Header Logo
SLIC
Rhythams of Lanka
இந்தியா
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

Aug 20, 2026 - 05:27 AM

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி
Mobitel Inner 1278
EDEX Inner

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

கன்னட மொழி பேசும் குடும்பத்தில் டிசம்பர் 12, 1931-ஆம் ஆண்டு பிறந்த சௌகார் ஜானகி தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடா உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 450-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 

இதுதவிர 300-க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களிலும் அவர் நடித்துள்ளார். 

நடிகை சௌகார் ஜானகி 1959-ஆம் ஆண்டு வெளியான கன்னடா மொழியில் முதல் பான் இந்தியா திரைப்படமான மகிஷாசுர மர்தினியில் நடித்திருந்தார். 

இந்தப் படத்தில் சௌகார் ஜானகி டாக்டர் ராஜ்குமாருடன் நடித்தார். அந்த வகையில், சௌகார் ஜானகி புகழ்பெற்ற பான் இந்தியா நடிகை என்ற அந்தஸ்த்தையும் பெற்றார். 

தெலுங்கு மொழியில் எடுக்கப்பட்ட ஷவுகாரு என்ற திரைப்படத்தில் தான் நடிகை சௌகார் ஜானகி முதன் முதலில் நடித்தார். 

இந்தப் படத்தை இயக்குநர் எல்.வி. பிரசாத் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து தான் இவருக்கு சௌகார் என்ற புனை பெயர் வந்தது. 

இவர் 1952-ஆம் ஆண்டு வெளியான வளையாபதி என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் திரையுலகில் முதன் முதலில் அறிமுகமானமை குறிப்பிடத்தக்கது.

MOST READ

காணொளி
இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

Mobitel 1278