Header Logo
SLIC
Rhythams of Lanka
சினிமா
பிரபல ஹாலிவுட் நடிகை 36 வயதில் திடீர் உயிரிழப்பு!

Aug 17, 2026 - 03:42 PM

பிரபல ஹாலிவுட் நடிகை 36 வயதில் திடீர் உயிரிழப்பு!
Mobitel Inner 1278

ஹாலிவுட் நடிகை ஹெய்டன் பனெட்டியரின் உயிரிழப்பு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு வயது 36. 

அவரது மரணத்திற்கான காரணம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. அவர் கடைசி வரை மன உறுதியுடன் இருந்ததாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 

தனது குழந்தை பருவத்திலேயே விளம்பரங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள் மூலம் நடிகையானவர் ஹெய்டன். 

2006 – 2010 வரை ஒளிபரப்பான ஹீரோஸ் என்ற தொலைக்காட்சி தொடரில் கிளேர் பென்னட் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சர்வதேச அளவில் புகழ்பெற்றார். 

'நாஷ்வில்லி' தொடரில் ஜூலியட் பார்னஸ் என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்ததற்காக இருமுறை கோல்டன் குளோப் விருதுகளுக்கு தேர்வானார் 

ரிமம்பர் தி டைட்டன்ஸ், ஐஸ் பிரின்சஸ், ஸ்க்ரீம் 4, ஸ்க்ரீம் 6 போன்ற திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார். 

2009 முதல் 2018 வரை விலாடிமிர் கிளிட்ச்கோ என்ற குத்துச்சண்டை வீரருடன் உறவில் இருந்த அவருக்கு 2014 இல் பெண் குழந்தை பிறந்தது. 

அப்போது பிரசவத்திற்குப் பிந்தைய மன அழுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டார். 

அதிலிருந்து விடுபட மதுப் பழக்கத்திற்கு அடிமையானதை அவர் பின் நாட்களில் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். 

மதுப்பழக்கத்தில் இருந்து மீள்வதகான சிகிச்சை எடுத்துக்கொள்ள தனது மகளை 2018 இல் துணைவர் விலாடிமிர் கிளிட்ச்கோவிடம் ஒப்படைத்தார். 

தனது வாழ்க்கைப் போராட்டங்கள், மனநலப் பாதிப்புகள் மற்றும் அதிலிருந்து மீண்டு வந்த அனுபவங்களைப் பற்றி This Is Me: A Reckoning என்ற பெயரில் சுயசரிதை நூலாக எழுதி வெளியிட்டுள்ளார். 

அவரது திடீர் மறைவு ஹாலிவுட் திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


MOST READ

காணொளி
ரவிகரன் எம்.பிஎம்.பி வலியுறுத்தல்!

ரவிகரன் எம்.பிஎம்.பி வலியுறுத்தல்!

அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் போராட்டம்!

அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் போராட்டம்!

அநுரவிடம், சுரேன் விடுத்த கோரிக்கை!

அநுரவிடம், சுரேன் விடுத்த கோரிக்கை!

பக்தியோடு திரண்ட பக்தர்கள்!

பக்தியோடு திரண்ட பக்தர்கள்!

மனோ அதிரடி!

மனோ அதிரடி!

ஆவணித் திருவிழா திருப்பலி!

ஆவணித் திருவிழா திருப்பலி!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

Mobitel 1278