Header Logo
Vallibel FD
Selan Bank
ஜோதிடம்
இன்றைய ராசிப்பலன் (29.07.2026)!

Jul 29, 2026 - 10:34 AM

இன்றைய ராசிப்பலன் (29.07.2026)!
Mobitel Inner 1278

இன்று (29) மகர ராசியில் சந்திரன் பூராடம், உத்திராடம் நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். இன்று குருவின் ஆதிக்கம் நிறைந்த நாள். இன்று அமிர்த யோகம் உள்ள தினம். இன்று மீன ராசியில் சனி வக்ர பெயர்ச்சியை தொடங்கியுள்ளார். மிதுனத்தில் புதன் ஆட்சி பெற்றுள்ளார், கடகத்தில் குரு - சூரியன், சிம்மத்தில் சுக்ரன் கேது ஆகிய கிரக சேர்க்கைகள் மூலம், குரு ஆதித்ய யோகம் கிடைக்கக் கூடிய நாளாக உள்ளது. மிதுனம் ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்று ஆடி பெளர்ணமி. சங்கரன்கோவில் ஆடி தபசு. 

மேஷம் ராசி பலன் 

மேஷ ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வாழ்க்கைத் துணையிடமிருந்து ஆதரவும், நல்லுறவும் கிடைக்கும். உங்கள் ராசிக்கு அதிபதியான செவ்வாய் கிரகம், தீய பலன் தரும் கிரகங்களின் சேர்க்கையில் உள்ளதால் எதிலும் கவனமாக இருப்பது அவசியம். கசப்பான சூழலை இனிமையானதாக மாற்றும் கலையை கற்றுக் கொண்டு செயல்பட வேண்டும். 5ம் வீட்டில் ஏற்படும் பாதிப்பால், உங்கள் பிள்ளைகளிடம் இருந்து ஏமாற்றம் தரும் செய்திகள் வரலாம். மாலையில் நிலுவையில் இருந்த சில பணிகள் நிறைவடைய வாய்ப்புள்ளது. மாலை நேரத்தில் அன்புக்குரியவர்களைச் சந்திப்பதிலும் மகிழ்ச்சியாகப் பொழுதைப் போக்குவதிலும் கழியும். 

ரிஷபம் ராசி பலன் 

ரிஷப ராசி அன்பர்களுக்கு இன்று மனநிறைவும், அமைதியும் நிறைந்த நாளாக அமையும். சில நாட்களாக சந்தித்து வந்து பிரச்சனைகள் விலகும். அரசியல் துறையில் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெறும். இதில் மேலதிகாரிகள் அல்லது அரசு மற்றும் அதிகாரத்தில் இருப்பவர்களுடனான கூட்டணி நன்மைகளைத் தரக்கூடும். புதிய ஒப்பந்தங்கள் உங்கள் நிலையையும் மதிப்பையும் உயர்த்தும். இரவில் விரும்பத்தகாத நபர்களைச் சந்திப்பது தேவையற்ற சிக்கல்களை உருவாக்கலாம். இந்த நேரத்தில் கவனம் தேவை. குழந்தைகள் மூலம் சில நிம்மதியான சூழல் உருவாகும். 

மிதுனம் ராசி பலன் 

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று ராசி அதிபதியின் சாதகமற்ற நிலையால், மதிப்புமிக்க பொருள் ஒன்றை இழக்கும் அல்லது அது திருடப்படலாம் என்ற பயம் உங்கள் மனதில் ஏற்படும். இன்று நாள் முழுவதும் உங்கள் ரசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனமாக செயல்படவும். நிலுவையில் உள்ள பணிகள் மாலையில் நிறைவடையும். கல்வி அல்லது போட்டிகளில் உங்கள் குழந்தையின் சிறப்பான வெற்றி குறித்த செய்தி மகிழ்ச்சியைத் தரும். மாலை நேரத்தில் உற்சாகமான மற்றும் மங்களகரமான நிகழ்வு ஒன்றில் பங்கேற்கும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கும். 

கடகம் ராசி பலன் 

கடக ராசி அன்பர்களுக்கு இன்று சப்தம வீடான ஏழாம் வீட்டில் ராசிநாதன் சந்திரன் இருப்பது சிறந்த செல்வ வரவைக் குறிக்கிறது. வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வாய்ப்புகள் பெறுவீர்கள். அரசு சார்ந்த கௌரவமும், மதிப்பும் உயரும். குழந்தைகள் மீதான பொறுப்புகளை நிறைவேற்ற முடியும். பயணங்கள் இனிமையாகவும் பயனுள்ளதாகவும் அமையும். மாலை முதல் இரவு வரை நண்பர்களை அல்லது அன்புக்குரியவர்களைச் சந்திப்பதும் நல்ல செய்திகளைக் கேட்பதும் நிகழும். 

சிம்மம் ராசி பலன் 

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று ராசி அதிபதியான சூரியன் நான்கு கிரகங்களுக்கு இடையே சஞ்சாரம் செய்வதால், வருமானத்திற்கான புதிய வழிகள் உருவாகும். உங்கள் கனிவான பேச்சு உங்களுக்கான மரியாதையைத் தேடித்தரும். கல்வி மற்றும் போட்டிகளில் சிறப்பான வெற்றியைப் பெறுவீர்கள். சூரியனின் தாக்கத்தால் அதிக அலைச்சலும் கண் தொடர்பான பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. எதிரிகள் தங்களுக்குள் ஏற்படும் மோதல்களால் அழிவார்கள். உங்களுடைய பணிகள் சில தடைகள் இருந்தாலும் அதை வெற்றிகரமாக செய்து முடிக்க வாய்ப்புகள் உண்டு. 

கன்னி ராசி பலன் 

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் ராசிக்கு அதிபதியான புதன் உங்கள் அதிர்ஷ்டத்தை மேம்படுத்துகிறார். வேலை மற்றும் தொழில் துறையில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் முன்னெப்போதும் இல்லாத வெற்றியைத் தரும். உங்களுடைய காதல் வாழ்க்கையில் நம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் பிள்ளைகளிடமிருந்து திருப்திகரமான மற்றும் மகிழ்ச்சியான செய்திகளைப் பெறுவீர்கள். இன்று நீங்கள் எதிர் கொண்டு வரும் சட்டப் போராட்டம் அல்லது வழக்கில் கிடைக்கும் வெற்றி உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரலாம். மங்களகரமான செலவுகள் மற்றும் புகழ் அதிகரித்தல் ஆகியவை நிகழக்கூடும். 

துலாம் ராசி பலன் 

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களைச் சுற்றி இனிமையான சூழல் நிலவும். குடும்ப உறுப்பினர்கள் அனைவரிடமும் மகிழ்ச்சி அதிகரிக்கும். திட்டங்களில் கிடைக்கும் எதிர்பார்த்த வெற்றி ஆள் மகிழ்ச்சி அதிகரிக்கும். பல நாட்களாகத் தொடர்ந்த ஒரு முக்கிய நிதிப் பரிவர்த்தனை தொடர்பான சிக்கல் தீரக்கூடும். அதனால் கவனமாக பண பரிவர்த்தனைகளை செய்யவும்.கையில் கணிசமான பணம் இருப்பதன் மகிழ்ச்சியை உணர்வீர்கள். எதிரிகள் வீழ்த்தப்படுவார்கள். இன்று உங்களுடைய பயண திட்டங்களை கவனமாக பரிசீலிக்கவும். சில பயணங்கள் தள்ளிப்போகவும் வாய்ப்புள்ளது. காதல் உறவுகள் ஆழமடையும். 

விருச்சிகம் ராசி பலன் 

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் ராசியில் சனி பகவானின் நேரடி சஞ்சாரமும், மூன்றாம் வீட்டில் சந்திரனின் சேர்க்கையும் இன்னும் ஏழு நாட்களுக்குத் தொடரும். இதன் விளைவாக உங்களுடைய ஆரோக்கியத்தை கவனம் தேவை. குறிப்பாக வாயுத் தொல்லை, சிறுநீர் அல்லது ரத்தம் தொடர்பான சில உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம். சிறிய உடல்நல பிரச்சினைகளை கூட உடனடியாக ஒரு நல்ல மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள். குடும்ப உறவுகளை கவனமாக பேணிக்காக வேண்டிய நாள். உடல்நலக் குறைவு இருந்தபோதிலும், நீங்கள் அதிக அலைச்சலுடன் செயல்பட வேண்டியிருக்கும். 

தனுசு ராசி பலன் 

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் எதிரிகள் கூட உங்களைப் பாராட்டுவார்கள். மூத்தவர்களின் ஆதரவும் வழிகாட்டுதலும் கிடைக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு ஆளும் கட்சியுடனான நெருக்கம் மற்றும் கூட்டணி உங்களுக்கு நன்மைகளைத் தரும். சமூகப் பணிகளில் எதிர்பார்த்து வெற்றி கிடைக்கும். உங்கள் மாமியார் வீட்டிலிருந்து கணிசமான பண வரவு கிடைக்கலாம். மாலை முதல் இரவு வரை சமூக மற்றும் கலாச்சார நிகழ்வுகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் அமையும். உங்களுடைய பணியிடத்தில் பழைய வேலைகளை முடிப்பதில் சிரமம் ஏற்படும். 

மகரம் ராசி பலன் 

மகர ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பம் மற்றும் நிதி சார்ந்த விஷயங்களில் வெற்றி காண்பீர்கள். வாழ்வாதாரம் சார்ந்த புதிய முயற்சிகள் நல்ல பலனைத் தரும். நீங்கள் மனதளவில் சற்று பாரமாக உணருவீர்கள். பணியிடத்தில் கீழ்நிலையில் உள்ளவர்களிடமிருந்து உங்களுக்குப் போதுமான மரியாதையும் ஆதரவும் கிடைக்கும். மாலையில் எந்தவிதமான வாக்குவாதங்கள் அல்லது சச்சரவுகளிலும் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். உங்களுடைய வீட்டிற்கு விருந்தினர்களின் வருகை மகிழ்ச்சியை தரும். உங்கள் பெற்றோரின் உடல்நலத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய நாள். 

கும்பம் ராசி பலன் 

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் உடல்நலம் மற்றும் நல்வாழ்வில் பாதிப்புகள் ஏற்படலாம். இன்று எந்த வித பெரிய திட்டங்களையும் தொடங்குவதை தவிர்க்கவும். உங்கள் பேச்சு மற்றும் தகவல் தொடர்பில் கவனம் தேவை. உங்கள் ராசிக்கு அதிபதியான சனி பகவான் வக்கிர நிலையில் இருப்பதால் ஆதாரமற்ற சச்சரவுகள், தேவையற்ற பகை, புத்தி தடுமாற்றம் மற்றும் ஏமாற்றம் ஆகியவற்றிற்கு வழிவகுக்கலாம். விரும்பத்தகாத செய்தியைக் கேட்பது உங்களை திடீர் பயணம் மேற்கொள்ளத் தூண்டலாம். எனவே, எச்சரிக்கையுடன் இருந்து மோதல்கள் மற்றும் சச்சரவுகளைத் தவிர்க்கவும். 

மீனம் ராசி பலன் 

மீனம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் பிள்ளைகள் பற்றிய கவலைகளுடனும், அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதிலும் நேரம் கழியும். உங்களுடைய திருமண வாழ்க்கையில் நீண்ட நாட்களாக இருந்த தேக்க நிலை முடிவுக்கு வரும். உங்கள் உறவினர்கள் தொடர்பான விவகாரங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும், உறவில் விரிசல் ஏற்படும் அபாயம் உள்ளது. இன்று உறவில் அனுசரித்து செல்லவும், பெரிய முடிவுகளை எடுக்க வேண்டாம். ஆன்மீகத் தலங்களுக்குச் செல்வதாலும், அறப்பணிகளை மேற்கொள்வதாலும் செலவுகள் ஏற்படலாம். பயணத்தின் போது கவனமாக இருங்கள்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

வடமாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்!

வடமாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

Mobitel 1278