Aug 9, 2026 - 05:34 PM

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் நிலவும் மழைடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் இதே போன்று நீடிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 15ஆம் திகதிக்குப் பின்னரே மழை நிலைமை படிப்படியாகக் குறையும் என அத்திணைக்களத்தின் வானிலை ஆய்வாளர் ஸ்ரீமால் ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டைப் பாதித்துள்ள எல் நினோ (El Niño) நிலைமையானது அடுத்த வருடத்தின் வடகிழக்கு பருவக்காற்று காலம் வரை நீடிக்கக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக, தற்பொழுது வறட்சியான வானிலை நிலவும் பகுதிகள் பெருமளவில் பாதிக்கப்படக்கூடும் என அவர் சுட்டிக்காட்டினார்.
தொடர்ச்சியாக வறட்சியான நிலைமை காணப்படுவதால் எதிர்காலத்தில் காற்றின் வேகம் குறையக்கூடும் என்றும், இதனால் ஈரப்பதனுடன் இணைந்து உடலால் உணரும் வெப்பநிலை மீண்டும் உயர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.












