Header Logo
SLIC
வணிகம்
நிறுவனங்கள் மத்தியில் நிதியியல் நலனுக்கு வலுவூட்டுவதற்காக Employee Banking Proposition என்ற தீர்வை DFCC வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது

Jul 2, 2026 - 01:27 PM

நிறுவனங்கள் மத்தியில் நிதியியல் நலனுக்கு வலுவூட்டுவதற்காக Employee Banking Proposition என்ற தீர்வை DFCC வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது
Mobitel Inner 1278
EDEX Inner

நிறுவனங்கள் தமது ஊழியர்களுக்கான வங்கிச்சேவைகளை நிர்வகிப்பதை இலகுபடுத்தி, ஊழியர்களுக்கும், அவர்களுடைய குடும்பங்களுக்கும் நிதியியல் நன்மைகள் மற்றும் டிஜிட்டல் வழிமுறை சௌகரியத்தை கிடைக்கச் செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட, கூட்டாண்மையை முன்னிலைப்படுத்திய பணித்தள வங்கிச்சேவை தீர்வான Employee Banking Proposition என்பதை DFCC வங்கி பிஎல்சி அறிமுகப்படுத்தியுள்ளது. 

சம்பளப்பட்டியலுடன் தொடர்புபட்ட வங்கிச்சேவையை நிர்வகிப்பதை சீரமைத்து, ஏற்கனவே உள்ள நிறுவன கட்டமைப்புக்களுடன் ஊழியர் தொடர்புபட்ட நிதிச் செயற்பாடுகளை சிறப்பாக ஒருங்கிணைப்பதை நிர்வகிப்பதை மேம்படுத்துவதன் மூலமாக மனிதவள மற்றும் நிதித்துறை அணிகள் கொண்டு செயற்பாட்டுச் சுமையைக் குறைக்கும் வண்ணம் இத்தீர்வு வடிவமைக்கப்பட்டுள்ளது. 

மேலும், பணியகங்களில் ஏற்பட்டு வருகின்ற பரந்த மாற்றமொன்றையும் இத்தீர்வு பிரதிபலிக்கின்றது. ஊழியர்களின் பணி அனுபவத்தில் நிதியியல் நலன் மீதான முக்கியத்துவம் தற்போது அதிகரித்தவண்ணம் உள்ளது. அன்றாட வாழ்வை மேம்படுத்தி, ஊழியர்களின் ஈடுபாட்டைப் பலப்படுத்துவதற்கு உதவியாக, ஊதியம் மற்றும் வழக்கமான நன்மைகளுக்கு அப்பால் நடைமுறைக்கு ஏற்ற வடிவங்களை நாடும் போக்கு நிறுவனங்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 

இதன் பின்னணியிலேயே வழக்கமான சம்பளத்தாள் சார்ந்த சேவையாக அல்லாது, மிகவும் ஒருங்கிணைக்கப்பட்ட பணியக வங்கிச்சேவைக் கட்டமைப்பாக ஊழியர் வங்கிச்சேவைத் தீர்வை DFCC வங்கி நிலைநிறுத்தியுள்ளது. 

இத்திட்டத்தின் இணைந்து கொள்ளும் ஊழியர்களுக்கு கூட்டாளர் நிறுவனங்களின் ஊழியர்கள் என்ற வகையில் பிரத்தியேகமான விதிமுறைகள் கொண்ட சேமிப்புக் கணக்குகள், வீட்டுக் கடன்கள், தனிநபர் கடன்கள், மற்றும் கடனட்டைகள் உள்ளிட்ட முன்னுரிமை அடிப்படையிலான பல்வகைப்பட்ட வங்கிச்சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. 

இதனை அறிமுகம் செய்து வைப்பது குறித்து DFCC வங்கியின் துணைத் தலைவரும், தீர்வுகள் மற்றும் முன்மொழிவுகள், தனிநபர் மற்றும் வணிக வங்கிச்சேவைக்கான தலைமை அதிகாரியுமான அசித பின்னதுவ அவர்கள் கருத்து தெரிவிக்கையில், “தற்காலத்தில் பணியகங்களிடமிருந்து ஊழியர்களின் எதிர்பார்ப்புக்கள் பெரும் மாற்றம் கண்டு வருகின்றன. நிதியியல் நலன் இதில் முக்கிய பங்கு வகிப்பது அதிகரித்த வண்ணம் உள்ளது. ஒருங்கிணைக்கப்பட்ட கட்டமைப்பொன்றினுள் நிதியியல் அணுகல், டிஜிட்டல் வசதி, மற்றும் இலகுபடுத்தப்பட்ட நிர்வாகம் ஆகியவற்றை ஒன்றிணைத்து நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களுக்கு நடைமுறையில் மதிப்பைத் தோற்றுவிப்பதற்காக DFCC Employee Banking Proposition என்ற தீர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.” 

இத்தீர்வின் பலன் ஊழியர்களுக்கும் அப்பாற்பட்டது. குடும்பங்களின் நிதித் திட்டமிடல் சார்ந்த பரந்த யதார்த்தங்களைப் பிரதிபலிக்கும் வகையில், சிறுவர் சேமிப்புக்கள் மற்றும் பெற்றோருக்கான நிதி ஆதரவு ஆகியவற்றுடன் தொடர்புபட்ட தீர்வுகள் அடங்கலாக, குடும்பத்தின் தேவைகளுக்கும் உதவும் வகையில் இதன் சில நன்மைகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. 

வங்கிச்சேவைகளுக்கு மேலதிகமாக, வாழ்வியல் வரப்பிரசாதங்கள், வணிகர்களின் சலுகைகள், மற்றும் DFCC வங்கியின் டிஜிட்டல் வங்கிச்சேவை தளங்கள் ஆகியவற்றுக்கான அணுகலையும் ஊழியர்கள் பெற்றுக்கொள்ள முடியும். இது மிகுந்த சௌகரியம் மற்றும் அன்றாட நிதி அணுகல் ஆகியவற்றுக்கும் இடமளிக்கின்றது. 

வங்கியின் சிரேஷ்ட தலைமைத்துவ அணியின் பங்கேற்புடன் DFCC வங்கியின் தலைமை அலுவலகத்தில் உள்ளகரீதியாக இத்தீர்வு உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. பணியகங்கள் மற்றும் ஊழியர்களின் தேவைகள் பெரும் மாற்றம் கண்டு வருகின்ற நிலையில் அதற்கேற்றவாறான மற்றும் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய வங்கிச்சேவை தீர்வுகளை தோற்றுவிப்பதில் DFCC வங்கி தொடர்ச்சியாக கவனம் செலுத்தியுள்ளதை இது சிறப்பாகப் பிரதிபலிக்கின்றது. 

DFCC வங்கி தொடர்பான விபரங்கள் 

1955ம் ஆண்டில் நிறுவப்பட்ட DFCC வங்கி பிஎல்சி, 1956 முதல் கொழும்பு பங்குப் பரிவர்த்தனைச் சந்தையில் நிரற்படுத்தப்பட்டுள்ளதுடன், இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகின்றது. இலங்கை மத்திய வங்கியின் ஒழுங்குமுறையின் கீழ் இயங்குவதுடன், Fitch Ratings இடமிருந்து A (lka) தரப்படுத்தலையும் பெற்றுள்ள இவ்வங்கி, திறைசேரி, முதலீடு மற்றும் வாணிபக் கடன் தீர்வுகளுடன் சேர்த்து, தனிநபர், வர்த்தக, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கான விரிவான வங்கிச்சேவைகள் அனைத்தையும் வழங்கி வருகின்றது. 

வாடிக்கையாளர்களை மையப்படுத்தியும் மற்றும் நிலைபேணத்தக்க புத்தாக்கத்தை அடிப்படையாகவும் கொண்டு, DFCC MySpace போன்ற டிஜிட்டல் தளங்கள், 133 கிளைகளைக் கொண்ட வலையமைப்பு மற்றும் LankaPay வலையமைப்பிலுள்ள 6,000 க்கும் மேற்பட்ட ATM மையங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி, இடைவிடாத மற்றும் பாதுகாப்பான வங்கிச்சேவை அனுபவத்தை DFCC வங்கி வழங்கி வருகின்றது. 

நிலைபேற்றியல் சார்ந்த முயற்சிகளுக்கான கடன் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முயற்சிகள் ஆகியவற்றுக்காக அங்கீகாரத்தைச் சம்பாதித்து, இவை தொடர்பில் முன்னிலை வகிக்கும் நிறுவனமாகத் திகழ்ந்து வரும் DFCC வங்கி, சூழல் மீதான தாக்கங்களைக் குறைத்து, நீண்ட கால அடிப்படையில் பொருளாதார நெகிழ்திறனை வளர்ப்பதில் அர்ப்பணிப்புடன் செயல்படுகின்றது.


MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278