Header Logo
Mogo Academy

சினிமா
காரில் இருந்து இறங்கி மாஸ் காட்டிய ரஜினி!

Jul 6, 2026 - 06:48 PM -

0

காரில் இருந்து இறங்கி மாஸ் காட்டிய ரஜினி!
Mobitel inner

நடிகர் ரஜினிகாந்தின் 173 ஆவது திரைப்படமாக உருவாகி வரும் 'தர்மன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து பகிர்ந்துள்ள சுவாரசியமான தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

உலக நாயகன் கமல் ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், 'ஓ மை கடவுளே' மற்றும் 'டிராகன்' படங்களின் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் இப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. 

இப்படத்தில் ரஜினிகாந்த் ஒரு வைத்தியர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது அண்மையில் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் உறுதி செய்யப்பட்டு, ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. 

இந்நிலையில், படத்தின் முதல் காட்சி குறித்து நெகிழ்ச்சியோடு பேசியுள்ள இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து, 'தர்மன்' திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதன்முதலில் தோன்றும் மாஸ் காட்சியைக் விவரித்துள்ளார். 

அந்த சீனில் ரஜினிகாந்த் காரில் இருந்து கீழே இறங்கி, தனது அசாத்தியமான மற்றும் பிரத்யேகமான ஸ்டைலில் நடந்து ஒரு வைத்தியசாலைக்குள் நுழைவார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

படப்பிடிப்பின் போது அந்த மாஸ் காட்சியை மானிட்டரில் பார்த்த போது, ஒரு இயக்குநராக இருப்பதை மறந்து, தீவிர ரஜினிகாந்த் ரசிகனாகத் தான் தன்னை முற்றிலும் மறந்து விசிலடித்துக் கொண்டாடித் தீர்த்ததாக அஷ்வத் மாரிமுத்து எமோஷனலாகப் பகிர்ந்துள்ளார். 

இப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து சிம்ரன், ராஷி கண்ணா, யோகி பாபு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கும் இத்திரைப்படத்திற்கு அன் அறிவு ஸ்டண்ட் மாஸ்டர்களாகப் பணியாற்றுகின்றனர். 

'தர்மமே வெல்லும்' என்ற டேக்லைனுடன், குடும்ப சென்டிமென்ட் மற்றும் அதிரடி த்ரில்லர் கலந்த பக்கா கமர்ஷியல் எண்டர்டெய்னராக உருவாகும் 'தர்மன்' திரைப்படத்தின் இந்த ஆரம்பகட்ட அப்டேட், தியேட்டர்களில் ரஜினி ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டமாக அமையப்போகிறது என்பதை இப்போதே உறுதி செய்துள்ளது.


MOST READ

காணொளி
பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

லிந்துலையில் சோகம்!

லிந்துலையில் சோகம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

Mobitel Upahara