Header Logo
செய்திகள்
தம்புள்ளையில் கோர விபத்து - 18 வயது இளைஞன் பலி

Aug 11, 2026 - 07:15 AM

தம்புள்ளையில் கோர விபத்து - 18 வயது இளைஞன் பலி
Mobitel inner

தம்புள்ளை, வெலிஹேன புலாகல வீதியின் வெலிஹேன பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 18 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புலாகல நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பாலத்தின் மதிலில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

தம்புள்ளை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, காலி - உடுகம வீதியின் கல்கொடதெனிய சந்தியருகே இடம்பெற்ற விபத்திலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காலி நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பேருந்து நிறுத்தத்தில் மோதியதில் இந்த விபத்து நடந்துள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும், பின்னால் அமர்ந்து சென்றவரும் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி ஓட்டுநர் உயிரிழந்தார்.

இவ்வாறு உயிரிழந்தவர் உடுகம பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஆவார்.

அக்மீமன பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

MOST READ

காணொளி
மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

Mobitel Upahara