Jun 25, 2026 - 08:35 AM -
0
David Pieris Group of Companies நிறுவனத்தின் துணை நிறுவனமும், இலங்கையின் முன்னணி காப்புறுதித் தரகு நிறுவனங்களில் ஒன்றான Assetline Insurance Brokers (Private) Limited (AIBL), நாடு முழுவதிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட மதிப்பு, வசதி மற்றும் விரிவான காப்புறுதித் தீர்வுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, Toyota Lanka (Private) Limited நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) ஒன்றில் கைச்சாத்திட்டு, மூலோபாயக் கூட்டாண்மையில் இணைந்துள்ளது.
இந்த ஒத்துழைப்பானது, வாடிக்கையாளர் விசேடத்துவம் மற்றும் சேவைப் புத்தாக்கத்திற்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்பைக் கொண்ட இரண்டு நம்பகமான தொழில்துறைத் தலைவர்களை ஒன்றிணைக்கிறது. இந்தக் கூட்டாண்மையின் மூலம், Toyota Lanka நிறுவனத்திடம் இருந்து வாகனங்களை கொள்வனவு செய்தல் மற்றும் அதன் புகழ்பெற்ற விற்பனைக்குப் பிந்தைய சேவைகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், Assetline Insurance Brokers (Private) Limited (AIBL) மூலம் வழங்கப்படும் பரந்த அளவிலான காப்புறுதி தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
சுமார் இரண்டு தசாப்தகாலத்திற்க்கும் மேலான தொழில்துறை அனுபவத்தைக் கொண்ட Assetline Insurance Brokers (Private) Limited (AIBL) நிறுவனம், இலங்கையின் இரண்டாவது மிகப் பெரிய காப்புறுதித் தரகு நிறுவனமாக தன்னை நிலைநிறுத்தியுள்ளதுடன், தனிநபர்களுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் நிபுணத்துவ காப்புறுதி ஆலோசனை சேவைகளையும் தனிப்பயனாக்கப்பட்ட இடர் முகாமைத்துவ தீர்வுகளையும் வழங்கி வருகிறது.
AIBL நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு தங்களுக்கு விருப்பமான காப்புறுதி நிறுவனத்திடமிருந்து காப்புறுதிப் பாதுகாப்பைத் தெரிவு செய்யும் நெகிழ்வுத்தன்மையை வழங்குவதுடன், அவர்களின் குறிப்பிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட தொழில்முறை வழிகாட்டல் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட தீர்வுகளிலிருந்தும் அவர்கள் பயனடைய வழிவகுக்கிறது. நுகர்வோரை மையமாகக் கொண்ட இந்த அணுகுமுறை, போட்டித்தன்மை வாய்ந்த விதிமுறைகளின் கீழ் மிகவும் பொருத்தமான பாதுகாப்பைப் பெற்றுக்கொள்வதை உறுதி செய்கிறது.
இக்கூட்டாண்மையானது, விசுவாசம், நேர்மை, நியாயம், நெறிமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட "TOYOTA LIFE" எனும் மதிப்புக் கட்டமைப்பினால் வழிநடத்தப்படும் ஒரு முழுமையான போக்குவரத்துத் தீர்வை வழங்குவதற்கான Toyota Lanka நிறுவனத்தின் அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்துகிறது.
வாடிக்கையாளர்களின் பயணத்தில் நம்பகமான காப்புறுதிச் சேவைகளை ஒருங்கிணைப்பதன் மூலம், Toyota Lanka மற்றும் Assetline Insurance Brokers (Private) Limited (AIBL) ஆகிய நிறுவனங்கள் தடையற்ற வாகன உரிமையாளர் அனுபவத்தை வழங்கவுள்ளன. வாகனக் கொள்வனவு மற்றும் பராமரிப்பு முதல் காப்புறுதிப் பாதுகாப்பு மற்றும் இழப்பீட்டுக் (claims) கோரிக்கை உதவி வரையிலான தமது பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் வாடிக்கையாளர்கள் விரிவான ஆதரவைப் பெறுவார்கள்.
இக் கூட்டாண்மை குறித்துக் கருத்துத் தெரிவித்த இரு நிறுவனங்களின் பிரதிநிதிகளும், வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட சேவை, எளிதான அணுகல் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றில் தங்களின் கவனத்தை வலியுறுத்தினர். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது அதிக வசதி, காப்புறுதித் தீர்வுகளுக்கான மேம்பட்ட அணுகல் மற்றும் மேம்படுத்தப்பட்ட வாடிக்கையாளர் திருப்தி ஆகியவற்றை வழங்குவதற்கான ஒரு தளத்தை அமைத்துக் கொடுக்கிறது.
இந்த மூலோபாயக் கூட்டணியானது, வாடிக்கையாளர்களுக்கு நீடித்த பலன்களை உருவாக்கும் அர்த்தமுள்ள கூட்டாண்மைகளை உருவாக்குவதற்கும், மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளை விரிவுபடுத்துவதற்கும் Assetline Insurance Brokers (Private) Limited (AIBL) கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. அதே வேளையில், இது இலங்கையின் காப்புறுதி மற்றும் வாகனத் துறைகளின் தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கும் ஆதரவளிக்கிறது. Assetline Insurance Brokers (Private) Limited (AIBL) மற்றும் Toyota Lanka ஆகிய நிறுவனங்கள் இணைந்து, இலங்கை முழுவதிலும் உள்ள வாகன உரிமையாளர்களின் நம்பிக்கை மற்றும் வசதியை மேம்படுத்தும் நம்பகமான ஆலோசனைகள், தரமான சேவை மற்றும் விரிவான பாதுகாப்புத் தீர்வுகள் மூலம் சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்க ஆவலுடன் எதிர்பார்க்கின்றன.

