Header Logo
Mogo Academy

விளையாட்டு
நம்பர் ஒன் இடத்தை இழந்த இந்திய டி20 அணி!

Jul 14, 2026 - 09:50 AM -

0

நம்பர் ஒன் இடத்தை இழந்த இந்திய டி20 அணி!
Mobitel inner

இந்திய டி20 அணி கடந்த சில வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. ரோகித் சர்மா தலைமையிலும், சூர்யகுமார் யாதவ் தலைமையிலும் உலக கிண்ணங்களை அடுத்தடுத்து வென்று சாதனைப் படைத்தது. 

சூர்யகுமார் யாதவ் அணி தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக ஷ்ரேயாஸ் அய்யர் அணி தலைவராக நியமிக்கப்பட்டார். இவருக்கு முதல் இரண்டு தொடர்களும் சோதனையாக அமைந்துள்ளது எனலாம். 

அணி தலைவர் பதவி ஏற்றதும் இந்திய அணி அயர்லாந்துக்கு எதிராக விளையாடியது. இதில் 0 - 2 என ஒயிட்வாஷ் ஆனது. இந்த ஏமாற்றத்துடன் இங்கிலாந்துக்கு சென்றது. அங்கேயும் அடி விழுந்தது. முதல் போட்டி மழையால் இரத்து செய்யப்பட்ட நிலையில், அடுத்த 3 போட்டிகளிலும் தொடர்ச்சியாக தோல்வியடைந்து தொடரை இழந்தது. 

5 ஆவது மற்றும் கடைசி போட்டி சவுத்தாம்ப்டனில் நடைபெற்றது. இந்த போட்டியிலும் தோல்வியடைந்தால் ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டது. ஆனால் இங்கிலாந்து நம்பர் ஒன் இடத்தை பிடிக்கும் முனைப்பில் விளையாடியது. 

பட்லர் சதத்தால் இங்கிலாந்து 257 ஓட்டங்களை குவித்தது. பின்னர் இந்தியா 201 ஓட்டங்களை மட்டுமே பெற்றது, இந்நிலையில் 56 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. 

இந்த தோல்வியின் மூலம் இந்திய அணி கடைசி 7 போட்டிகளில் 6 இல் தோல்வியடைந்து ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தை இழந்துள்ளது. கடந்த 1605 நாட்களாக நம்பர் ஒன் இடத்தில் கம்பீரமாக இருந்து வந்தது. தற்போது அந்த இடத்தை இங்கிலாந்து தட்டிப்பறித்தது. 

அணி தலைவர் பதவி ஏற்றதும் முதல் இரண்டு தொடர்களும் ஷ்ரேயாஸ் அய்யருக்கு மறக்க முடியாத அடியை கொடுத்துள்ளது.


MOST READ

காணொளி
பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

லிந்துலையில் சோகம்!

லிந்துலையில் சோகம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

Mobitel Upahara