Header Logo
SLIC
Rhythams of Lanka
செய்திகள்
வாடகை மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கொலை: பிரதான சந்தேகநபருக்கு விளக்கமறியல்

Aug 18, 2026 - 01:16 PM

வாடகை மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கொலை: பிரதான சந்தேகநபருக்கு விளக்கமறியல்
Mobitel Inner 1278

ஹோமாகம பிடிபன கலகாஹேன பிரதேசத்தில் வாடகை முறையில் மோட்டார் சைக்கிளை ஓட்டும் சாரதி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பிரதான சந்தேக நபர் எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

சந்தேக நபர் நேற்று ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது நீதவான் ரஜீந்திரா ஜயசூரிய இந்த உத்தரவை பிறப்பித்தார். 

ருவன்வெல்ல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 51 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

கடந்த ஜூலை மாதம் 16ஆம் திகதி சந்தேக நபர் வாடகை மோட்டார் சைக்கிள் ஓட்டும் ஒருவரை கழுத்தை அறுத்து கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

கொலை நிகழ்த்தப்பட்ட பின்னர் உடல் கால்வாய் ஒன்றில் வீசப்பட்டதாகவும் பொலிசாரின் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. 

பின்னர் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், இச்சந்தேகநபர் ஓட்டுநரைக் கொலை செய்யப் பயன்படுத்திய ஆயுதத்துடன் மின்னேரியா பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். 

அதன்படி வெளிவந்த தகவல்களின் அடிப்படையில், இக்கொலைக்கு உடந்தையாக இருந்தார் எனக் கூறப்படும் இச்சந்தேகநபரின் மகனொருவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

கொலையைச் செய்த பின்னர் சந்தேகநபர் அந்த ஓட்டுநரின் மோட்டார் சைக்கிள், தலைக்கவசம் மற்றும் ஜாக்கெட் ஆகியவற்றுடன் ஹோமாகம நகரிலுள்ள உணவகம் ஒன்றிற்குச் சென்றிருந்த விதம் பதிவான CCTV காட்சிகளும் பொலிஸ் விசாரணைகளின் போது கண்டறியப்பட்டுள்ளன.


MOST READ

காணொளி
தபால் ஊழியார்களுக்கு Charging bike system கொண்டு வர நடவடிக்கை எதும் எடுத்துள்ளீர்களா?

தபால் ஊழியார்களுக்கு Charging bike system கொண்டு வர நடவடிக்கை எதும் எடுத்துள்ளீர்களா?

Charging bike system கொண்டு வர நடவடிக்கை எதும் எடுத்துள்ளீர்களா?

Charging bike system கொண்டு வர நடவடிக்கை எதும் எடுத்துள்ளீர்களா?

ரவிகரன் எம்.பிஎம்.பி வலியுறுத்தல்!

ரவிகரன் எம்.பிஎம்.பி வலியுறுத்தல்!

அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் போராட்டம்!

அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் போராட்டம்!

அநுரவிடம், சுரேன் விடுத்த கோரிக்கை!

அநுரவிடம், சுரேன் விடுத்த கோரிக்கை!

பக்தியோடு திரண்ட பக்தர்கள்!

பக்தியோடு திரண்ட பக்தர்கள்!

மனோ அதிரடி!

மனோ அதிரடி!

ஆவணித் திருவிழா திருப்பலி!

ஆவணித் திருவிழா திருப்பலி!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

Mobitel 1278