Header Logo
Mogo Academy

விளையாட்டு
டெஸ்ட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து மெக்கல்லம் நீக்கம்!

Jul 13, 2026 - 11:08 AM -

0

டெஸ்ட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து மெக்கல்லம் நீக்கம்!
Mobitel inner

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக பிரன்டன் மெக்கல்லம் பணியாற்றி வந்தார். சமீப காலமாக டெஸ்டில் அவரது பயிற்சி பணி மெச்சும்படி இல்லை. 

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரை 1 - 4 என்ற கணக்கில் இழந்தது. சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1 - 2 என்ற கணக்கில் பறிகொடுத்தது. அத்துடன் டெஸ்ட் அணி தலைவர் பென் ஸ்டோக்சும் ஓய்வு பெற்றுவிட்டார். 

இந்நிலையில் தொடர்ச்சியான தோல்வி எதிரொலியாக இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கான பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து மெக்கல்லம் நீக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான அணியின் பயிற்சியாளராக அவர் தொடருவார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 2027 ஆம் ஆண்டு ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கான அணியை தயார்படுத்தும் பணியை புதிய பயிற்சியாளர் கவனிப்பார் எனவும் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. 

டெஸ்ட் பயிற்சியாளர் பதவிக்கு இந்திய முன்னாள் அணி தலைவர் ராகுல் டிராவிட், ஜிம்பாப்வே முன்னாள் வீரர் ஆன்டி பிளவர், இங்கிலாந்து முன்னாள் வீரர் ரிச்சர்ட் டாசன் உள்ளிட்டோர் பெயர் பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது. 

டெஸ்ட் அணியுடனான 4 ஆண்டு கால பந்தம் முடிவுக்கு வந்தது குறித்து மெக்கல்லம் தெரிவிக்கையில், 

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக தொடர முடியாமல் போவது மிகுந்த வேதனை அளிக்கிறது. என்றாலும் கிரிக்கெட் வாரியத்தின் முடிவை மதிக்கிறேன். இனி முழு கவனத்தையும் ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிக்கு அளித்து, அணி முன்னேறி செல்வதற்கு உதவுவேன் என தெரிவித்தார்.


MOST READ

காணொளி
இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த  நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

Mobitel Upahara