Aug 31, 2026 - 04:19 PM





மாவனெல்லை, கடோல் பாலம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் நால்வர் காயமடைந்து மாவனெல்லை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (31) பிற்பகல் அரநாயக்க திசையிலிருந்து மாவனெல்லை நகரத்தை நோக்கிப் பயணித்த சிறிய ரக வேன் ஒன்றும், மாவனெல்லை நகரத்திலிருந்து உஸ்ஸாப்பிட்டிய நோக்கி மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் லொறி ஒன்றும் கடோல் பாலத்திற்கு அருகில் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக மாவனெல்லை பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்துடன் தொடர்புடைய டிப்பர் லொறி உரிய அனுமதியுடன் மணல் ஏற்றிச் சென்று கொண்டிருந்துள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
விபத்தில் வானில் பயணித்த நால்வர் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் சிகிச்சைக்காக மாவனெல்லை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் மாவனெல்லை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.























