Aug 11, 2026 - 09:15 AM

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் முடக்கம் காரணமாக, இன்று (11) முற்பகல் கடவுச்சீட்டுகளை விநியோகிக்கும் பணிகளில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட வினவலுக்குப் பதிலளித்த அத்திணைக்களத்தின் குடிவரவு குடியகல்வுக்கட்டுப்பாட்டுத் தலைவர் சமிந்த பத்திராஜ, கணினி அமைப்பை விரைவில் வழமைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.













