Header Logo
Mogo Academy

விளையாட்டு
பயிற்சியாளராகிறாரா தோனி?

Jul 14, 2026 - 11:05 AM -

0

பயிற்சியாளராகிறாரா தோனி?
Mobitel inner

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த பயிற்சியாளர் யார் என்ற கேள்வி ஒட்டுமொத்த சிஎஸ்கே ரசிகர்களின் மனதிலும் எழுந்திருக்கிறது. 

ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து ஸ்டீபன் பிளெமிங் நேற்று (13) விலகினார். 

2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடக்க சீசனில் வீரராக சென்னை அணியில் இணைந்த பிளெமிங், 2009 முதல் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்று, சிஎஸ்கேவை உலகின் மிகவும் வெற்றிகரமான டி20 பிராஞ்சைஸிகளில் ஒன்றாக உருவாக்கினார். 

அவரது பயிற்சியின் கீழ் சென்னை சூப்பர் கிங்ஸ் 5 ஐபிஎல் கிண்ணங்களையும், 2 சாம்பியன்ஸ் லீக் டி20 பட்டங்களையும் கைப்பற்றியது. மேலும், 12 முறை பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்று, 10 முறை ஐபிஎல் இறுதிப்போட்டியில் விளையாடி புதிய சாதனைகளைப் படைத்தது. 

ஸ்டீபன் பிளெமிங் பதவியில் இருந்து விலகியதை தொடர்ந்து, சென்னை அணியின் அடுத்த தலைமைப் பயிற்சியாளர் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பிளெமிங்கின் விலகலைத் தொடர்ந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளர் பதவிக்காக மகேந்திர சிங் தோனி, ராகுல் டிராவிட், ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஹேமங் பதானி ஆகியோரின் பெயர்கள் பரவலாக பேசப்பட்டு வருகின்றன. இருப்பினும், இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் இதுவரை எந்த அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.


MOST READ

காணொளி
பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

லிந்துலையில் சோகம்!

லிந்துலையில் சோகம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

Mobitel Upahara