Header Logo
SLIC
Rhythams of Lanka
செய்திகள்
ஈரான் மீது கடுமையான பொருளாதார தடை - ட்ரம்ப் எச்சரிக்கை

Aug 20, 2026 - 07:39 AM

ஈரான் மீது கடுமையான பொருளாதார தடை - ட்ரம்ப் எச்சரிக்கை
Mobitel Inner 1278
EDEX Inner

ஈரானின் பொருளாதாரத்தை இலக்காகக் கொண்டு ஒரு புதிய பாரிய நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

அதேநேரம் ஈரானுக்கு உதவும் அல்லது அதனுடன் வர்த்தகம் செய்யும் எந்தவொரு நாட்டுக்கும் கடும் தண்டனை வழங்கப்படும் எனவும் அவர் நேற்று( 19) தெரிவித்தார். 

உடனடியான இராஜதந்திர அல்லது இராணுவ தீர்வுகள் எதுவும் கண்ணுக்குத் தெரியாத நிலையில், போர் அதன் ஆறாவது மாதத்தை நெருங்கும் வேளையிலேயே இந்த தீவிரப்படுத்தப்பட்ட பொருளாதார அழுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

நவம்பர் மாதத் தேர்தல்கள் மிக வேகமாக நெருங்கி வரும் நிலையில், இந்தப் போர் தொடர்பில் ட்ரம்ப் உள்நாட்டிலும் அரசியல் ரீதியான விமர்சனங்களைச் சந்தித்து வருகிறார். 

இது தொடர்பில் ட்ரம்ப் வௌியிட்டுள்ள தகவலில், எந்தவொரு நாட்டிற்கும் எதிராக இதுவரை எடுக்கப்பட்டதிலேயே மிகவும் நசுக்கக்கூடிய பொருளாதார நடவடிக்கையை இன்று நான் அறிவிக்கிறேன்! இது முன்னெப்போதும் இல்லாத அளவிலான பொருளாதாரப் போர் மற்றும் தனிமைப்படுத்தலாக இருக்கும், என்று தனது 'ட்ரூத் சமூக வலை தளத்தில் குறிப்பிட்டுள்ளார். 

ஈரானுக்கு எந்த வகையிலாவது உயிர்நாடியாகச் செயல்படுவதற்குத் தமது நிதி நிறுவனங்கள், வணிகங்கள், விமான நிலையங்கள் அல்லது அரசாங்க நிறுவனங்களை அனுமதிக்கும் எந்தவொரு நாடும் பாரிய பொருளாதார விளைவுகளைச் சந்திக்கும் என்பதையும் நான் அறிவிக்கிறேன், என்று அவர் கூறினார். 

குறித்த நாடுகள் என்ன மாதிரியான தண்டனையை எதிர்கொள்ளும் என்பதை அவர் குறிப்பிடவில்லை, மேலும் ஈரான் தவிர வேறு எந்த நாடும் அவரால் பெயரிடப்படவில்லை. 

ஈரானின் மீது உலகம் இதுவரை கண்டிராத வகையில் பொருளாதாரத் தனிமைப்படுத்தலை அமெரிக்கா விதிக்கும் என திறைசேரி செயலாளர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்து சுமார் ஒரு வாரத்தின் பின்னர் ஜனாதிபதியின் இந்தக் கருத்துக்கள் வெளியாகியுள்ளன. 

ஏவுகணைத் தாக்குதல்களில் சமீபத்தில் தற்காலிக அமைதி நிலவிய போதிலும், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான அமெரிக்க-ஈரான் ஒப்பந்தம் முறிந்ததை அடுத்து, அந்த முக்கிய கடல் வழியூடான கப்பல் போக்குவரத்திற்கு ஈரான் தொடர்ந்து ஒரு வலுவான தடையை விதித்து வருகிறது.


MOST READ

காணொளி
இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

Mobitel 1278