Header Logo
SLIC
Rhythams of Lanka
சினிமா
சின்னத்திரை நடிகர் சாய் சக்தியிடம் பண மோசடி!

Aug 18, 2026 - 04:06 PM

சின்னத்திரை நடிகர் சாய் சக்தியிடம் பண மோசடி!
Mobitel Inner 1278
EDEX Inner

சென்னையைச் சேர்ந்த சின்னத்திரை நடிகர் சாய் சக்தி, தனியார் நிறுவனம் ஒன்று தன்னிடம் 4 லட்சம் ரூபா பண மோசடி செய்ததாக சென்னை பொலிஸ் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். 

சாய் சக்தி அளித்துள்ள புகாரில், IFS இன்டர்நேஷனல் பிஸ்னஸ் நிறுவனம் 4 லட்சம் ரூபா பணம் வழங்கினால், மாதந்தோறும் 28,000 ரூபா வருமானமாக வழங்குவதாக கூறியதாக தெரிவித்துள்ளார். இதனை நம்பி அவர் அந்த நிறுவனத்திடம் 4 லட்சம் ரூபா பணம் வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. 

ஆனால், நிறுவனம் உறுதியளித்தபடி மாதந்தோறும் 28,000 ரூபா வழங்கவில்லை என்றும், இதன் மூலம் தாம் ஏமாற்றப்பட்டதாகவும் சாய் சக்தி தனது புகாரில் தெரிவித்துள்ளார். மேலும், தான் வழங்கிய பணத்தையும் திரும்பப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். 

இதையடுத்து, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுத்து, தாம் இழந்த 4 லட்சம் ரூபா பணத்தை மீட்டுத் தர வேண்டும் என சாய் சக்தி பொலிஸ் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகார் தொடர்பாக பொலிஸ் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


MOST READ

காணொளி
இது விமர்சனம் அல்ல, ஒரு அக்கறை!

இது விமர்சனம் அல்ல, ஒரு அக்கறை!

சர்வதேச விசாரணை ஒன்று தான் தீர்வு!

சர்வதேச விசாரணை ஒன்று தான் தீர்வு!

தபால் ஊழியார்களுக்கு Charging bike system கொண்டு வர நடவடிக்கை எதும் எடுத்துள்ளீர்களா?

தபால் ஊழியார்களுக்கு Charging bike system கொண்டு வர நடவடிக்கை எதும் எடுத்துள்ளீர்களா?

Charging bike system கொண்டு வர நடவடிக்கை எதும் எடுத்துள்ளீர்களா?

Charging bike system கொண்டு வர நடவடிக்கை எதும் எடுத்துள்ளீர்களா?

ரவிகரன் எம்.பிஎம்.பி வலியுறுத்தல்!

ரவிகரன் எம்.பிஎம்.பி வலியுறுத்தல்!

அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் போராட்டம்!

அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் போராட்டம்!

அநுரவிடம், சுரேன் விடுத்த கோரிக்கை!

அநுரவிடம், சுரேன் விடுத்த கோரிக்கை!

பக்தியோடு திரண்ட பக்தர்கள்!

பக்தியோடு திரண்ட பக்தர்கள்!

மனோ அதிரடி!

மனோ அதிரடி!

ஆவணித் திருவிழா திருப்பலி!

ஆவணித் திருவிழா திருப்பலி!

Mobitel 1278