Aug 28, 2026 - 06:45 PM





யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காடானது விஷமிகளால் தீயிடப்பட்ட நிலையில், தற்போது பல ஏக்கர் பரப்பளவில் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.
உடனடியாக தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவராவிட்டால் முழுமையான சவுக்கங்காடும் எரிந்து நாசமாகும் அபாய நிலை காணப்படுவதாகப் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் அகஸ்டின் தெரிவித்துள்ளார்.
எனவே, விரைந்து தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து சவுக்கம் காட்டைப் பாதுகாப்பதற்கு உரிய தரப்பினர் உதவிகளை வழங்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது கிராம மக்களும் நலன் விரும்பிகள் பலரும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனினும், தீ தீவிரமாகப் பரவி வருவதால் அதனை உடனடியாகக் கட்டுப்படுத்த முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.























