Header Logo
செய்திகள்
நீங்கியது வெள்ள அபாயம்: தணிந்தது மழை, இயல்பு நிலைக்குத் திரும்பும் ஆறுகள்!

Aug 11, 2026 - 08:12 AM

நீங்கியது வெள்ள அபாயம்: தணிந்தது மழை, இயல்பு நிலைக்குத் திரும்பும் ஆறுகள்!
Mobitel inner

நாட்டில் பெய்த மழைவீழ்ச்சி குறைந்துள்ளதைத் தொடர்ந்து, தற்போது எந்தப் பகுதியிலும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் இல்லை என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலத்தில் அதிகபட்ச மழைவீழ்ச்சி களு கங்கை மற்றும் மகாவலி கங்கையின் மேல்நிலைப் படுகைப் பகுதிகளிலேயே பதிவாகியுள்ளதாக அத்திணைக்களத்தின் நீர்வியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார இன்று (11) முற்பகல் தெரிவித்தார்.

அங்கு பதிவான மழைவீழ்ச்சி சுமார் 20 மில்லிமீற்றர் அளவை எட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நேற்றைய தினம் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் மேல், வடமேல் மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களை உள்ளடக்கிய பகுதிகளிலும் மழை பெய்தபோதிலும், அப்பகுதிகளில் 10 மில்லிமீற்றருக்கும் குறைவான குறைந்த மழைவீழ்ச்சியே பதிவாகியுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளிலும் 10 மில்லிமீற்றருக்கும் குறைவான குறைந்த மழைவீழ்ச்சியே பதிவாகியுள்ளதாகத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

மழைவீழ்ச்சி இவ்வாறு குறைந்துள்ளதன் காரணமாக நாட்டில் உள்ள எந்தவொரு ஆற்றின் நீர்மட்டமும் விரைவாக உயரவில்லை என்பதுடன், வெள்ள அபாய நிலையும் ஏற்படவில்லை என அவர் மேலும் உறுதிப்படுத்தினார்.

MOST READ

காணொளி
மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

Mobitel Upahara