Aug 22, 2026 - 06:50 PM





டுபாயில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினரான லலித் கன்னங்கர என்ற 'பஸ் லலித்', அடுத்த வாரம் இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளார்.
இதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை (24) இரவு அவர் நாட்டிற்கு அழைத்து வரப்படக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
'பஸ் லலித்' கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் டுபாயில் வைத்து கைது செய்யப்பட்டார்.
ரவிந்து சன்க டி சில்வா என்ற "பூருமூணா" மூலமாக 2022 ஆம் ஆண்டு ஹங்வெல்லையில் முஸ்லிம் தொழிலதிபர் ஒருவரையும், 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் திகதி ஹங்வெல்லை நெளுவத்துடுவை பகுதியில் மற்றொரு தொழிலதிபரையும படுகொலை செய்தமை, 2023 இல் மன்னா ரொஷான் மற்றும் அவரது நண்பரை படுகொலை செய்தமை, 2024 இல் ஹங்வெல்லை பகுதியில் வஜிர நிஷாந்த என்பவரையும் மற்றும் படுகொலை செய்யப்பட்ட மன்னா ரொஷானின் சகோதரரையும் படுகொலை செய்தமை, 2025 ஓகஸ்ட் 12 அன்று ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சாந்த முதுன்கொடுவை (பனா மந்திரி) சுட்டுக்கொன்றமை, மற்றும் 2025 ஜூலை 06 அன்று கொடஹெர பொட்டா மற்றும் தெமட்டகொட ருவன் ஆகியோரை கொழும்பில் உள்ள இரவு விடுதி ஒன்றில் வைத்து படுகொலை செய்ய முயன்றமை ஆகிய குற்றச்சாட்டுகள் 'பஸ் லலித்' மீது சுமத்தப்பட்டுள்ளன.

























