Header Logo
SLIC
வணிகம்
FIFA உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கான மறக்க முடியாத பயணம்: கொம்பேங்க் VISA அட்டைதாரர்களுக்குக் கிடைத்த அரிய வெகுமதி

Jun 30, 2026 - 10:21 AM

FIFA உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கான மறக்க முடியாத பயணம்: கொம்பேங்க் VISA அட்டைதாரர்களுக்குக் கிடைத்த அரிய வெகுமதி
Mobitel Inner 1278
EDEX Inner

இலங்கையின் கொமர்ஷல் வங்கியானது, Visa நிறுவனத்துடன் இணைந்து, VISA கடனட்டை வைத்திருக்கும் இரு வாடிக்கையாளர்களுக்கு உலக விளையாட்டுத் துறையில் மிகவும் விரும்பப்படும் நிகழ்வுகளில் ஒன்றான 2026 FIFA உலகக் கோப்பை இறுதிப்போட்டியை அமெரிக்காவில் நேரில் காணும் அபூர்வமான வாய்ப்பை வழங்கியுள்ளது. 

கொமர்ஷல் வங்கி Visa Platinum, Signature மற்றும் Infinite கடனட்டைதாரர்களுக்கு மட்டுமே நடத்தப்பட்ட சிறப்பு செலவின ஊக்குவிப்பு திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த இரண்டு வெற்றியாளர்களும், தங்களுடன் ஒரு துணை நபருடன, 2026 ஜூலை 19ஆம் திகதி அமெரிக்காவின் நியூ ஜெர்சியின் ஈஸ்ட் ரதர்ஃபோர்டில் அமைந்துள்ள MetLife Stadium-இல் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியை நேரில் பார்வையிட பயணம் செய்யவுள்ளனர். 

இந்த பிரசாரம் 2026 மார்ச் 15 முதல் மே 10 வரை மேற்கொள்ளப்பட்ட கடனட்டை செலவினங்களை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்டது. அதன் இறுதியில் நடைபெற்ற குலுக்கல் மூலம் அதிர்ஷ்டசாலியான இரண்டு வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒவ்வொரு வெற்றியாளரும் FIFA உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கான இரண்டு நுழைவுச்சீட்டுகள், அமெரிக்காவிற்கான இருவழி வர்த்தக வகுப்பு விமானப் பயணச் சீட்டுகள், மேலும் இருவருக்கான நான்கு இரவுகள் கொண்ட முழுச் செலவினமும் ஏற்கப்பட்ட சுற்றுலா தொகுப்பு (ஆடம்பர தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதிகளுடன்) ஆகியவற்றைப் பெறுவார்கள். 

இந்த முயற்சி தொடர்பாக கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அதிகாரியுமான திரு. சனத் மனதுங்க தெரிவிக்கையில்: 

எமது வாடிக்கையாளர்களுக்கு உலகத் தரத்திலான தனித்துவமான அனுபவங்களை வழங்குவதில் தொடர்ந்து ஒத்துழைத்து வரும் ஏளைய நிறுவனத்திற்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். FIFA உடனான Visa-வின் நீண்டகால பங்குடைமை, எமது அட்டைதாரர்களுக்கு ஒரு அசாதாரணமான வாய்ப்பை உருவாக்கியுள்ளது. அவர்களின் விசுவாசத்திற்கு பாராட்டாக, வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கக்கூடிய FIFA உலகக் கிண்ண இறுதிப்போட்டிப் பயணத்தை வழங்குவதில் Visa உடன் இணைந்து செயல்படுவதில் நாம் மகிழ்ச்சி அடைகிறோம். கொமர்ஷல் வங்கியாக, வழக்கமான சலுகைகளைத் தாண்டி அர்த்தமுள்ள அனுபவங்கள் மூலம் அட்டைதாரர்களுக்கு மேலதிக பெறுமதியை வழங்குவதில் எப்போதும் உறுதியாக இருக்கிறோம். இந்த பிரசாரம், உலகின் மிக உயர்ந்த விளையாட்டு அரங்கில் அந்த அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. 

இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான Visa நிறுவனத்தின் வதிவிட முகாமையாளர் திருமதி அவந்தி கொலம்பகே தெரிவிக்கையில்: 

பணத்தால் பெற முடியாத அனுபவங்களை வழங்குவதற்காக கொமர்ஷல் வங்கியுடன் பங்குடைமை மேற்கொண்டிருப்பதில் Visa பெருமை கொள்கிறது. உலகக் கால்பந்தாட்டத்தின் உச்ச நிகழ்வை நேரில் அனுபவிக்கும் வாய்ப்பை ஆர்வமிக்க ரசிகர்களுக்கு வழங்குவது, எமது உலகளாவிய வலையமைப்பு பிரத்தி யேக பங்குடைமைகள் மூலம் மக்களின் வாழ்க்கையை மேலும் வளப்படுத்துவதற்கான எமது அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது. 

கொமர்ஷல் வங்கியின் கடன் மற்றும் வரவட்டைகள், இலங்கை முழுவதும் ஆண்டு முழுவதும் பல்வேறு சிறப்பு சலுகைத் திட்டங்களை வழங்குகின்றன. இதன் மூலம் அட்டைதாரர்கள், சில்லறை விற்பனை, உணவகங்கள், வாழ்க்கை முறை மற்றும் பயணத் துறைகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பிரத்தியேக விலைக்கழிவுகள் மற்றும் சலுகைகளைப் பெறுவதற்கான தொடர்ச்சியான வாய்ப்புகளை அனுபவிக்க முடிகிறது. மேலும், வங்கி தனது வர்த்தகப் பங்களர்களுடனான உறவுகளை தொடர்ந்து வலுப்படுத்தி வருவதுடன், தனது ஊக்குவிப்பு மற்றும் சலுகைத் திட்டங்களின் பரப்பளவையும் விரிவுபடுத்தி வருகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் ஆண்டு முழுவதும் கணிசமான நன்மைகளையும், மதிப்புமிக்க மற்றும் மகிழ்ச்சியான அனுபவங்களையும் பெறுவதை உறுதி செய்கிறது.


MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278