Header Logo
Vallibel FD
Selan Bank
ஜோதிடம்
இன்றைய ராசிப்பலன் (27.07.2026)!

Jul 27, 2026 - 09:26 AM

இன்றைய ராசிப்பலன் (27.07.2026)!
Mobitel Inner 1278

இன்று (27) தனுசு ராசியில் சந்திரன் மூலம், பூராடம் நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். இன்று குருவின் ஆதிக்கம் நிறைந்த நாள். இன்று சித்த யோகம் உள்ள தினம். இன்று மீன ராசியில் சனி வக்ர பெயர்ச்சியை தொடங்க உள்ளார். மிதுன ராசியில் புதன் ஆட்சி பெற்றுள்ளார், கடகத்தில் குரு - சூரியன், சிம்மத்தில் சுக்ரன் கேது ஆகிய கிரக சேர்க்கைகள் மூலம், குரு ஆதித்ய யோகம் கிடைக்கக் கூடிய நாளாக உள்ளது. ரிஷப ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்று சர்வ ஏகாதசி. மகாவிஷ்ணு வழிபாடு செய்ய வேண்டிய நாள். 

மேஷம் ராசி பலன் 

மேஷ ராசி அன்பர்களுக்கு இன்று ஏதோ ஒரு காரணத்திற்காக இன்று தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படும். என்று உங்களுடைய பேச்சு கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கும். நாள் முழுவதும் பலர் சோர்வாக உணர்வார்கள். சிறு மன அழுத்தங்களே உங்கள் பிரச்சனைகளுக்குக் காரணம். மாலையில் வீட்டில் அதிக நேரம் செலவிடுவது உங்கள் குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியளிக்கும். தொழில் தொடர்பாக தெளிவான அணுகுமுறை தேவை. என்று முக்கிய விவாதங்கள் அல்லது புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. 

ரிஷபம் ராசி பலன் 

ரிஷப ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் உங்களுக்கு வேலைகள் நிறைந்திருக்கும். நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க திட்டமிடுவீர்கள். இன்று வேலை தொடர்பாக கவலையும் பொறுமையும் அதிகரிக்கும். மாலையில், உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும், மேலும் லாபகரமாகவும் இருப்பீர்கள். முதலில் நேரடி இயக்கத்தால் உங்கள் தொழிலில் தெளிவை காண்பீர்கள்.தொழில் விஷயங்களில் கவனமாக இருப்பது, ஏற்படக்கூடிய இழப்புகளைத் தடுக்க உதவும். இன்று முதலீடுகள் மூலம் நீங்கள் பயனடையலாம். 

மிதுனம் ராசி பலன் 

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாள். இன்று நீங்கள் குறுகிய பயணம் செல்ல வாய்ப்பு உண்டு. அண்டை வீட்டாரிடம் அனுசரித்து செல்வது நல்லது, ஒரு தொலைபேசி அழைப்பு தொடர்பான தகவலை வழங்கக்கூடும்.ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது. படிப்பில் அதிக கவனம் செலுத்தும் மாணவர்கள் பயனடைவார்கள். வணிகர்கள் தங்கள் தொழிலில் புதிய உத்திகளைக் கையாளலாம்.இன்று புதிய முயற்சிகளை தள்ளிப் போடுவது நல்லது. உங்களுடைய தொழிலில் தெளிவான சிந்தனையுடன் செயல்படுவோம். முதலீடு விஷயங்களில் அவசரப்பட வேண்டாம். 

கடகம் ராசி பலன் 

கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு ஒரு சிறப்பான நாளாக அமையலாம். ஒரு குறிப்பிட்ட திட்டத்தில் கவனம் செலுத்தினாலே போதுமானதாக இருக்கும். உங்களுடைய கடினமான உழைப்பு என்று பெரிய நலமாக இருக்கும். இன்று எந்தவொரு ஆபத்தான நடவடிக்கையையும் எடுப்பதைத் தவிர்க்கவும். அண்டை வீட்டாரிடம் கருத்து வேறுபாடுகளை தவிர்க்கவும். உங்கள் குடும்பத்தில் உள்ள எதிர்ப்பாளர்கள் சிறிது காலத்திற்கு உங்களுக்கு எதிராகக் குரல் எழுப்ப முடியாது.இன்று உங்களுடைய வேலை மற்றும் குடும்பம் தொடர்பான பொறுப்புகளை கவனமாக செய்து முடிக்கவும். 

சிம்மம் ராசி பலன் 

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று மிகச் சிறந்த நாளாக இருக்கும். நிதி விவகாரங்களில் கவனம் தேவை. என்று நீங்கள் செலுத்த வேண்டிய கலந்தது முடிப்பது நல்லது. பணம் தொடர்பான விஷயங்களில் கவனமாக கையாளவும். புதிய யோசனையோ அல்லது விருப்பமோ இருந்தால், உடனடியாகச் செயல்படுத்துங்கள்; அது நிச்சயமாகப் பலனளிக்கும். உறவினர்களுடனான பழைய மனக்கசப்புகளைத் தீர்த்துக்கொள்ள இது ஏற்ற நேரம். நண்பர்களுடன் நேரம் செலவிடுவது நன்மை பயக்கும். சில காரணங்களால், குடும்ப உறுப்பினர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். 

கன்னி ராசி பலன் 

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு ஒரு பரபரப்பான நாளாக இருக்கும். அதனால் சரியான திட்டமிடலும், புத்திசாலித்தனமான செயல்பாடுகள் நன்மையையும் மகிழ்ச்சியையும் தரும். உங்களுடைய உடல் நலம் மற்றும் நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவு விஷயத்தில் கவனம் செலுத்தவும். வேலை அல்லது நிதிநிலை தொடர்பாக நீண்ட காலப் பதற்றங்களும் தணியும். நீங்கள் மற்றவர்களுக்கு உதவுவதற்கான சில வாய்ப்புகள் கிடைக்கும். நேர்மையுடன் செய்யப்படும் எந்தவொரு வேலையும் நல்ல பலனைத் தரும். என்று நீங்கள் எதிலும் எளிமையை கடைப்பிடிப்பது நல்லது. 

துலாம் ராசி பலன் 

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று நாளின் ஏதேனும் ஒரு வழிகளில் உங்களுக்கு வரும் அழைப்புகள் மூலம் சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். உங்கள் அலுவலக சகாக்கள் உங்கள் குழுப்பணியைக் கண்டு மகிழ்ச்சியடைவார்கள். இன்று எதிலும் உணர்வுபூர்வமாக அணுக வேண்டாம். நிதானமாக சிந்தித்து செயல்படவும். வணிகம் மற்றும் பணப் பரிவர்த்தனைகளில் சில இடர்பாடுகள் ஏற்படலாம். உங்கள் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். இன்று காதல் விவகாரங்களுக்கும் ஏற்ற நாள், இருப்பினும் செலவுகள் சற்று அதிகரிக்கலாம். 

விருச்சிகம் ராசி பலன் 

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று நாளின் முதல் பாதியில் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். உன்னுடைய பணியிடத்தில் நற்பெயர் நிலைத்திருக்கும்.மாலை நேரத்திற்குள் பல லாபகரமான வாய்ப்புகள் உருவாகும். உங்களுடைய பொறுப்புகள் அதிகரிக்கலாம் வாய்ப்புகள் உண்டு. இருப்பினும் வாழ்க்கை துணையின் மூலம் ஆதரவு மன வலிமையை தரும். என்று நீங்கள் ஒரு பயணம் செல்ல தயாராக இருப்பீர்கள். ஒரு விருந்தில் செல்வாக்கு மிக்க நபர்களைச் சந்திப்பீர்கள், மேலும் ஒரு குறிப்பிட்ட பணி குறித்த உங்கள் கவலைகளும் தீரும். 

தனுசு ராசி பலன் 

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்குச் சாதகமான நேரம், எனவே அதை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். இன்று தலைவலி, காய்ச்சல் போன்ற உடல்நல தொந்தரவுகள் ஏற்படலாம். அதனால் பணிகளை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள். இன்று உங்கள் பல விருப்பங்கள் நிறைவேறும். பயணங்கள் மேற்கொள்வது ஒரு முக்கியமான காரியத்தை முடிக்க உதவும். ஒரு முயற்சியில் நீங்கள் வெற்றிபெறலாம். நிதி விவகாரங்களில் அனுபவம் வாய்ந்தவர்களிடம் ஆலோசனை பெறுவது நன்மை பயக்கும். 

மகரம் ராசி பலன் 

மகர ராசி அன்பர்களுக்கு இன்று யாருடனும் மோதல்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். புதிய பயணங்கள் அல்லது பெரிய செல்வங்களை எதிர்கொள்ள நேரிடும். இருப்பினும் உங்களுடைய பொறுப்புகளை முடிப்பதிலிருந்து விலக வேண்டாம். உங்கள் பணிச்சூழல் மேம்படும். வணிகத்தில் லாபம் எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் திருமண வாழ்க்கையும் சிறப்பாக அமையும். நாள் முழுவதும் பணி சுமை நிறைந்ததாக இருக்கும். எதைச் செய்வது, எதைத் தவிர்ப்பது என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும். இன்று நாள் இன்று ஓய்வு எடுக்க முடியாத சூழ்நிலை இருக்கும். 

கும்பம் ராசி பலன் 

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று குழுப்பணியில் ஈடுபட வேண்டிய நாள். இன்று உங்களுடைய விருப்பங்கள் நிறைவேற கூடுதல் முயற்சி தேவைப்படும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இணைந்து பணியாற்றுவது நல்ல பலன்களைத் தரும். நீண்ட நாட்களாக நினைத்த சில விஷயங்கள் நடக்கும். உரையாடல்கள் ஒரு லாபகரமான யோசனையைத் தூண்டலாம். அனைவரையும் அனுசரித்து செல்லவும். உங்களுடைய பேச்சில் இனிமையை கடைப்பிடிப்பது அவசியம். நண்பருக்குப் பரிசு வாங்கும் போது உங்கள் செலவு குறித்து கவனமாக இருங்கள். 

மீனம் ராசி பலன் 

மீனம் ராசி அன்பர்களுக்கு இன்று சற்று மந்தமான நாளாக அமையலாம். மேலதிகாரிகளின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு செயல்படவும். நிதானமாகச் செயல்படுவது நன்மை பயக்கும். தொடர்ந்து முயற்சி செய்தால், நிலுவையில் உள்ள பணிகளும் முடிவடையும். இன்று உங்களுடைய பொறுப்புகள் அதிகரிக்கும். அதனால்வேலைகளை சரியாக திட்டமிட்டு செய்தால் முடிக்க முடியும். விழிப்புடன் இருந்து உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள்; இதுவே போராட்டத்தின் கடைசி கட்டமாக இருக்கலாம். இன்று ஏற்கனவே செலவுகள் அதிகமாக இருக்கும் என்பதால், வெளியே பணத்தைச் செலவழிப்பதற்குப் பதிலாக உங்கள் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடுங்கள்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

வடமாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்!

வடமாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

Mobitel 1278