Aug 21, 2026 - 09:56 PM





'டிராகன்ஸ் ஒஃப் ஸ்ரீ லங்கா' (Dragons of Sri Lanka) விருது விழாவில், தெரண ஊடக வலையமைப்பின் இணை நிறுவனமான ஐடியா ஹெல் (IdeaHell) நிறுவனம் தங்க விருதினை வென்றுள்ளது.
அவர்கள் முன்னெடுத்த “சுவ சசுன” (Seat of Care) விளம்பரப் பிரச்சாரத்திற்காகவே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அத தெரண 24 மற்றும் எக்ஸ்ரா (Xtra) ஆகியவற்றுடன் இணைந்து செயற்படுத்தப்பட்ட 'அசாமன்ய பேப்பர்' (Asamanya Paper) விளம்பரப் பிரச்சாரமும் இவ்விருது விழாவில் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.
'டிராகன்ஸ் ஒஃப் ஸ்ரீ லங்கா' விருது விழாவானது, இந்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட விளம்பரப் பிரச்சாரங்களின் சிறப்பினைப் பாராட்டி கெளரவிப்பதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது.

























