடன் ஒத்துப்போகிறது என்றும், தொழில்நுட்ப நிபுணத்துவம், நம்பகமான காப்புறுதி நிறுவன உறவுகள் மற்றும் உயர்தர சேவைத் தரங்களின் ஆதரவுடன் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட காப்புறுதித் தீர்வுகளை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டனர். இலங்கையின் முன்னணி மற்றும் வேகமாக வளர்ந்து வரும் நிதி நிறுவனங்களில் ஒன்றான Asia Asset Finance PLC நிறுவனம், மூலோபாய விரிவாக்கம் மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட புத்தாக்க கண்டுபிடிப்புகள் மூலம் தனது சந்தை முத்திரையைத் தொடர்ச்சியாக பலப்படுத்தி வருகிறது. தற்போது 115 கிளைகளைக் கொண்ட நாடளாவிய வலையமைப்பைக் கொண்டுள்ளதோடு, முதலாம் காலாண்டிற்குள் மேலும் 10 கிளைகளை நிறுவ திட்டமிட்டுள்ள நிலையில், நகர்ப்புற மற்றும் வளர்ந்து வரும் பிராந்திய சந்தைகள் இரண்டிலும் நம்பகமான நிதித் தீர்வுகளுக்கான அணுகலை விரிவுபடுத்துவதற்கு AAF தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது.
தனது பரந்த வாடிக்கையாளர் மதிப்பு முன்மொழிவின் ஒரு அங்கமாக, வாடிக்கையாளர் வசதி மற்றும் அணுகல் தன்மையை மேம்படுத்தும் மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளை ஒருங்கிணைப்பதன் மூலம் தமது குத்தகை பிரிவைத் AAF தொடர்ச்சியாக மேம்படுத்தி வருகிறது. Assetline Insurance Brokers (Private) Limited (AIBL) உடனான கூட்டாண்மை மூலம், குத்தகை வசதிகளைப் பெறும் வாடிக்கையாளர்கள் காப்புறுதி சேவைகளுக்கான நெறிப்படுத்தப்பட்ட அணுகலைப் பெறுவார்கள். இது தடையற்ற மற்றும் திறனான வாடிக்கையாளர் பயணத்தை உருவாக்குகிறது. இந்த திட்டமானது ஒருங்கிணைந்த நிதித் தீர்வுகள், செயற்பாட்டு வசதி மற்றும் வாடிக்கையாளர்களுக்கு அதிக மதிப்பை வழங்குவதிலான AAF கொண்டுள்ள தொடர்ச்சியான கவனத்திற்கு ஆதரவளிக்கிறது.
இந்த கூட்டாண்மையானது புத்தாக்கம், செயற்பாட்டு விசேடத்துவம் மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட சேவை வழங்கல் ஆகியவற்றில் இரு நிறுவனங்களுக்கும் உள்ள பகிரப்பட்ட அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. தமக்குரித்தான பலத்தைப் பயன்படுத்துவதன் மூலம், Assetline Insurance Brokers (Private) Limited (AIBL) மற்றும் Asia Asset Finance ஆகிய இரு நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு நீண்டகால மதிப்பை வழங்குவதோடு, இலங்கையில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் காப்புறுதிச் சேவைகளில் புதிய வரையறைகளை அமைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.
David Pieris Group of Companies தலைவரும் அதன் முகாமைத்துவ பணிப்பாளருமான திரு. ரோஹண திஸாநாயக்க மற்றும் Asia Asset Finance PLC நிறுவனத்தின் பணிப்பாளரும் அதன் பிரதம செயற்பாட்டு அதிகாரியுமான திரு.ரொஷான் குணசேகர ஆகியோர் நிறுவனங்களுக்கிடையிலான கூட்டாண்மை ஒப்பந்தத்தை பரிமாறிக்கொண்ட போது எடுக்கப்பட்ட படம். இதில் Assetline Insurance Brokers (Private) Limited நிறுவனத்தின் தலைவர் திரு.தனிக டி சில்வா; முகாமைத்துவ பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி/முதன்மை அதிகாரி திரு.நிஹால் ஹந்துன்கே; விற்பனை பிரிவு பணிப்பாளர் திரு.மகேஷ் டி அல்விஸ்; பிரதம செயற்பாட்டு அதிகாரி திரு.அநுராத ஹெட்டிகே; Asia Asset Finance PLC நிறுவனத்தின் தயாரிப்பு செயற்பாடுகளுக்கான பொது முகாமையாளர் திரு.ஜயந்த வீரப்புலிகே; கிளை செயற்பாடுகளுக்கான பொது முகாமையாளர் திரு.சஜித் அத்தபத்து; குத்தகை சந்தைப்படுத்தல் பிரிவின் உதவிப் பொது முகாமையாளர் திரு.அயந்த சம்பத் மற்றும் குத்தகை செயற்பாடுகளுக்கான பிரதம முகாமையாளர் திரு.பிரியந்த விஜேசிங்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

