Header Logo

வணிகம்
SLT-MOBITEL Games 2026 இனால் ஒற்றுமை, குழுப்பணி மற்றும் சுறுசுறுப்பான விளையாட்டுத்திறன் ஆகியவற்றுடன் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் சிறப்பிப்பு

Jun 23, 2026 - 02:51 PM -

0

SLT-MOBITEL Games 2026 இனால் ஒற்றுமை, குழுப்பணி மற்றும் சுறுசுறுப்பான விளையாட்டுத்திறன் ஆகியவற்றுடன் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் சிறப்பிப்பு

அறிமுக SLT-MOBITEL Games 2026 இன் ஒரு அங்கமாக, SLT-MOBITEL Athletics Championships 2026 போட்டிகள் 2026 ஜூன் 20 அன்று கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இடம்பெற்றன. 

SLT-MOBITEL Games 2026, ஒற்றுமை, குழுப்பணி மற்றும் ஆரோக்கியமான போட்டித்திறன் ஆகியவற்றை சிறப்பிக்கும் வகையிலும், விளையாட்டு மற்றும் பகிரப்பட்டதொரு குறிக்கோளின் ஊடாக குழுக்களை ஒன்றிணைப்பதற்காகவும் வடிவமைக்கப்பட்ட, நிறுவனத்தின் முதன்மையான ஊழியர் ஈடுபாட்டு முயற்சிகளில் ஒன்றைத் ஆரம்பித்துள்ளது. 

இத்தடகள சாம்பியன்ஷிப் தொடரானது, உத்தியோகபூர்வ கொடியேற்றம், சிரேஷ்ட தலைமையக அதிகாரிகளின் வரவேற்பு உரைகள், பலூன்கள் பறக்கவிடப்படல் மற்றும் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்படல் உள்ளிட்ட அடையாளப்பூர்வமான நிகழ்வுகள் மற்றும் முழுமையான தடகளப் போட்டித் திட்டங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமைந்திருந்ததுடன், மாலையில் இடம்பெற்ற உத்தியோகபூர்வ பரிசளிப்பு விழாவுடன் நிறைவடைந்தது. 

தடகளப் போட்டிகள் வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பரந்தளவிலான SLT- MOBITEL Games 2026 இன் உள்ளடக்கமாக பூப்பந்தாட்டம், கிரிக்கெட், கால்பந்து, நீச்சல், கரப்பந்தாட்டம், சதுரங்கம், கெரம் மற்றும் வலைப்பந்தாட்டம் உள்ளிட்ட ஏனைய பிரதான விளையாட்டுப் போட்டிகள் வரவிருக்கும் வாரங்களில் நடைபெறவுள்ளன. 

ஒட்டுமொத்தமாக, இந்நிகழ்வுகள் குழுப்பணி மற்றும் விளையாட்டுப் பண்புகளை சிறப்பிப்பது மட்டுமன்றி, ஒரு துடிப்பான, நெகிழ்ச்சிமிக்க மற்றும் உயர் செயல்திறன் கொண்ட பணியாளர்களைக் கட்டியெழுப்புவதன் மூலம், மனித உயிர்களை இணைப்பதுடன் அவர்களின் வாழ்வை வளம்படுத்துவதுமான நிறுவனத்தின் தொலைநோக்குப் பார்வையையும் வெளிப்படுத்துகின்றன. இந்த முன்முயற்சியானது நல்வாழ்வு, ஒத்துழைப்பு மற்றும் ஒழுக்கத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன், நிறுவனம் முழுவதும் நெகிழ்ச்சித்தன்மை மற்றும் சிறந்து விளங்கும் பண்பை மேலும் வலுப்படுத்துகின்றது. 

SLT மற்றும் மொபிடெல் ஆகியவற்றின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய SLT-MOBITEL Sports Council 2026/27, இத்தடகள சம்பியன்ஷிப் போட்டிகள் தடையின்றி சீராக ஒழுங்கமைக்கப்படுவதை உறுதி செய்வதற்காக அவற்றை ஒருங்கிணைத்தது. அத்துடன், இந்த வாரியமானது ஊழியர்களின் பெருமிதம் மற்றும் பங்களிப்புக்கான SLT‑MOBITEL இன் அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்தியதுடன், குழுமம் முழுவதிலும் உள்ள விளையாட்டு சங்கங்களின் ஈடுபாட்டை ஊக்குவித்து அவற்றுக்கான ஆதரவையும் வழங்கியது. 

தமது பணியாளர்கள் நிறுவனத்தின் வலிமை என்பதில் SLT-MOBITEL உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளது. SLTM Games 2026 இனால் மனித உயிர்களை இணைப்பதுடன் அவர்களின் வாழ்வை வளம்படுத்துவதுமான நிறுவனத்தின் தொலைநோக்குப் பார்வையைப் பிரதிபலிப்பதுடன், அனைத்துக் குழுக்கள் மற்றும் பல்வேறு பின்னணிகளைக் கொண்ட ஊழியர்களுக்கு ஒரே குடும்பமாக ஒன்றிணைவதற்கான வாய்ப்பையும் வழங்குகின்றது.


MOST READ

காணொளி
முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

இன்று மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம்!

இன்று மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம்!

நீதி அமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!

நீதி அமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!

செம்மணியில் போராட்டம்!

செம்மணியில் போராட்டம்!

யாழில் அர்ச்சுனாவுக்கு செருப்பு மாலை!

யாழில் அர்ச்சுனாவுக்கு செருப்பு மாலை!

அர்ச்சுனா - கஜேந்திரகுமார் இடையே மீண்டும் வாக்குவாதம்

அர்ச்சுனா - கஜேந்திரகுமார் இடையே மீண்டும் வாக்குவாதம்