Aug 17, 2026 - 04:01 PM



தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நடுக்குடா மீன்பிடித்துறையை அண்டிய கடற்கரை பகுதியில் சிதைவடைந்த நிலையில் அடையாளம் காண முடியாத வகையில் ஆண் ஒருவரின் சடலம் மீன்பிடியில் வலையினால் சுற்றப்பட்ட நிலையில் இன்று (17) காலை கரை ஒதுங்கியுள்ளது.
குறித்த கடற்கரை பகுதியில் உள்ள கடற்படையினர் குறித்த சடலத்தை இன்று காலை அவதானித்து தலைமன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில் தலைமன்னார் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று குறித்த சடலத்தை மீட்டுள்ளனர்.
குறித்த சடலம் மீட்கப்பட்ட நிலையில் மன்னார் பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
குறித்த சடலம் தொடர்பாக தலைமன்னார் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

























