Aug 27, 2026 - 02:37 PM





பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை கங்கனா சர்மா, தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் குறித்து பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார். தனக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டபோது யோகேஷுக்கு ஏற்கனவே திருமணமாகியிருந்தது என்று பிரசவத்திற்கு பின் தான் தெரிந்து கொண்டேன்.
அதன்பின் அவர் தன் முதல் மனைவியை விவாகரத்து செய்தார் அதுமட்டுமில்லாமல், யோகேஷுக்கு மேலும் பல பெண்களுடன் தொடர்பு இருந்ததது, அதன்பின் தான் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்து இறுதியில் யோகேஷிடமிருந்து விவாகரத்து பெற்றதாகவும் கங்கனா தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய கங்கனா, என் அப்பா என்னையும் என் அம்மா, சகோதரியையும் மிகவும் கொடுமையாக அடிப்பார். என் சகோதரியின் திருமணத்திற்குப்பின் அந்த வீட்டில் விபச்சாரம் உள்ளிட்ட சட்டவிரோத செயல்கள் நடப்பது எங்களுக்கு தெரிய வந்தது. அப்போது எனக்கு 14 வயதுதான். ஒருமுறை என் சகோதரியுடன் அவரது கணவர் வீட்டுக்கு சென்றபோது இரவு நேரத்தில் கழிவறைக்கு செல்வதற்காக எழுந்தபோது என் சகோதரியின் வாயில் துணி வைக்கப்பட்டு, கைகள் கட்டப்பட்டிருப்பதை பார்த்தேன். அங்கு நடந்ததை பார்த்து நான் மிகவும் பயந்துவிட்டேன்.
என்னுடைய சகோதரியும் பயந்து என்னிடம் எப்படியாவது தன்னை அந்த வீட்டில் இருது அழைத்து செல்லும்படி கேட்டார். ஆனால் நான் மிகவும் சிறியவளாக இருந்ததால் என்ன செய்வது தெரியவில்லை. பின் என் சகோதரியின் மாமனார் என்னை வீட்டைச் சுற்றி பார்க்க அழைத்து சென்றார். கீழே ஒன்றுக்கும் மேற்பட்ட அறைகள் இருந்தது. அங்கிருந்து சிலர் வெளியே வந்துக் கொண்டிருந்தார்கள்.
இதைப்பார்த்து என் சகோதரி உடனடியாக என்னை அங்கிருந்து அழைத்துக் கொண்டு மேலே வந்துவிட்டார். அதன்பின் நாங்கள் வீட்டுக்கு திரும்பினோம். அந்த வீட்டுக்கு தான் மீண்டும் செல்ல மாட்டேன் என்று என் சகோதரி அப்பாவிடம் கூறினாலும் அப்பா அவரை அடித்தார். அவரது மூக்கில் இருந்து ரத்தம் வந்தது. திருமணமாகிவிட்டதால் அந்த வீட்டில் தான் இருக்க வேண்டும் என்று கூறி அனுப்பி வைத்தார். அதற்குப்பின் ஒரு வாரம் வரை என் சகோதரியை பற்றி எங்களுக்கு எந்த தகவலும் இல்லை என்பதால் தொலைபேசி மூலமாக தொடர்பு கொள்ள முயற்சித்தோம்.
ஒருக்கட்டத்தில் என் சகோதரி அருகிலிருந்த வேறு வீடுகளின் வழியாக கடிதங்களை அனுப்பி, தன்னை எப்படியாவது காப்பாற்றும்படி கேடிருந்தார். பின் அப்பா அங்கு சென்று, என் சகோதரி மிகப்பெரிய மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார். அதன்பின் சுமார் ஒரு வருடம் வரை அவரால் படுக்கையைவிட்டு எழ முடியவில்லை. அவருக்கு போதை மாத்திரைகள் உள்ளிட்ட பல பொருட்கள் கொடுக்கப்பட்டதாக தெரிந்தது.
பின் விவாகரத்து வாங்கினாலும் மீண்டும் அவருக்கு ஒரு நபருடன் திருமணம் செய்து வைத்தார்கள். அந்த திருமணத்திற்கு என் சகோதரி தயாராக இல்லை, ஆனால் அப்பா அவரை கடுமையாக பேசி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தார். திருமணத்திற்குப்பின் என் சகோதரி மிகவும் மோசமான அனுபவங்களை சந்தித்தார். உடல் ரீதியாக, நெருக்கத்தையே நினைத்தால் பயமாக இருக்கு, கொஞ்சம் கால அவகாசம் வேண்டும் என்றார். ஆனால் அவரது வாழ்க்கை அதன்பின்பும் மிகவும் மோசமான நிலைக்கு சென்றது.
சில வருடங்களுக்குள் அவரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு, காசநோய், புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்பட்டதாக பின்னர் தெரிந்தது. ஒரு கட்டத்தில் அவருக்கு சரியாக பார்க்கக்கூட முடியாத நிலை ஏற்பட்டது. அவருக்கு என்னென்ன நடந்தது என்று முழுமையாக எங்களுக்கு தெரியாது. இன்றுவரை என் சகோதரியை என்னால் காப்பாற்ற முடியவில்லை, என்ற குற்ற உணர்ச்சி எனக்குள் இருக்கிறது என்று சகோதரியின் கஷ்டத்தை பகிர்ந்துள்ளார் நடிகை கங்கனா சர்மா.























