Header Logo
SLIC
வணிகம்
Prime Residencies இனால் லேக் டிரைவ், கொழும்பு 08 இல் THE GOLF வதிவிடத் தொகுதியின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

Jun 30, 2026 - 03:56 PM

Prime Residencies இனால் லேக் டிரைவ், கொழும்பு 08 இல் THE GOLF வதிவிடத் தொகுதியின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்
Mobitel Inner 1278
EDEX Inner

நவீன ரியல் எஸ்டேட் துறையின் முன்னோடியான நிறுவனமும், Prime Group இன் துணை நிறுவனமுமான Prime Residencies, தனது அதிநவீன ஆடம்பர குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டமான THE GOLF இன் கட்டுமானப் பணிகளின் ஆரம்பத்தை, கொழும்பு 8 இல் உள்ள லேக் டிரைவ் திட்டத் தளத்தில் நடைபெற்ற அதன் உத்தியோகபூர்வ அடிக்கல் நாட்டு விழாவுடன் அடையாளப்படுத்தியது. இந்நிகழ்வு, முக்கிய பங்குதாரர்களையும் திட்ட பங்காளர்களையும் ஒன்றிணைத்து உத்தியோகபூர்வமாக நிலம் அகழ்ந்து அடிக்கல் நாட்டப்பட்டதை குறித்ததுடன், நீண்டகாலமாக வடிவமைக்கப்பட்ட ஒரு தொலைநோக்கு பார்வை தற்போது கட்டுமானத்தில் உள்ளது என்பதையும் வெளிப்படுத்தியது. 

பெருமைக்குரிய கொழும்பு Royal Colombo Golf Club ஐ எல்லையாகக் கொண்டு, அதன் எழில்மிகு காட்சிகளை நோக்கியவாறு அமையப் பெறும் THE GOLF, Prime Residencies இன் One Collection இன் ஒரு அங்கமாகும் — இது நேர்த்தி, சுத்திகரிப்பு மற்றும் காலத்தால் அழியாத வடிவமைப்பால் வடிவமைக்கப்பட்ட அதி-ஆடம்பர குடியிருப்புகளின் ஒரு அரிய மற்றும் வரையறுக்கப்பட்ட தொகுப்பாகும். பரந்து விரிந்த புல்வெளிக்காட்சிகள் மற்றும் பசுமையான சூழலால் சூழப்பட்ட இந்த மேம்பாட்டுத் திட்டம், சிந்தனைமிக்கதாக வடிவமைக்கப்பட்ட உட்புறங்கள், மேம்படுத்தப்பட்ட வசதிகள் மற்றும் அதிநவீன வாழ்க்கை இடங்கள் ஆகியவற்றை ஒன்றிணைத்து, ஒரு தனித்துவமான விலாசத்தை உருவாக்குவதன் மூலம், ஓர் அரிய அமைதியையும் அந்தஸ்தையும் வழங்குகின்றது. THE GOLF இல், ஒவ்வொரு விவரமும் நுணுக்கம், தனித்துவம், மற்றும் கோல்ஃப் மரபின் நிலைத்த சிறப்பை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தரம் கௌரவம் மற்றும் உயர்ந்த வாழ்க்கை முறையை வெளிப்படுத்தும் ஒரு தனித்துவமான வாழ்வியல் அனுபவத்தை வழங்குகிறது. 

ரூ. 95,700,000 முதல் ஆரம்பிக்கும் விலைகளைக் கொண்ட இக்குடியிருப்புகள், இரண்டாவது மாடியிலிருந்து ஆரம்பமாகின்றன. ஒரு பிரத்தியேக boutique development ஆக அமைந்திருக்கும், THE GOLF நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட 66 இரண்டு மற்றும் மூன்று படுக்கையறைகளைக் கொண்ட குடியிருப்புகளைக் கொண்டுள்ளதுடன், இந்த முகவரியின் அடையாளமாகத் திகழும் பரந்த எழில்மிகு காட்சிகளை மிகச்சிறந்த முறையில் நுகர்வதற்கேற்ற தனித்துவமான அமைவிடத்தைக் கொண்டுள்ளது. இக்கட்டுமான மேம்பாடானது K.D Piling [Pvt] Limited நிறுவனத்தினால் pile foundation அமைப்பைக் கொண்டு கட்டப்படவுள்ளது. இது Prime Group தனது ஒவ்வொரு திட்டத்திற்கும் கொண்டுவரும் கட்டமைப்பு ஒருமைப்பாடு மற்றும் கட்டுமானத் தரத்தைப் பிரதிபலிக்கின்றது. 

இவ்மேம்பாட்டுத் திட்டத்தின் தனித்துவமான சிறப்பம்சங்களில் ஒன்றாக, தேர்ந்தெடுக்கப்பட்ட சில குடியிருப்புகளில் அமைக்கப்பட்டுள்ள பிரத்தியேக நீச்சல் தடாகங்கள் விளங்குகின்றன. இவை Royal Colombo Golf Club இன் புல்வெளிப் பாதைகளை நோக்கியவாறு ஒப்பிடமுடியாத எழில்மிகு காட்சிகளை வழங்குவதுடன், திறந்த வானத்தின் கீழ் வெளிப்படும் அமைதி, தனியுரிமை மற்றும் அதிநவீன வாழ்க்கை முறை ஆகியவற்றின் ஒரு தனித்துவமான கலவையை உருவாக்குகின்றன. அத்துடன் இது அங்குள்ள தூய்மையான பசுமையினால் மேலும் அழகூட்டப்படுகின்றது. மேலும், car hoist system வசதியின் மூலமாக இரட்டை வாகன நிறுத்துமிட வசதியும் இங்கு இலகுபடுத்தப்பட்டுள்ளது. 

இந்தத் திட்டத்தின் rooftop level, பிரத்தியேகமானதொரு தங்குமிடமாக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், இங்கு சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கான நீச்சல் தடாகங்கள், முழுமையாக வசதிப்படுத்தப்பட்ட உடற்பயிற்சிக்கூடம், கொண்டாட்ட மண்டபம், 'தி The Sunset Lounge, poolside bar மற்றும் சிறுவர்கள் கூரைத்தளத்தின் தளர்வான சூழலில் விளையாடவும், வாசிக்கவும் மற்றும் புதியனவற்றை ஆராயவும் கூடிய திறந்தவெளி வெளிப்புற இடமான Little Greens Club ஆகியன அமைக்கப்பட்டுள்ளன. இக்குடியிருப்புகள் முழுமையாகப் பொருத்தப்பட்ட சமையலறைகளுடன் அமைவதுடன், தரைத்தளத்தில் சிந்தனைமிக்கதாக வடிவமைக்கப்பட்டுள்ள வருகை மண்டபம் மற்றும் லவுஞ்ச் ஆகியவற்றுடன் கூடிய on-site concierge services, குடியிருப்பாளர்கள் கதவைக் கடந்து உள்ளே நுழையும் கணம் முதலே அதற்கான உன்னத வாழ்க்கை முறைக்கான சூழலை அமைத்துக் கொடுக்கின்றன. 

Prime Group குழும தவிசாளர் பிரேமலால் பிராஹ்மனகே கருத்துத் தெரிவிக்கையில், “கொழும்பின் மிகவும் மதிப்பு மிக்க மற்றும் விரும்பத்தக்க குடியிருப்பு முகவரிகளில் ஒன்றாக THE GOLF திகழ்கின்றது. இத்தகைய வாய்ப்புகள் விதிவிலக்கான முறையில் மிகவும் அசாதாரணமானவை ஆகும்; ஏனெனில், மிகக் குறைந்த எண்ணிக்கையிலான தேர்ந்தெடுக்கப்பட்ட வீட்டு உரிமையாளர்கள் மட்டுமே இந்த மதிப்புமிக்க அடையாளத்தை நேரடியாக நோக்கியவாறு வாழும் வாய்ப்பைப் பெறுகின்றனர். அதியுயர் பிரத்தியேகத்தன்மை, அந்தஸ்து மற்றும் விதிவிலக்கான வாழ்க்கை முறை ஆகியவற்றை மிக அதிகளவிலான தேவையைக் கொண்ட ஒரு பிராந்தியத்தில் ஒன்றிணைக்கும் இந்த மேம்பாட்டுத் திட்டம், உண்மையிலேயே ஓர் அரிய படைப்பாகும்.” என்றார். 

கொள்வனவாளர்களிடமிருந்து கிடைத்துள்ள அமோக வரவேற்பு, இந்தத் தனித்துவமான மேம்பாட்டுத் திட்டத்தின் விதிவிலக்கான ஈர்ப்புத் தன்மையைப் பிரதிபலிக்கின்றது. இக்குடியிருப்புகளின் கணிசமான பெரும்பகுதி ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், மிகக் குறைந்த எண்ணிக்கையிலான அலகுகள் மட்டுமே விற்பனைக்காக எஞ்சியுள்ளன. இந்த வலுவான தேவையானது, இத்தகையதொரு அரிய மற்றும் மதிப்புமிக்க அமைவிடத்தில் ஒரு குடியிருப்பை சொந்தமாக்கிக் கொள்வதற்கு, நுணுக்கமான அறிவுக் கூர்மையுடைய வீட்டு உரிமையாளர்கள் வழங்கும் அதியுயர் மதிப்பை வெளிப்படுத்துகின்றது. 

30 வருட கால அனுபவம், 70 க்கும் மேற்பட்ட வேலியிடப்பட்ட குடியிருப்பு வளாகங்கள் மற்றும் அடுக்குமாடி வீட்டு மேம்பாடுகளை உள்ளடக்கிய ஒரு விரிவான சேவைத்தொகுப்பு, இலங்கை முழுவதும் 10,000 க்கும் மேற்பட்ட காணி அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் கடந்த தொடர்ச்சியான வருடங்களில் Real-Estate Asia Awards இல் “இலங்கையின் சிறந்த வீட்டுமனை அபிவிருத்தியாளர்” விருதை வென்றமை ஆகியவற்றின் மூலம், Prime Group நம்பகமான விநியோகத்தின் வரலாற்றுப் பதிவையும், நுணுக்கமான அறிவுக் கூர்மையுடைய வீட்டு உரிமையாளர்கள் எதைத் தேடுகிறார்கள் என்பது குறித்த ஆழமான புரிதலையும் தன்னகத்தே கொண்டுவந்துள்ளது. கொழும்பின் மிக மதிப்புமிக்க இயற்கை எழில்மிக்க சூழல்களில் ஒன்றினால் வடிவமைக்கப்பட்டு, நகரத்தின் மிகச்சிறந்த குடியிருப்பு வழங்கல்களுக்கு மத்தியில் தனித்து நிற்கும் வகையில் கட்டப்படவுள்ள THE GOLF, அந்தப் புரிதலின் சமீபத்திய வெளிப்பாடாகும்.


MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278