Aug 13, 2026 - 01:35 PM

ஷங்கர் இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் இயக்குனர். இவர் இயக்கத்தில் நடிக்க இந்தியாவின் அனைத்து நடிகர்களும் போட்டி போட்டு கொண்டு இருக்கிறார்கள்.
இந்நிலையில் ஷங்கர் கடந்த சில வருடங்களாக பெரிய ஹிட் படம் கொடுக்க தடுமாறி வருகிறார், அடுத்து வேள்பாரி பிரமாண்ட படத்தை எடுக்கும் திட்டத்தில் இருக்க, முதலில் ஒரு ஆக்ஷன் படம் எடுத்து மீண்டும் தான் இடத்தை பிடித்துகொண்டு பிறகு வேல்பாரி எடுக்கலாம் என நினைத்த இவர் ஒரு சில நடிகர்களிடம் பேசி வருகிறாராம்.
இந்த கேப்-ல் ஷங்கர் அடுத்து அஜித்துடன் இணைகிறார் என கூறி வந்த நிலையில், ஒரு பத்திரிகையாளர் அஜித் ஏற்கனவே ஷங்கர் படத்தில் நடிப்பதற்கு மறுத்துள்ளார், ஏனெனில் ஷங்கர் படங்களுக்கு மிக கடுமையாக உழைக்க வேண்டும், அது நமக்கு செட் ஆகாது என அஜித் சொன்னதாக அந்த பத்திரிகைதாளர் கூறியுள்ளார்.




















