Header Logo
SLIC
Rhythams of Lanka
செய்திகள்
போதைப்பொருள் கடத்தல் மூலம் கோடிக்கணக்கில் பணம் ஈட்டி பொட்டி விளக்கமறியலில்

Aug 14, 2026 - 04:07 PM

போதைப்பொருள் கடத்தல் மூலம் கோடிக்கணக்கில் பணம் ஈட்டி பொட்டி விளக்கமறியலில்
Mobitel inner

ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய பணத்தில் பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களை கையகப்படுத்திய சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பொட்டி என்ற விந்தனிய சூரியாரச்சி என்ற பெண் சந்தேகநபரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (14) உத்தரவிட்டுள்ளது. 

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

14 வருட காலத்தில் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் மூலம் 850 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான சொத்துக்களை சட்டவிரோதமாக ஈட்டியமை தொடர்பில் இந்த சந்தேகநபர் நேற்று (13) கைது செய்யப்பட்டதுடன், அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். 

இவ்வாறு சட்டவிரோதமான முறையில் கையகப்படுத்தப்பட்ட கொழும்புக்கு அருகாமையிலுள்ள மூன்று வீடுகள், மூன்று கடைகள் மற்றும் ஆறு வங்கிச் கணக்குகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தற்போது தடை செய்து முடக்கியுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. 

இதன்போது பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்து, சந்தேகநபர் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கோரினர். 

அதற்கமைய, முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த கொழும்பு நீதவான் நீதிமன்றம், சந்தேகநபரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது.


MOST READ

காணொளி
செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

நீங்க சண்டியனா!

நீங்க சண்டியனா!

பேருந்து சேவை பாதிப்பு

பேருந்து சேவை பாதிப்பு

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

செம்மணியில் மேலும் 5 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் மேலும் 5 எலும்புக்கூடுகள் அடையாளம்!

தீர்த்தோற்சவம்!

தீர்த்தோற்சவம்!

இலங்கை முழுவதும் ஆடி அமாவாசை வழிபாடு

இலங்கை முழுவதும் ஆடி அமாவாசை வழிபாடு

நீங்கள் எங்கள் தொப்புள்கொடி உறவு தான்!

நீங்கள் எங்கள் தொப்புள்கொடி உறவு தான்!

Mobitel Upahara