Header Logo
செய்திகள்
ஜனாதிபதிக்கும் சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையில் விசேட கலந்துரையாடல்

Aug 11, 2026 - 08:48 AM

ஜனாதிபதிக்கும் சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையில் விசேட கலந்துரையாடல்
Mobitel inner

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பான முன்மொழிவு குறித்து விவாதிப்பதற்காக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு நாளை பிற்பகல் 1 மணிக்கு சந்திப்பொன்றை வழங்கியுள்ளார்.

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பான முன்மொழிவு குறித்த இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிலைப்பாட்டை, அண்மையில் ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தனர்.

22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சரின் பணிப்புரைக்கு அமைவாக தற்போது வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

அச்சட்டமூலத்தின்படி, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது எல்லை 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது எல்லை 65 ஆகவும் திருத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் குறித்த அரசியலமைப்புத் திருத்தத்தை தற்போதைய சந்தர்ப்பத்தில் செய்ய வேண்டாம் என்பதே சட்டத்தரணிகள் சங்கத்தின் நிலைப்பாடாகும்.

முன்னெடுக்கப்பட்ட இத்தீர்மானம் தொடர்பாக, சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய உள்ளிட்ட குழுவினர் அண்மையில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுடனும் விசேட கலந்துரையாடலொன்றை நடத்தியிருந்தனர்.

அக்கலந்துரையாடலைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக, ஜனாதிபதிய தெளிவுபடுத்துவதற்கான சந்தர்ப்பமொன்றை ஏற்படுத்தித் தருமாறு நீதி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்ததாகத் தெரிவித்தார்.

MOST READ

காணொளி
மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

Mobitel Upahara