Jun 25, 2026 - 05:10 PM -
0
ஹோ சி மினா சிட்டி (Ho Chi Minh City) இடையிலான நேரடி விமான சேவைகளுக்கான டிக்கட் முற்பதிவுகளை Vietjet ஆரம்பித்துள்ளது. விசேட அறிமுகக் கட்டணங்களுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த சேவை 2026 ஆகஸ்ட் 18 ஆம் திகதி முதல் இடம்பெறவுள்ளது. இலங்கை மற்றும் வியட்நாம் இடையிலான முதலாவது நேரடி விமான தொடர்பாக இந்த அமைந்திருக்கும் என்பதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலா, வியாபாரம் மற்றும் கலாசார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய பயணத்தடத்தை கொண்டாடும் வகையில், Vietjet இனால் ஒரு வழிக் கட்டணமாக (சகல கட்டணங்களும் அடங்கலாக) 90 அமெரிக்க டொலர்களை வழங்குகிறது. Deluxe மற்றும் SkyBoss டிக்கட்களை பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அடிப்படை கட்டணங்களில் (வரிகள் மற்றும் கட்டணங்கள் நீங்கலாக) 20% விலைக்கழிவைப் பெற்றுக் கொள்ளவும் முடியும். டிக்கட்கள் தற்போது Vietjet இன் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.vietjetair.com இலும், “Vietjet Air” மொபைல் app இலும், டிக்கட் அலுவலகங்கள் மற்றும் அங்கீகாரம் பெற்ற பிரயாண முகவர்களிடமும் பெற்றுக் கொள்ளலாம்.
கொழும்பு – ஹோ சி மினா சிட்டி (Ho Chi Minh City) இடையிலான பயண சேவைகள், செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமை என வாரத்தில் மூன்று தடவைகள் இடம்பெறும். பறப்பு நேரம் சுமார் ஐந்து மணித்தியாலங்களாக அமைந்திருக்கும். இலங்கையின் வணிக மையத்தை, தென்கிழக்காசியாவின் முன்னணி திறவுகோல் பகுதியுடன் சௌகரியமான மற்றும் வேகமான இணைப்பை வழங்குவதாக இந்த சேவை அமைந்திருக்கும். Vietjet இன் விரிவாக்கல் வலையமைப்பினூடாக, கொழும்பிலுள்ள பயணிகளுக்கு, ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பிரதான நகரங்கள் மற்றும் சுற்றுலா மையங்களுடன் ஒப்பற்ற வகையில் இணைப்பை ஏற்படுத்த முடியும். வியட்நாமின் மிகப்பெரிய நகரமும் பொருளாதார மையமுமான ஹோ சி மினா சிட்டி (Ho Chi Minh City), அந்நாட்டின் செழுமையான கலாசாரம், செழித்தோங்கும் வர்த்தகம் மற்றும் சமகால நவீன வாழ்க்கை முறை ஆகியவற்றுக்கான திறவுகோலாக அமைந்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க அடையாளங்கள், நவீன வானுயர்ந்த கட்டிடங்களுக்கு இணையாக கம்பீரமாக தோன்றுகின்றன. அத்துடன், இந்நகரத்தின் புகழ்பெற்ற உணவு கலாசாரம், துடிப்பான இரவு வாழ்க்கை மற்றும் செழித்து வளரும் கலை சமூகம் ஆகியவை ஒவ்வொரு பயணிக்கும் ஏற்ற பலதரப்பட்ட அனுபவங்களை வழங்குகின்றன. உலகப் புகழ்பெற்ற Cu Chi Tunnels மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த Independence Palace முதல், Nguyen Hue Walking Street ஐ நோக்கியவாறு அமைந்துள்ள அழகிய cafésகள் வரை, இந்நகரம் பாரம்பரியம் மற்றும் நவீனத்துவத்தின் ஒரு ஈர்க்கக்கூடிய கலவையை அழகாக வெளிப்படுத்துகின்றது. மறுபுறம், வியட்னாமிய பயணிகளுக்கு இலங்கையின் செழுமையான கலாசார பாரம்பரியம், அழகிய கடற்கரைகள், பசுமையான தேயிலைத் தோட்டங்கள் மற்றும் உலகப் புகழ்பெற்ற வனவிலங்குகள் ஆகியவற்றை மிக இலகுவாகச் சென்றடைவதற்கான வாய்ப்பை வழங்குவதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான இருவழிச் சுற்றுலாத்துறையை மேலும் ஊக்குவிக்கின்றது.
Vietjet விமானத்தில் பயணிக்கும் பயணிகள், அதன் நட்புரீதியான விமானப்பணிப் ஊழியர்களால் பரிமாறப்படும் pho மற்றும் banh mi போன்ற வியட்நாமின் பாரம்பரிய உணவுகள் உள்ளிட்ட பலதரப்பட்ட சூடான சுவைமிகு உணவுகளை விமானத்தினுள் பெற்று மகிழலாம். பயணிகள் தங்களுக்குத் தேவையான உணவுகளை முன்கூட்டியே ஓடர் செய்வதன் மூலம் 30% வரையான கட்டணச் சேமிப்பைப் பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன், Vietjet SkyJoy விசுவாசத் திட்டத்தின் உறுப்பினர்கள், சுற்றுலா, உணவகங்கள், ஷொப்பிங் மற்றும் வாழ்க்கை முறை சார்ந்த 250 க்கும் மேற்பட்ட பங்காளர் பிராண்டுகளின் வலையமைப்பினூடாக புள்ளிகளைப் பெற்றுக்கொள்ளவும் அவற்றை மீளப் பயன்படுத்தவும் முடியும்.
வியட்நாமின் முன்னணி நவீனயுக விமானச் சேவை நிறுவனமான Vietjet, தனது இளமையான மற்றும் நவீன விமானக் கட்டமைப்பு, விரிவடைந்து வரும் சர்வதேச வலையமைப்பு மற்றும் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய புத்தாக்கமான சேவைகள் ஆகியவற்றின் ஊடாக ஆசிய-பசிபிக் பிராந்தியம் மற்றும் அதற்கும் அப்பாலுள்ள பகுதிகளுக்கான வான்வழித் தொடர்புகளைத் தொடர்ந்தும் விரிவாக்கி வருகின்றது. இந்த விமான சேவை தற்போது 135 விமானங்களைக் கொண்ட கட்டமைப்பை இயக்கி வருவதுடன், மேலும் தங்களின் நீண்டகால வளர்ச்சி மூலோபாயம் மற்றும் உலகளாவிய வலையமைப்பு விரிவாக்கத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் கிட்டத்தட்ட 600 புதிய விமானங்களுக்கான கொள்வனவுப் பதிவுகளையும் மேற்கொண்டுள்ளது.
Vietjet பற்றி:
புதுயுக விமானச் சேவை நிறுவனமான Vietjet, வியட்நாமின் வான்வழித் துறையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், பிராந்திய அளவிலும் உலகளாவிய ரீதியிலும் ஒரு முன்னோடி விமானச் சேவையாகத் திகழ்ந்து வருகின்றது. இந்நிறுவனம் தற்போது 135 விமானங்களைக் கொண்ட கட்டமைப்பை இயக்கி வருவதுடன், பரந்த மற்றும் குறுகிய உடல் அமைப்பைக் கொண்ட இருவகை விமானங்களையும் உள்ளடக்கியதாக கிட்டத்தட்ட 600 புதிய விமானங்களுக்கான கொள்வனவுப் பதிவுகளையும் மேற்கொண்டுள்ளது. செலவின முகாமைத்துவத் திறன், பயனுள்ள செயல்பாடுகள் மற்றும் செயற்திறன் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதுடன், அனைத்து நடவடிக்கைகளிலும் அதிநவீன தொழில்நுட்பத்தைப் புகுத்தி புதிய போக்குகளுக்குத் தலைமை வகிக்கும் Vietjet, வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகப் பலதரப்பட்ட சேவைகளுடன் கூடிய கட்டணச் சேமிப்பு மற்றும் நெகிழ்வுத்தன்மை மிக்க வான்வழிப் பயண வாய்ப்புகளை வழங்குகின்றது.
Vietjet நிறுவனம், சர்வதேச வான்வழிப் போக்குவரத்து சங்கத்தின் (IATA) செயற்பாட்டு பாதுகாப்பு கணக்காய்வு (IOSA) சான்றிதழைப் பெற்ற ஒரு முழு அளவிலான அங்கத்துவ நிறுவனமாகும். வியட்நாமின் மிகப்பெரிய தனியார் விமானச் சேவை நிறுவனமான இதற்கு, உலகின் ஒரே ஒரு பாதுகாப்பு மற்றும் தயாரிப்பு மதிப்பீட்டு இணையத்தளமான airlineratings.com நிறுவனத்தினால் பாதுகாப்பிற்கான மிக உயர்ந்த 7 நட்சத்திர அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன், Airfinance Journal இனால் தொடர்ந்து பல வருடங்களாக ஆரோக்கியமான நிதிநிலை மற்றும் செயல்பாடுகளைக் கொண்ட உலகின் சிறந்த 50 விமானச் சேவை நிறுவனங்களில் ஒன்றாகவும் பட்டியலிடப்பட்டுள்ளது. அத்துடன், Skytrax, CAPA, Airline Ratings போன்ற புகழ்பெற்ற சர்வதேச அமைப்புகளினால் உலகின் சிறந்த குறைந்த கட்டண விமானச் சேவை நிறுவனம் எனவும் Vietjet பலமுறை பெயரிடப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு www.vietjetair.com

