Aug 25, 2026 - 06:01 PM





இன்று (25) ரத்மலானை விமான நிலையத்தில் தரையிறங்கும்போது பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
ரத்மலானை விமான நிலையத்தில் இயங்கும் விமானப் பயிற்சிப் பாடசாலை ஒன்றுக்குச் சொந்தமான 'செஸ்னா 152' ரக விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சித்தபோதே குறித்த விமானம் விபத்தைச் சந்தித்துள்ளது.
இந்த விபத்தில் எவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.























