Header Logo

செய்திகள்
சிறைச்சாலையில் கட்டுக்கடங்காத பதற்றம்: பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு!

Jul 6, 2026 - 12:47 PM -

0

சிறைச்சாலையில் கட்டுக்கடங்காத பதற்றம்: பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு!

 நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (05) மதியம் வெடித்த கைதிகள் மோதல், இன்று (06) காலை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இந்த வன்முறைச் சம்பவங்களில் சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். 

வன்முறையின் தீவிரத்தன்மை காரணமாக 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் பலரது உடல்களில் துப்பாக்கிக் காயங்கள் காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகவல் ஒன்றைச் சிறைவாசி ஒருவர் காட்டிக்கொடுத்ததாகக் கூறப்படும் முறுகல் நிலையே, சுமார் 1,800 கைதிகள் உள்ள இந்தச் சிறைச்சாலையில் இத்தகைய பெரும் வன்முறைக்கு முதற்காரணமாக அமைந்துள்ளது. 

நேற்று நள்ளிரவில் அதிகாரிகளால் ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருந்த சூழல், இன்று காலை மீண்டும் கைதிகளின் திட்டமிட்ட தாக்குதலால் சீர்குலைந்தது. 

நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர்.

தற்போதைய நிலவரப்படி, சிறைச்சாலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட போதிலும், சிறைச்சாலை வளாகத்தில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவுவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார். 

மேலதிக படையினர் வரவழைக்கப்பட்டு, வன்முறையை முழுமையாகக் கட்டுப்படுத்தும் மற்றும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  

MOST READ

காணொளி
கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த லொறி

கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த லொறி

மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா!

மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா!

பேருந்து ஊழியர்களுக்கு சீருடை!

பேருந்து ஊழியர்களுக்கு சீருடை!

'சிசு செரிய'

'சிசு செரிய'

மட்டக்களப்பு பார் வீதி உணவகத்தில் திடீர் தீ விபத்து!

மட்டக்களப்பு பார் வீதி உணவகத்தில் திடீர் தீ விபத்து!

அநுரவின் வாயை போல எல்லாமே பொய்!

அநுரவின் வாயை போல எல்லாமே பொய்!

பிள்ளையானுக்கு விளக்கமறியல்!

பிள்ளையானுக்கு விளக்கமறியல்!

நடனத்தால் உலக சாதனை படைத்த கிளிநொச்சி சிறுமி!

நடனத்தால் உலக சாதனை படைத்த கிளிநொச்சி சிறுமி!

இந்திய மாற்றுத்திறனாளி இளைஞனின் விழிப்புணர்வு பயணம்!

இந்திய மாற்றுத்திறனாளி இளைஞனின் விழிப்புணர்வு பயணம்!

செம்மணியில் 'உரிமைப்பந்தம்' அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு!

செம்மணியில் 'உரிமைப்பந்தம்' அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு!

தொடர்புடைய செய்திகள்
நீர்கொழும்பு சிறைச்சாலையின் கூரை மீது ஏறி பெண் கைதிகள் போராட்டம்

நீர்கொழும்பு சிறைச்சாலையின் கூரை மீது ஏறி பெண் கைதிகள் போராட்டம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு கைதிகள் குழுக்களுக்கிடையே இன்று (05) மதியம் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, அந்தச் சிறைச்சாலையின் பெண் வார்டில் இருந்த பெண் கைதிகள் குழுவொன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.சிறைச்சாலையின் கூரை மீது ஏறி அவர்கள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக

Jul 05, 2026 - 05:55 PM

நீர்கொழும்பு சிறைச்சாலையை இரத்தக் களரியாக்கிய மோதலின் முழுமையான பின்னணி

நீர்கொழும்பு சிறைச்சாலையை இரத்தக் களரியாக்கிய மோதலின் முழுமையான பின்னணி

நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் இன்று (05) மதியம் இரு கைதிகள் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலானது, "பூரு மூனா" என்ற பாதாள உலகக் குழு உறுப்பினருடன் நெருங்கிய தொடர்புடைய சுரேஷ் என்ற போதைப்பொருள் கடத்தல்காரரால் வழிநடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Jul 05, 2026 - 07:39 PM

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் - விசாரணை நடத்த குழு ஒன்று நியமனம்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் - விசாரணை நடத்த குழு ஒன்று நியமனம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு கைதிகள் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தினால்

Jul 06, 2026 - 07:13 AM

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் பதற்றம்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் பதற்றம்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் ஒரு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகள் இரு பிரிவினருக்கு இடையே நேற்று (05) மதியம் 1 மணியளவில் மோதல் ஒன்று ஏற்பட்டிருந்தது.

Jul 06, 2026 - 10:13 AM

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் அதிகாரிகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு - 50 பேர் காயம்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் அதிகாரிகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு - 50 பேர் காயம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) காலை ஏற்பட்ட மோதலில் சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட மேலும் 50க்கும் மேற்பட்டோர் இந்த மோதலில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Jul 06, 2026 - 12:10 PM